அதென்ன புதுஸ்ஸா இருக்கே? ஷூட்டிங்கில் ஜெயலலிதாவை பளார் விட்ட பிரபல நடிகர்.. திமுகவை பற்றி பேசினாரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: "திமுக மீதும் தனி ஆர்வம் கொண்டவர் ரவிச்சந்திரன்.. கலைஞர், அறிஞர் அண்ணா மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். திமுக மேடைகளிலும் பேசியிருக்கிறார் ரவிச்சந்திரன்.. திமுகவுக்காக ஓட்டு கேட்டு பிரச்சாரமும் செய்துள்ளார். ஆரம்பத்தில் ரவிச்சந்திரனுக்கு தமிழ் தெரியாது என்றாலும், அதற்கு பிறகு, தமிழ் கற்றுக்கொண்டு, திமுக மேடைகளில் சரளமாக பேசினார்" என்று மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் தெரிவித்துள்ளார்.

King 24X7 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப், மூத்த நடிகர் ரவிச்சந்திரனின் அரசியல் ஆர்வம் குறித்து பேசியிருக்கிறார்..

Television Ravichandran Jayalalitha

அரசியல் ஆர்வம் அதிகம்

"அதில், எம்ஜிஆர், சிவாஜிக்கு நடுவில் இளமையான நடிகர்கள் 2 பேர் தமிழகத்தை கலக்கினார்கள்.. ஒருவர் ஜெய்சங்கர், மற்றொருவர் ரவிச்சந்திரன். இருவருமே பரபரப்பாக இருப்பார்கள்.. பிஸியாக நடித்து கொண்டிருந்தார்கள். இதில், ஜெய்சங்கரைவிட, ரவிச்சந்திரனுக்கு பெண் ரசிகைகள் அதிகம். அவரது ஸ்டைல் அப்போது பலரால் ஈர்க்கப்பட்டது.

மலேசியாவில் கோலாலம்பூரில் பிறந்தவர் ரவிச்சந்திரன் ஐயங்கார் சமூகத்தை சேர்ந்தவர்.. திருச்சியில் தன்னுடைய அக்கா வீட்டில் தங்கி பிஎஸ்சி வரை படித்தார்.. காதலிக்க நேரமில்லை படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி, முதல் படத்திலேயே ரசிகர்களை சம்பாதித்தார்.

குட்டி எம்ஜிஆர் பெயர்

அந்த காலத்திலேயே ரவிச்சந்திரனுக்கு "குட்டி எம்ஜிஆர்" என்று பெயர்.. எம்ஜிஆர் அரசியலில் தீவிரமாக இறங்கியபிறகு, அவர் நடிக்க வேண்டிய பல படங்களில் ரவிச்சந்திரன் நடித்து முடித்தார்..

மூன்றெழுத்து, நான், போன்ற படங்கள் அதுபோல வெளியாகின. மூன்றெழுத்து படத்தில், தி.மு.க என்ற 3 இடத்தில் புதையல் வைக்கப்பட்டிருக்கும்.. இந்த 3 எழுத்தையும் கண்டுபிடிப்பதுதான் கதை.. இதில் எம்ஜிஆருக்கு பதில் ரவிச்சந்திரன் நடித்தார்..

பிஸியான நடிகர் ரவிச்சந்திரன்

தேவர் பிலிம்ஸ், டிஆர் ராமண்ணா இருவரும் எம்ஜிஆரை வைத்து அதிக படம் எடுத்தார்கள்.. எம்ஜிஆர் தீவிர அரசியலில் இறங்கியதுமே, 'குட்டி எம்ஜிஆரை வைத்து நாங்கள் படம் எடுத்து கொள்கிறோம்' என்று இருவரும் சொல்லிவிட்டார்கள்.. எம்ஜிஆருக்காக ஏற்கனவே உருவாக்கப்பட்ட படங்களில் தொடர்ந்து நடித்தார் ரவிச்சந்திரன்.

திமுக மீதும் தனி ஆர்வம் கொண்டவர் ரவிச்சந்திரன்.. கலைஞர், அறிஞர் அண்ணா மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். திமுக மேடைகளிலும் பேசியிருக்கிறார் ரவிச்சந்திரன்.. திமுகவுக்காக ஓட்டு கேட்டு பிரச்சாரமும் செய்துள்ளார். ஆரம்பத்தில் ரவிச்சந்திரனுக்கு தமிழ் தெரியாது என்றாலும், அதற்கு பிறகு, தமிழ் கற்றுக்கொண்டு, திமுக மேடைகளில் சரளமாக பேசினார்.

ஜெயலலிதா குமரிப்பெண் ஷூட்டிங்

ஆனால், முழுநேர அரசியலுக்குள் நுழையவில்லை.. காரணம், அதிக படங்களில் வாய்ப்புகள் வந்துகொண்டே இருந்ததால் அரசியலில் இறங்கவில்லை.. அதேசமயம் திமுக மீதான அபிமானத்தில், பிரச்சாரம் செய்வதாக கூறியிருக்கிறார்.

குமரிப்பெண் ஷூட்டிங்கில், திமுகவை எதிர்த்து ஜெயலலிதா திட்டி பேசியதால், நிஜமாகவே கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டாராம்.. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயலலிதா கோபத்தில் ஏதோ பேச, பதிலுக்கு இவரும் பேச, பிறகு அந்த விஷயம் அங்கேயே முடிந்துவிட்டதாகவும், ஜெயலலிதா இந்த விஷயத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் சொல்வார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+