பிக் பாஸ்க்கு பிறகு ரச்சிதா பற்றிய ரகசியத்தை உடைத்த தினேஷ்.. அடுத்த வாழ்க்கை! இனி இதுதான் முடிவாம்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த தினேஷ் இந்த நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு முதல் முறையாக பேட்டிகளில் பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது ரச்சிதாவை பற்றி பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் கலந்து கொண்டது ரச்சிதாவிற்காகத்தான் என்று தினேஷ் பல இடங்களில் சொல்லி இருந்தார்.
இந்த நிலையில் வெளியே வந்ததும் ரச்சிதா தன்னைப் பற்றி என்ன மாதிரி எல்லாம் பதிவு வெளியிட்டிருந்தார் என்பதை புரிந்து கொண்டு தினேஷ் பல விஷயங்களை ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார். அது பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்க்கலாம்.
அந்த வகையில் சின்னத்திரை தம்பதிகளான ரச்சிதா மற்றும் தினேஷ் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டிருந்தாலும் இருவருக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக பிரிந்து இருக்கின்றனர். இந்த நிலையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார்.

அவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பும் சரி நிகழ்ச்சியில் இருக்கும் போதும் சரி, நான் டைட்டில் ஜெயித்து அதை ரச்சிதாவிடம் கொடுத்து தன்னுடைய காதலை வெளிப்படுத்துவேன் என்று பல இடங்களில் பேசிக் கொண்டிருந்தார். ஆனால் வெளியே ரச்சிதா தினேஷுக்கு மறைமுகமாக தாக்கும் வகையில் பல கமாண்ட் கொடுத்துக் கொண்டிருந்தார். அதோடு தினேஷை எதிர்த்து கொண்டு இருந்த விசித்திராவிற்கு தன்னுடைய ஆதரவையும் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததும் வெளியே வந்த தினேஷ் முதல் முறையாக பேட்டி ஒன்றில் ரச்சிதா பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார். அதில் நான் உள்ளே போகும்போது எப்படியாவது என்னுடைய வாழ்க்கை சரியாகிவிடும் என்று தான் நினைத்திருந்தேன். டைட்டில் ஜெயித்து நம்ம வாழ்க்கையை மீண்டும் தொடரலாம் என்று நான் ஆசையோடு உள்ளே போனேன். ஆனால் வெளியே வந்து பார்த்தால் எந்த இடத்தில் இருந்ததோ அந்த மாதிரி தான் இருக்கிறது.
இதற்கு மேலும் ரச்சிதா மனம் மாறுவார் என்று சொல்ல முடியவில்லை. ரச்சிதா ஒரு சுவற்றை எழுப்பி அந்த சுவற்றுக்குள்ளேயே இருந்து கொண்டிருக்கிறார். அது என்னால் உடைக்க முடியாத வகையில் வலுவாகி கொண்டே இருக்கிறது. இதற்கு மேலே இனி நான் அடுத்த வாழ்க்கையை நோக்கி பயணத்தை தொடர போகிறேன் என்று அந்த பேட்டியில் தினேஷ் பேசி இருக்கும் நிலையில் இதற்கு ரசிகர்கள் இப்போது நீங்கள் எடுத்து இருக்கிற முடிவு சரியானது.
இதையே பாலோ பண்ணுங்க, தயவு செய்து உங்களை வேண்டாம் என்று நோ சொல்றவங்களை மீண்டும் மீண்டும் அவர்களோடு சேர வேண்டும் என்று நினைக்காதீங்க என்று அட்வைஸ் செய்து கொண்டிருக்கின்றனர். அதோடு நான் நினைத்துப் போன விஷயம் எனக்கு பிக்பாஸுக்குள் நடக்கவில்லை.

ஆனால் மக்கள் நான் எதிர்பார்க்காத அளவிற்கு எனக்கு பாசத்தை கொடுத்திருக்கிறார்கள். அது எனக்கு ரொம்பவே சந்தோஷம். இப்போது நான் வீட்டு வாசலில் சும்மா நின்னா கூட அந்த பக்கமாக காரில் போகிறவர்கள் திரும்பி வந்து என்னிடம் தம்பி நல்லா இருக்கியா? என்று கேக்குறாங்க இது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு என்று அந்த பெட்டியில் தினேஷ் கூறியிருக்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications