மனோஜ் சவப்பெட்டி மீது ஏறி.. மோசமான செயல்! இதெல்லாம் தப்புங்க! பிரபலம் கோபம்
சென்னை: கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு நடிகரும் இயக்குனருமான மனோஜ் பாரதிராஜா மாரடைப்பு காரணமாக காலமானார். அவருடைய இறப்புக்கு காரணம் மன அழுத்தம் என்று பலரும் கூறி வந்தனர். ஆனால் அது எல்லாம் காரணம் கிடையாது என்று இயக்குனர் பேரரசு கூறியிருக்கிறார். அதோடு மனோஜ் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் ஏறி சிலர் செய்த செயல் குறித்து பிரபலம் ஒருவரும் வருத்தமாக பேசி இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் பெரும் புரட்சியை செய்த பாரதிராஜாவின் ஒரே மகனான மனோஜ் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு காலமானார். 48 வயதில் மாரடைப்பால் அவர் காலமான செய்தி சின்னத்திரையில் வருத்தத்தில் ஆழ்த்தியது. அவர் குறித்து பல நினைவுகளை அவரோடு பழகிய பலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

எதிர்பாராத சம்பவம்
மதிய உணவு சாப்பிட்டு விட்டு படுத்தவர் வெகுநேரமாகியும் எழவில்லை என்று பார்த்தபோதுதான் மனோஜ் மரணம் அடைந்த செய்தியே குடும்பத்தினருக்கு தெரிய வந்திருக்கிறது. மனோஜ்க்கு கடந்த மூன்று வாரங்களுக்கு முன்புதான் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. அந்த சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டு வீட்டிற்கு வந்து சில நாட்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.
மனோஜின் இறப்பு செய்தி
அதுபோல மனோஜ் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு மருத்துவ செக் அப்புக்கு போயிருந்த போது கூட அவருக்கு எல்லாம் நார்மலாக இருக்கிறது என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனாலும் அவர் திடீரென இறந்தது அவருடைய குடும்பத்தினரை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தி இருந்தது.
மனோஜ் பேசிய கடைசி பேட்டி
அதே நேரத்தில் மனோஜ் சின்ன வயதிலிருந்து இயக்குனராக வேண்டும் என்ற கனவோடு இருந்தார். ஆனால் அவருடைய அப்பாவின் விருப்பத்தால் நடிகராக மாறிவிட்டார். நான் ஒரு படத்தை இயக்க வேண்டும் என்ற கனவோடு பல வருடங்களாக இருப்பதாக பல பேட்டிகளில் பேசி இருந்தார். ஆனால் அவருக்கு இயக்குனராக வெற்றி கிடைக்கவில்லை என்ற வருத்தம் இருந்ததால் தான் அவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டு இதய நோய் வந்த காரணம் என்று சிலர் பேசி வந்தனர்.
இயக்குனர் பேரரசு கருத்து
இதுகுறித்து இயக்குனர் பேரரசு தன்னுடைய கருத்தை தெரிவித்திருக்கிறார். அதில் மனோஜ் பாரதிராஜா மன அழுத்தத்தில் இறந்துட்டாருன்னு பலரும் சொல்றாங்க. அதில் உண்மை இல்லை. மனோஜ் மன உளைச்சலில் இறந்தார் என்று பேசிக் கொண்டிருப்பவர்களிடம் வந்து நான் மன உளைச்சலில் இருக்கிறேன் என்று சொன்னாரா? நான் மனோஜின் அப்பா ஆபிசுக்கு அடிக்கடி போவேன் அங்கு மனோஜ் தான் உட்கார்ந்து இருப்பார். அவர் எப்போதும் சிரித்த முகமாகவே இருப்பார். அவருடைய மறைவுக்கு உடல்நிலை காரணமே தவிர மனநிலை அல்ல. தேவையில்லாமல் பழி சுமத்த கூடாது என்று கூறியிருக்கிறார்.
பிரபலம் வருத்தம்
அதுபோல மனோஜ் இறந்துவிட்டார் என்ற செய்தியை கேட்டதும் அங்கு சூர்யா போயிருந்தார். அப்போது சூர்யா பாரதிராஜாவிடம் ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கும் போது அதை வீடியோ எடுக்க வேண்டும் என்று சிலர் மனோஜ் உடல் வைக்கப்பட்டு இருக்கும் பெட்டியின் மீது படுத்து வீடியோ எடுத்து இருக்கிறார்கள். இதுவெல்லாம் எவ்வளவு மோசமானது தெரியுமா? அடுத்தவர்களின் கஷ்டத்தை கூட காசு பார்க்க வேண்டும் என்று சிலர் அநாகரிகமாக நடந்து கொள்கிறார்கள், மதியம் வரைக்கும் சாப்பிட்டுவிட்டு தூங்கியவர் உயிர் இல்லாமல் இருக்கிறார். அந்த வருத்தத்தில் குடும்பமே அழுது கொண்டிருக்கும் போது சிலர் அங்கு வீடியோ எடுக்கிறேன் என்கிற பெயரில் அநாகரிகமாக நடந்து கொண்டனர் என்று பிரபலம் ஒருவர் வருத்தம் தெரிவித்து இருக்கிறார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications