எனக்கு பொய் சொன்னா இருமல் வரும்.. ஆனால், டாக்டர் பட்டம் வாங்கிய "அட்லீ” மேடையில் சொன்ன வார்த்தை
சென்னை: இயக்குனர் அட்லீக்கு இன்று சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் சார்பாக "கௌரவ டாக்டர்" பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது. பட்டத்தை வாங்கியதும் மைக்கில் பேசும்போது, எனக்கு பொய் சொன்னா இருமல் வரும் என்று சொல்லி தன்னுடைய அருமை பெருமைகள் எல்லாம் சிரித்தப்படியே அட்லீ பேசி இருந்தார். அட்லீக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
இயக்குனர் சங்கரின் வெற்றி படங்கள் பலவற்றில் உதவி இயக்குனராக இருந்த அட்லீ இன்று பலருடைய கவனத்தைப் பெரும் இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவர் ஒரு சில திரைப்படங்களை இயக்கி இருந்தாலும் எல்லா திரைப்படமும் அவருக்கு பெயர் வாங்கி கொடுத்திருக்கிறது. அட்லீ இயக்கிய முதல் படமான ராஜா ராணி திரைப்படமே அவருக்கு பெரிய அளவில் வெற்றியை கொடுத்தாலும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தி இருந்தது. இந்த திரைப்படம் நடிகர் மோகன் நடித்த மௌனராகம் திரைப்படத்தின் காஃபி தான் என்று பலர் கூறியிருந்தனர்.

இயக்குனர் அட்லீக்கு டாக்டர் பட்டம்
அதேபோல அவர் இயக்கிய தெறி உட்பட பல படங்களும் காஃபி என்ற சர்ச்சையில் சிக்கி வந்தது ஆனாலும் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் அடுத்தடுத்து திரைப்படங்களை இயக்கி வெற்றிகொண்டிருக்கும் அட்லீக்கு இன்று சத்யபாமா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் கொடுத்து கௌரவித்திருக்கிறது. ஜூன் 14, 2025 அன்று நடைபெற்ற இந்த விழாவில் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவில் உலக அளவில் தந்த தாக்கத்தை மதிப்பீடு செய்து அட்லீக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
பட்டமளிப்பு விழா
சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் இந்த ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. இந்த சினிமா துறையில் சாதனை படைத்ததற்காக அட்லீக்கு பட்டம் வழங்கப்பட்டது. சத்யபாமா பல்கலைக்கழகம் கடந்த 18 ஆண்டுகளாகவே அறிவியல், தொழில்நுட்பம், கலை, இலக்கியம், விளையாட்டு என அனைத்து துறைகளிலும் சாதனையாளர்களை தேர்வு செய்து பட்டம் வழங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த மாதமே அட்லீ தேர்வு செய்யப்பட்டிருந்தார். அப்போது சிலர் விமர்சனங்கள் செய்தனர். ஆனாலும் அதை எல்லாம் கண்டு கொள்ளாத அட்லீ இன்று டாக்டர் பட்டம் வாங்கியதும் பேசிய பேட்டி தான் இணையத்தில் வைரல் ஆக வருகிறது.
பிகில் ராயப்பன்
அதில், இந்த தருணம் தனக்கு மிகவும் எமோஷனலாக இருப்பதாக கூறியிருந்தார். பொதுவாகவே நான் செய்யும் படங்களை அங்கிருந்து எடுத்து வந்தேன், இங்கிருந்து எடுத்து வந்தேன் என்று சிலர் சொல்வார்கள். நான் உண்மையை சொல்கிறேன் என் வாழ்க்கையில் நான் பார்த்த விஷயங்களை தான் படமாக எடுப்பேன். உதாரணத்திற்கு பிகில் படத்தில் வரும் ராயப்பன் கதாபாத்திரம் சேப்பியாரை பார்த்து உருவாக்கியதுதான்.
பார்த்து வியந்த மனிதர்
ஜேப்பியார் படிப்புக்கு நிறைய உதவி செய்திருக்கிறார் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் அதை எல்லாம் தாண்டி அவர் விளையாட்டுக்காக நிறைய விஷயங்களை செய்து உள்ளார். சத்தியபாமா கல்லூரியில் தான் முதலாம் ஆண்டு படித்த போது குறும்படம் எடுக்க வேண்டும் என்று சொன்னேன் அப்போது ஜேப்பியரை சந்திக்க சொன்னார்கள் அவரிடம் பொய் சொன்னதும் அவர் கேமரா எடுத்துக்கோ சீக்கிரம் டைரக்டர் ஆகிடுன்னு சொன்னாரு. அவர் சொன்ன வார்த்தை நினைவானது.
பொய் சொன்னால் இருமல்
நான் டைரக்டர் ஆகும்வரை என் அப்பா அம்மா என்னை பார்த்துக் கொண்டார்கள் என்றால் அதிலிருந்து இன்று நான் என்னவாக இருக்கிறேன் என்பதற்கு என் மனைவி தான் காரணம். நான் ஒரு நல்ல மனுசனா மாறியதற்கு முக்கிய காரணம் என்னுடைய மகன். இது தவிர என் அண்ணன் தம்பி பெயரை சொன்னால் தெறிச்சிடுவீங்க. அதுபோல நான் எப்போதும் பொய்யே சொல்ல மாட்டேன் பொய் சொன்னால் எனக்கு இருமல் வந்துவிடும் என்று சொல்லிவிட்டு தான் காலேஜில் படிக்கும் போது கோல்ட் மெடலிஸ்ட், அதிகமாக மார்க் வாங்கும் பையன் என்று இருமியபடியே சொல்லி இருந்தார். அதைக் கேட்டு அரங்கத்தில் இருந்த அனைவருமே சிரித்திருந்தனர்.
-
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications