Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கார்த்திக் கிட்ட பணம் போனா திரும்ப வராது!" 5 கிளாஸ்ல ஒரே நேரத்துல ட்ரிங்ஸ்! விஜயகாந்தையே கூலாக்கிய நடிகர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 90களோட ஃபேவரைட் ஹீரோ, நவரச நாயகன் கார்த்திக் நடிகர் முத்துராமனோட மகன்னு ஒரு சினிமாப் பின்னணி இருந்தாலும், தன் நடிப்புத் திறமையால மட்டும்தான் ஒட்டுமொத்தத் திரையுலகத்தையும் தன்னோட கால்ஷீட் வாங்க வைக்கிற அளவுக்கு உச்சத்துக்குப் போனவர் அவர். ஆனா, அவர் எவ்வளவு திறமையான நடிகரோ, அதே அளவுக்குச் ஷூட்டிங்குக்கு ஒழுங்கா வர மாட்டார்; அலட்சியமா இருப்பார்ங்கிறப் பெரிய விமர்சனமும் அவர் மேல எப்பவுமே இருந்தது.

அந்தச் சமயம் கார்த்திக் பண்ண சேட்டைகள் மற்றும் அவருடையச் சுவாரசியமானச் சம்பவங்கள் பற்றி, இயக்குநரும் நடிகருமான பாரதி கண்ணன் சமீபத்துல ஒருப் பேட்டியில பேசியிருக்காரு.

Karthik Bharathi Kannan Vijayakanth

சிங்கிள் டேக் ஆர்ட்டிஸ்ட்

கார்த்திக் ரொம்ப சிறந்த நடிகர்னு பேர் எடுத்தவர். எந்தக் கேரக்டரைக் கொடுத்தாலும், அதைச் சில நிமிடங்களிலேயே உள் வாங்கிச் சூப்பராப் பண்ணிடுவாராம். அதனாலயே அவருக்கு 'சிங்கிள் டேக் ஆர்ட்டிஸ்ட்'ன்னு ஒரு பட்டமும் இருந்தது. அப்பா பெரிய நடிகரா இருந்தாலும், இவரைப் பாரதிராஜா தான் 'அலைகள் ஓய்வதில்லை' படம் மூலமா ஹீரோவா அறிமுகப்படுத்தினார்.

சொகுசு வாழ்க்கை

வசதியோடப் பிறந்ததால, வீட்ல எப்படிச் சொகுசாக்; தான் நினைச்சதை நினைச்ச நேரத்துல செஞ்சாரோ, அதேப் பாணியைத்தான் தன் சினிமாத் தொழில்லயும் அவர் கடைப்பிடிச்சாராம். எப்போ தோணுதோ அப்போதான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வருவார்!

இயக்குநர் பாரதி கண்ணன் பேட்டி

பாரதி கண்ணன், கார்த்திக்கை வைத்து படம் பண்ண போனபோது நடந்தச் சம்பவத்தைச் சொல்லியிருக்கார். "கார்த்திக்கைச் சந்திச்சு கதை சொல்லப் போனப்போது, 5 லட்சம் ரூபாய் அட்வான்ஸோட தான் போனேன். அவர் என்னைப் பார்த்ததும், 'பொதுவாப் பணத்தை நான் கையில தொடுவது இல்ல; அப்பா ஃபோட்டோவுல வெச்சுடுங்க'ன்னு சொன்னாரு."

அப்புறம் தன்னோடக் கழுத்துலப் போட்டிருந்தச் செயினைத் தொட்டுப் பார்த்துட்டு, "இந்தப் படம் நல்லா வரும்"னு ஒரு ஆரூடம் சொல்லி, "திங்கட்கிழமைக்கு மேல ஊட்டியில் இருப்பேன், அங்க வந்து கதை சொல்லுங்க"ன்னு சொல்லியிருக்காரு. அப்புறம் ரெண்டு நாள் கழிச்சு போன் செய்து இன்னும் ஒரு அஞ்சு லட்சம் கிடைக்குமான்னு கேட்டாரு நானும் கொண்டு வரேன்னு சொன்னேன் பிறகு புரொடியூசரிடம் சொல்லி அவரிடம் 5 லட்சம் பணத்தை வாங்கிட்டு ஊட்டிக்கு போனேன். அங்கக் கார்த்திக் தங்கியிருந்த இடத்துக்குப் போனப்போ, டேபிள்ல அஞ்சு கிளாஸ்கள்ல ஒரே நேரத்துல ட்ரிங்ஸ் (மறைமுகமாகக் குறிப்பது) ஊத்தி, அடுத்தடுத்துக் குடித்தாராம்.

விஜயகாந்த் பண்ண பஞ்சாயத்து

கதை சொன்னப்புறம், "இந்தக் கதையில ரத்தம் கொட்டுது; கதையை மாற்றலாமே"ன்னு கார்த்திக் சொல்லி, பாரதி கண்ணனை வெறுப்பேத்தி இருக்காரு. இதற்கிடையே, தயாரிப்பாளர் இவரைப் பத்தி விசாரிச்சுட்டு, பணத்தை வாங்கிட்டு வந்துடச் சொல்லிட்டாராம். பாரதி கண்ணன் போய்க் கார்த்திக் கிட்ட, "தயாரிப்பாளர் மனம் மாறிட்டார்; பணத்தைத் திருப்பிக் கேக்கிறார்"னு சொன்னப்போ, கார்த்திக் சிரிச்சுக்கிட்டே, "பாரதி, இந்தக் கார்த்திக் கிட்ட பணம் வந்தா, மீண்டும் வராதுன்னு இண்டஸ்ட்ரிக்கேத் தெரியுமே"ன்னு சொல்லிட்டுப் போயிட்டாராம்.

7 தயாரிப்பாளர்கள்

இதே மாதிரி இன்னும் ஆறு தயாரிப்பாளர்கள் பணத்தைக் கொடுத்திருந்தாங்க. இந்தப் பிரச்சனை அப்போ நடிகர் சங்கத் தலைவரா இருந்த கேப்டன் விஜயகாந்த் கிட்டப் போயிருக்கு. பஞ்சாயத்துக்கு வந்த கார்த்திக், "இன்னைக்கு எல்லாத்தையும் க்ளியர் செய்கிறேன் கேப்டன்"னு சொல்லிட்டு, தன்னோட உதவியாளர் கிட்ட ஒரு பையை எடுத்துட்டு வரச் சொன்னாராம். எல்லாரும் பணத்தை எடுப்பார்னு பார்த்தா, அதுல இருந்து ஒரு வெள்ளைச் சீட்டை எடுத்து 7 பேருக்கும் தேதி எழுதிக் கொடுத்தாராம்!

விஜயகாந்தை சமாளித்தவர்

தயாரிப்பாளர் காஜா மைதீன் கடுப்பாகிச் சேரை எடுத்து அடிக்கப் பாய்ஞ்சப்போ, கார்த்திக் கூலாக, "பாய் கூல் பாய். நான் பணம் கொடுப்பேன் என்று சொல்லவில்லை. நீங்கள் என்னிடம் தேதி கேட்டீர்கள்; தேதி கொடுக்கிறேன்"ன்னு சொன்னாராம்!. இப்படித் தனித்துவமான கேரக்டரா இருந்த கார்த்திக், மிகச் சிறந்த திறமைசாலிதான். ஆனா, அவரோட அலட்சியத்தால அவரேதான் தன்னோட கரியரைக் கெடுத்துக்கிட்டார்னு பாரதி கண்ணன் வேதனையோடப் பேசியிருக்கார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+