வெற்றிக்கொடிகட்டு படம் ஞாபகம் இருக்கா? 12 நாளில் நடந்த அதிசயம்! பலருக்கு பாடம்! சேரன் சொன்ன சீக்ரெட்
சென்னை: இயக்குனர் சேரன் இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டில் வெற்றிக்கொடிகட்டு திரைப்படம் வெளியானது இந்த திரைப்படத்தில் நடிகர் முரளி, பார்த்திபன், வடிவேலு, சார்லி, விஜயகுமார், மீனா, மாளவிகா, மனோரமா என்று பலர் நடித்திருப்பார்கள். இந்த திரைப்படத்தின் கதை 12 நாளில் எழுதப்பட்டது என்று இந்த திரைப்படம் உருவான விதம் பற்றியும் சேரன் பேசியிருக்கிறார்.
ஒரு சில திரைப்படங்கள் எதார்த்தத்தை அப்படியே பிரதிபலிக்கும். அந்த திரைப்படங்கள் காலங்கள் போனாலும் மக்கள் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும். அந்த வரிசையில் ஒரு படம்தான் வெற்றிக்கொடிகட்டு திரைப்படம். இந்த திரைப்படம் 2000 ஆண்டில் வெளியானது. இதை பார்த்து பலர் கண் கலங்கி அழுது இருப்பார்கள். ஒரு சிலருக்கு இந்த திரைப்படம் தங்களுடைய வலியை அப்படியே வெளிப்படுத்தும் விதமாகவும் இருக்கும். இந்த திரைப்படத்தில் கதைக்கலம் காமெடி நிறைந்த வாழ்க்கை பாடம் தான்.

பொதுவாக ஒரு சிலர் நம்ம ஊரை விட வெளிநாட்டில் சென்று வேலை பார்த்தால் அதிகமாக சம்பாத்தியம் செய்துவிடலாம் என்ற எண்ணம் அந்த காலத்தில் இருந்து இப்ப வரைக்கும் பலருடைய மனதில் இருக்கிறது. குடும்ப கஷ்டம் காரணமாக எப்படியாவது கஷ்டப்பட்டு தன்னுடைய குடும்பத்தை மேலே கொண்டு வந்து விட வேண்டும் என்ற ஆர்வம் பலருக்கு இருக்கிறது. ஆனால் ஒரு சிலர் படித்து வெளிநாட்டிற்கு செல்கின்றனர் அவர்களுக்கு சில நேரங்களில் நல்ல வேலை கிடைத்து விடுகிறது.
ஆனால் படிக்காமல் வேலை சொந்த ஊரில் சரியான வேலை எதுவும் இல்லாமல் தன்னுடைய குடும்பத்திற்காகவும், சுய கௌரவத்திற்காகவும் வேலை வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும் என்று கடன் வாங்கி புரோக்கர்களிடம் கொடுத்து ஏமாந்து போயிருக்கிறார்கள். ஒரு சிலர் வெளிநாட்டிற்கு சென்றும் அங்கு பல்வேறு வேதனைகளை அனுபவித்து இருக்கிறார்கள். இதைத்தான் சமீபத்தில் கூட நடிகர் "பிருத்திவிராஜ்" நடித்த "ஆடு ஜீவிதம்" திரைப்படத்தில் கூட வெளிநாட்டிற்கு சென்று படிக்காத இளைஞர் பட்ட கஷ்டத்தை பார்த்திருக்கலாம்.
ஆனால் இதற்கு 24 வருடங்களுக்கு முன்பே வெளிநாட்டிற்கு போக வேண்டும் என்று கடன் வாங்கி இரண்டு இளைஞர்கள் பட்ட கஷ்டம், அதற்கு பிறகு அவர்களின் மனமாற்றம் வெற்றிக்கொடிகட்டு திரைப்படத்தில் பார்த்திருப்போம். அந்த திரைப்படம் உருவான விதம் குறித்து சேரன் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அதில், ஒரு முறை முரளியிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது முரளி நானும் பார்த்திபனும் சேர்ந்து நடித்தால் எப்படி இருக்கும் என்று என்னிடம் கேட்டார். அதற்கு நன்றாகத்தான் இருக்கும் என்று நான் சொன்னேன்.

அதற்கு ஒரு கதையை ரெடி பண்ணுங்க என்று முரளி என்னிடம் சொன்னார். அப்போ தான் நான் என்னுடைய ஊரில் சிலர் ஊரில் சரியான வேலை இல்லை என்பதால் வெளிநாட்டிற்கு போக வேண்டும், கவுரவமாக வாழ வேண்டும் என்று கடனை வாங்கிக் கொண்டு வெளிநாட்டிற்கு சென்று பிறகு பல வருடங்கள் அங்கு கஷ்டப்பட்டு வீட்டிற்கு திரும்பி வரும்போது அவருடைய சொந்த பிள்ளைகள் கூட அவரை தெரியாமல் இருப்பதை என் கண்ணால் நானே பார்த்ததேன்.
அதுபோல ஒரு சிலர் கடன் வாங்கி, மனைவியின் நகைகளையும் விற்று வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும் என்று புரோக்கர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாந்து அவர்கள்பட்ட வேதனைகளையும் நான் பார்த்தேன். அதை வைத்து ஒரு படத்தை எடுக்கலாம் என்று முடிவு செய்தேன். அதுவரைக்கும் நான் இரண்டு நடிகர்களுக்கு கதை எழுதியது கிடையாது. இந்த திரைப்படத்தில் பார்த்திபன் மற்றும் முரளி இருவரும் நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்ததும் இவர்களோடு வடிவேலுவையும் சேர்க்க வேண்டும் என்று நினைத்தேன்.
ஏற்கனவே நான் எழுதிய பாரதிகண்ணம்மா திரைப்படத்தில் வடிவேலு நடித்திருந்தார். அது அவருக்கு நல்ல ஒரு பிரபலத்தை கொடுத்தது. அதனால் அவரை இந்த திரைப்படத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றுதான் முடிவெடுத்தேன். படத்திற்கான கதையை 12 நாட்களில் எழுதி முடித்து விட்டேன். 12 நாட்களும் ஒரு தனி உலகத்தில் நான் இருப்பது போலத்தான் இருந்தேன்.

என் அரை வாசலில் சாப்பாடை மட்டும் வைத்துவிட்டு சென்று விடுங்கள் என்று சொல்லிவிடுவேன். வேறு எதைப் பற்றியும் நான் நினைத்ததே கிடையாது. படம் வெளியான பிறகு அது பற்றி எல்லோரும் பாராட்டினார்கள் அதே நேரத்தில் பலர் தாங்கள் வெளிநாட்டுக்கு போக வேண்டும் என்று இருந்தோம் இப்போது சொந்த ஊரிலேயே பிசினஸ் தொடங்கி விட்டோம் என்று சொன்னது தான் எனக்கு வெற்றியாக இருந்தது என்று அந்த பேட்டியில் சேரன் பேசி இருக்கிறார்.
மகன்களுக்காக பொறுமையாக இருக்கிறேன்! பாடகியுடன் தொடர்பா? வெளிப்படையாக பேசிய ஜெயம் ரவி
வெற்றிக்கொடிகட்டு திரைப்படத்தில் இடம் பெற்ற அத்தனை பாடல்களும் இப்ப வரைக்கும் 90 கிட்ஸ்களின் எவர்கிரீன் பாடல்களாக இருக்கிறது. அந்த திரைப்படத்தில் மீனா, மாளவிகா, மனோரமா என எல்லோரும் கிராமத்து வாழ்க்கையை வெளிக்காட்டி இருப்பார்கள். ஆனால் இவர்கள் எல்லாருடைய நடிப்பையும் விட ஒரு காட்சியில் சார்லியின் எக்ஸ்பிரஷன் மற்றும் நடிப்பு இப்ப வரைக்கும் பேசப்படுகிறது.
அதாவது சார்லி வெளிநாட்டுக்கு போக வேண்டும் என்று பணத்தை கொடுத்து ஏமாந்த புரோக்கர் பற்றிய தகவல் கிடைத்துவிட்டது என்று ஊரில் சொல்ல வந்த இடத்தில் அங்கு பார்த்திபனும் முரளியும் மாறி மாறி நடித்துக் கொண்டிருப்பதை தெரிந்துகொண்டு அவரும் தனக்கு பைத்தியம் பிடித்து விட்டது போல நடித்துக் கொண்டு ஒரு பத்து ரூபாய் இருக்கா என்று கேட்பார். அந்த காட்சி படத்தைப் பார்த்தவர்களின் மனதில் இப்போதும் நிலைத்திருக்கும். அதுபோல வெற்றி கொடி கட்டு திரைப்படத்தில் உங்களுக்கு பிடித்த காட்சிகள் என்ன?.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications