கோலாகலமாக நடந்த இயக்குனர் “சேரன்” மகள் திருமணம்.. மாப்பிள்ளை இந்த பிரபலம் தானா?
சென்னை: இயக்குனராகவும் நடிகராகவும் பிரபலம் அடைந்த சேரனின் மூத்த மகள் நிவேதா பிரியதர்ஷினிக்கு நேற்று பிரமாண்டமாக திருமணம் நடைபெற்று இருக்கிறது. இந்த திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கின்றனர்.
இயக்குனர் சேரன் மகள் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிகமான வாழ்த்துக்களை பெற்று வருகிறது.

சமீபத்தில் ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து பல பிரபலங்கள் வீட்டில் திருமண கொண்டாட்டம் தொடங்கி இருக்கிறது. நடிகர் ரோபோ சங்கர் மகளின் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இது இணையத்தையே புரட்டி போட்ட நிலையில் அதை தொடர்ந்து இயக்குனர் சங்கரின் மகளின் இரண்டாவது திருமணமும் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. அந்த வரிசையில் இப்போது இயக்குனர் சேரனின் மகள் நிவேதா பிரியதர்ஷினி திருமணமும் இணைந்திருக்கிறது.
இயக்குனர் சேரன் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்தான். அவருடைய மனைவியின் பெயர் செல்வராணி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். மூத்த மகள் நிவேதா பிரியதர்ஷினி. இரண்டாவது மகள் பெயர் தாமினி. இந்த நிலையில் மூத்த மகள் நிவேதாவிற்கு நேற்று "சுரேஷ் ஆதித்யா" என்பவரோடு பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்திற்கு ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக சேரன் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் பல திரைப்படங்களில் நடிகராகவும் நடித்திருக்கிறார். இவர் இயக்கிய திரைப்படங்கள் அதிகமாக குடும்ப கதையை மையமாக கொண்டதாக இருக்கிறது.
அதே நேரத்தில் இவர் "சொல்ல மறந்த கதை", "தவமாய் தவமிருந்து", "பொக்கிஷம்", "ராமன் தேடிய சீதை" போன்ற திரைப்படங்களில் நடித்தும் இயக்கியும் இருக்கிறார். இதை தொடர்ந்து சமீபத்தில் சேரன் நடிப்பில் ஆனந்தம் விளையாடும் வீடு என்ற திரைப்படத்தை வாரீர் ஃபிலிம் தயாரித்திருந்தது. இந்த திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் கௌதம் கார்த்திக் நடித்திருந்தார்.

சினிமாவில் மட்டுமல்லாமல் சின்னத்திரையும் விட்டு வைக்காத சேரன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் சேரன் கலந்து கொண்ட போது அவருடைய சக போட்டியாளராக இருந்த லாஸ்லியாவிற்கு அப்பாவாகவே அந்த நிகழ்ச்சியில் இருந்தார். அதே நேரத்தில் சேரனின் மூத்த மகள் ஒரு நபரை காதலித்து அந்த நபரோடு வீட்டை விட்டு வெளியேறியதால் சேரன் பெரும் போராட்டம் செய்து அவருடைய மகளை மீண்டும் வீட்டிற்கு கூட்டிட்டு வந்திருந்தார்.

அது அந்த நேரத்தில் அதிகமாக பேசப்பட்டது. அந்த நேரத்தில் சேரனின் மகள் தன்னுடைய தந்தை குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். ஆனாலும் இப்போது சேரன் தன்னுடைய மகளுக்கு பிரமாண்டமாக திருமணத்தை செய்து வைத்திருக்கும் நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.
-
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
குலதெய்வ கோவிலில் கணவருடன் மகிழ்ச்சியை பகிர்ந்த மணிமேகலை.. அடடா சூப்பர்! குவியும் வாழ்த்துக்கள் -
Super Singer : சூப்பர் சிங்கர் அருணாவிற்கு கல்யாணம்.. மகிழ்ச்சியோடு வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்து -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி












Click it and Unblock the Notifications