ஆறு மாசம் அப்படி இருக்கணும்.. அந்த நடிகை கூட அப்படி.. பிரபல இயக்குனரின் ரகசியத்தை உடைத்த லாவண்யா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கேரக்டரில் நடித்து பிரபலம் அடைந்த நடிகை லாவண்யா சினிமா வாழ்க்கையில் தனக்கு நடந்த அட்ஜஸ்மென்ட் பிரச்சனை குறித்து பேசி இருக்கிறார்.
அதில் ஆரம்ப காலகட்டத்தில் இயக்குனர் ஒருவர் தன்னிடம் ஆறு மாசம் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என்று கூறியது பற்றி வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

அதோடு தனக்கு ஆரம்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை குறித்து இப்போது அவர் பேசி இருப்பதும் இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
அந்த வகையில் விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்களின் மத்தியில் பிரபலமான சீரியல். கிட்டத்தட்ட ஐந்து வருடங்களை தாண்டி இந்த சீரியல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கடந்த வாரத்தோடு முடிவுக்கு வந்திருக்கிறது. அதை தொடர்ந்து இரண்டாவது சீசன் எப்போது தொடங்கி இருக்கிறது. முதல் சீசனில் நடித்த ஒரு சில நடிகர்கள் மட்டும்தான் இரண்டாவது சீசனில் நடிக்கின்றனர்.
அதுபோல முதல் சீசனில் நடித்த நடிகர்களை ரசிகர்கள் மிஸ் பண்ணி வருகிறார்கள். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நெடுநாட்கள் ஒளிபரப்பாகி வந்ததால் அதில் பல நடிகர்கள் இவருக்கு பதில் இவர் என்று வந்திருந்தனர். அந்த வகையில் ஒருவர்தான் நடிகை லாவண்யா. இவர் ஏற்கனவே முல்லை கேரக்டரில் வி ஜே சித்து கேரக்டரில் அவருடைய இறப்பிற்கு பிறகு அவருக்கு பதிலாக காவியா அறிவுமணி நடித்து வந்தார்.
அவர் சினிமாவிற்கு சென்ற பிறகு அந்த கேரக்டரில் லாவண்யா நடித்து வந்தார். லாவண்யா ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்தவர் தான். அந்த சீரியல் முடிவடைந்த நேரத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக அறிமுகமாகி கடைசி வரைக்கும் அவர்தான் முல்லையாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் தான் சினிமாவிற்குள் நுழைந்த ஆரம்ப காலகட்டத்தில் தனக்கு நேர்ந்த துன்பங்கள் பற்றி பேசி இருக்கிறார். அதில் எங்கள் வீட்டில் ஆரம்பத்தில் நான் சினிமாவில் போக போகிறேன் என்று சொன்னபோது கொஞ்சம் கூட சம்மதிக்கவே இல்லை. நான் பேங்கில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு ஆசை எல்லாம் நான் சினிமாவிற்கு வர வேண்டும் என்பதுதான்.
வீட்டில் ஆசைப்பட்ட மாதிரியே பேங்க் ஆபிஸராக மாறி இருந்தேன். அதற்குப் பிறகு என்னுடைய ஆசைக்காக நான் சினிமாவில் வாய்ப்புக்காக ஆடிஷனில் கலந்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு இயக்குனர் என்னிடம் நடந்து கொண்ட முறையும் அவர் என்னிடம் கேட்ட கேள்வியும் என்னால் இப்போது மறக்க முடியவில்லை.
நான் வாய்ப்புக்காக போய் அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது என்கூட ஆறு மாசம் போன்ல பேசிக்கிட்டே இருந்தா மட்டும் போதும் 6 மாதத்திற்கு பிறகு என்னுடைய கேரியர் வேற லெவலில் மாத்திடுவேன்னு சொன்னாரு. இந்த மாதிரி என்னால் சினிமாவில் பல நடிகைகள் வாழ்ந்திருக்காங்க. எல்லாருமே எங்கூட அட்ஜஸ்ட்மென்ட் பண்ணுனவங்க தான்ய உனக்கு ஓகேன்னா சொல்லு என்று வெளிப்படையா என்கிட்ட கேட்டாரு.
அப்போ நான் எதுவுமே பேசல அமைதியா வெளியே வந்துட்டேன். இப்போதான் நமக்கு கேரியர் ஆரம்பித்து இருக்கு. அந்த டைமில் நம்ம இதைப்பற்றி வெளியே பேசினா நம்ம கேரியரை முடித்து விடுவார்கள் என்று நான் பயத்தில் இருந்தேன். இப்போது எனக்குன்னு ஒரு அடையாளம் இருக்கிறது. அதனால் நான் இதைப் பற்றி வெளியே பேசுகிறேன் என்று அந்த பேட்டியில் லாவண்யா பேசியிருக்கிறார்.
அதே நேரத்தில் ரசிகர்கள் பலர் இப்போது இதைப்பற்றி பேசுகிறார்களே அப்பவாவது அந்த இயக்குனர் யார் என்பதை பற்றி சொல்லலாம். புதியதாக வாய்ப்புக்காக தேடி வரும் பல பெண்களுடைய வாழ்க்கையை இந்த மாதிரி இயக்குனர்கள் சீரழித்து விடக்கூடாது. அவர் செய்த செயலைப் பற்றி சொல்ல தைரியம் இருக்கும் நடிகைகள். யார் அந்த இயக்குனர் என்பதை சொன்னால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications