நெப்போலியனோடு நடிக்க தேவயானியை அவங்க அம்மா விடல.. காரணம் இதுதான்! டைரக்டர் களஞ்சியம் ஓபன்
சென்னை: இயக்குனர் களஞ்சியம் பேட்டி ஒன்றில் பேசி கொண்டிருக்கும்போது நடிகை தேவயானியை அவருடைய அம்மா நெப்போலியனுடன் நடிக்க விடமாட்டேன் என்று சொல்லிவிட்டார், அதற்கு காரணம் இதுதான் என்று சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
இயக்குனர் சோழன் மு. களஞ்சியம் பல ஹிட்டான திரைப்படங்களை இயக்கி இருக்கிறார். சிறந்த கதாசிரியருக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதையும் பெற்று இருக்கிறார். அதுபோல ஒரு சில திரைப்படங்களிலும் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். முதலில் உதவி இயக்குனராக இருந்த களஞ்சியம் முரளி, தேவயானி நடித்த பூமணி என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் இயக்குனராக அறிமுகமாக இருந்தார்.

அந்த திரைப்படத்திற்கு அவருக்கு பல விருதுகளும் கிடைத்தது. அதைத்தொடர்ந்து கிராமப்புற கதையை மையமாக வைத்து நடிகர் நெப்போலியன் மற்றும் தேவயானி நடிப்பில் கிழக்கும் மேற்கும் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதைத்தொடர்ந்து இளையராஜா தயாரிப்பில் சங்கீத திருநாள் என்ற திரைப்படத்தை எடுக்க முயற்சி செய்திருந்தார்.
ஆனால் அந்த திரைப்படம் சில காரணங்களால் இயக்க முடியாமல் போய்விட்டது. அதற்குப் பிறகு நடிகர் கார்த்திக், தேவயானி நடித்த நிலவே முகம் காட்டு என்ற திரைப்படத்தை உருவாக்கி இருந்தார். அதைத்தொடர்ந்து சில திரைப்படங்களை இயக்கி இருந்தார். ஆனால் அந்த திரைப்படங்கள் பெரிய அளவில் இவருக்கு ஹிட்டு கொடுக்கவில்லை. அதற்குப் பிறகு தேவயானியின் தம்பி மற்றும் அஞ்சலி நடிப்பில் 2002 ஆம் ஆண்டில் சப்தமின்றி முத்தமிடு என்ற திரைப்படத்தின் மூலமாக மீண்டும் இயக்குனராக வந்தார்.

ஆனால் அந்த திரைப்படம் சில காரணங்களால் நின்று போய்விட்டது. அதற்குப் பிறகு அஞ்சலியை வைத்து ஒரு சில திரைப்படங்களை இவர் இயக்கியிருந்த நிலையில் அந்த திரைப்படங்களும் வெளியாகாமலே இருந்து போனது. அதிலும் அஞ்சலிக்கும் இவருக்கும் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு அந்த நேரத்தில் செய்தி சேனல்களில் அஞ்சலியும் களஞ்சியமும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை கூறி வந்தனர்.
இந்த நிலையில் பல வருடங்களுக்கு பிறகு இவர் சாய் வித் சித்ரா என்ற நிகழ்ச்சியில் தன்னுடைய சினிமா வாழ்க்கை பற்றி பேசி இருக்கிறார். அப்போது தான் இயக்கிய பூமணி படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து தெய்வானை மூவிஸ் உடைய துரைராஜ் சார் என்னிடம் என்னுடைய வீட்டிற்க்கே வந்து பேசினார். அப்போது நான் சில திரைப்படங்களால் மிக அதிகமான கடனில் இருக்கிறேன். நெப்போலியனுக்கும் குஷ்புவுக்கும் நான் ஏற்கனவே அட்வான்ஸ் கொடுத்து இருக்கிறேன். அவங்கள வச்சு நீ ஒரு படம் பண்ணி கொடு, நீ எவ்வளவு சம்பளம் கேட்டாலும் நான் தரேன் என்று சொன்னார்.

நெப்போலியன் குஷ்பூ நடிப்பில் எட்டு பட்டி ராசா திரைப்படம் வெளியாகி பெரிய அளவில் ஹிட்டடித்தது. அந்த நேரத்தில் இவர் மீண்டும் அதே ஜோடியை வைத்து படம் இயக்கு என்று என்னிடம் சொன்னார். நான் அப்போ மீண்டும் அதே ஜோடியை வைத்தால் நன்றாக இருக்காது என்று நெப்போலியோனுக்கு ஜோடியாக தேவயானியை நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்தேன். அது பற்றி தேவயானியின் அம்மாவிடம் போய் பேசினேன். ஆனால் அவருடைய அம்மா நெப்போலியனோடு என்னுடைய மகள் நடிக்க மாட்டாள் என்று சொல்லிவிட்டார்.

அதற்கு காரணம் அந்த நேரத்தில் பூமணி ஹிட்டான போது விஜய், அஜித்தோடு தேவயானிக்கு நிறைய திரைப்படங்கள் வாய்ப்பு வந்தது. அதனால் நெப்போலியனுடன் நடிக்க முடியாது என்று அவருடைய அம்மா சொல்ல அதற்கு தேவயானி, ஏம்மா இப்படி சொல்லுறீங்க? அவர் இப்போ தானே பூமணி படம் ஹிட் கொடுத்திருக்கிறாரு. அவரோடு இன்னொரு படம் நாம நடிச்சு கொடுக்கிறதால் தப்பு இல்ல என்று அவங்களோட அம்மாவை சமாதானம் செய்து தான் தேவயானி கிழக்கும் மேற்கும் திரைப்படத்தில் நடித்தார். அந்த திரைப்படம் வெற்றி பெற்றது என்று அந்தப் பேட்டியில் களஞ்சியம் பேசியிருக்கிறார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications