ரம்யா கிருஷ்ணனுடன் விவாகரத்தா? இத்தனை பிரச்சனைக்கும் காரணம் இதுதான்! வெளிப்படையாக பேசிய வம்சி
சென்னை: நடிகை ரம்யா கிருஷ்ணன் அவருடைய கணவர் இயக்குனர் கிருஷ்ணா வம்சியை விவாகரத்து செய்ய போவதாக செய்திகள் பரவி வந்த நிலையில் அது குறித்து கிருஷ்ணவம்சி கொடுத்த விளக்கம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
நடிகை ரம்யா கிருஷ்ணன் 80ஸ் காலகட்டத்தில் சினிமாவில் நுழைந்தாலும் 90ஸ் ரசிகர்களுக்கு அதிகமாகவே பரீட்சையமானவர். அது அப்போ மட்டும் இல்லாமல் இப்போ உள்ள 2கே கிட்ஸுகளுக்கும் பாகுபலி ராஜா மாதாவாக தெரிந்தவர் தான். ஆரம்ப காலகட்டத்தில் துணை கதாபாத்திரங்களிலும் குத்து பாடல் உட்பட பலவற்றில் கலக்கிய ரம்யா கிருஷ்ணன் பிறகு போல்டான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வந்தார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பலமொழிகளிலும் நடித்திருக்கிறார். சில மதங்களுக்கு முன்பு அவர் அவருடைய கணவர் இயக்குனர் கிருஷ்ண வம்சியை விவாகரத்து செய்யப் போவதாக செய்திகள் பரவி வந்தது. ரம்யா கிருஷ்ணனும் அவருடைய கணவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள் என்றும் கூறப்பட்டது. ஏற்கனவே திரை பிரபலங்கள் பலரும் அடுத்தடுத்து விவாகரத்து செய்தியை பகிர்ந்து வரும் நிலையில் இதுவும் உண்மையா? அல்லது வதந்தியா? என்ற கேள்விகள் எழுந்து வந்தது.
இந்த நிலையில் இது குறித்து கிருஷ்ணவாம்சி சமீபத்தில் நடந்த கட்கம் படத்தின் மறு வெளியீட்டின் போது ரம்யா கிருஷ்ணன் குறித்து பேசி இருக்கிறார். ரம்யா கிருஷ்ணனும் இயக்குனர் வம்சியும் காதலித்து திருமணம் செய்து கொண்டது பலருக்கும் தெரிந்திருக்கும். நாகர்ஜுனா நடித்த சந்திரலேகா திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது தான் இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. பிறகு பெற்றோர் சமூகத்தோடு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது.

இந்த தம்பதிக்கு மகன் ஒருவரும் உள்ளார். அதோடு ரம்யா கிருஷ்ணன் குறித்து வம்சி கூறுகையில், நானும் ரம்யா கிருஷ்ணனும் தனித்தனியாக வசித்து வருவது உண்மைதான். படப்பிடிப்புக்காக தான் நான் ஹைதராபாத்தில் இருக்கிறேன். ரம்யா கிருஷ்ணன் சென்னையில் இருக்கிறார். நாங்கள் தனித்தனியாக இருப்பதால் சில வதந்திகள் உருவாகி இருக்கலாம். இந்த வதந்திகளை பரப்புவது சாடிஸம்.
இவற்றை பார்க்கும் போது சிரிப்புதான் வருகிறது. இதில் ஒரு துளி கூட உண்மை இல்லை. அதே நேரத்தில் எங்கள் மீது இருக்கும் அன்பினால் கூட இந்த வதந்திகள் உருவாக்குகிறார்கள். ஐயோ ரம்யா கிருஷ்ணனும், வம்சியும் பிரிந்து வாழ்கிறார்களே என்று வருத்தப்பட்டு இப்படி செய்திருப்பார்கள் என்று கிண்டலாக பேசியிருக்கிறார். மேலும் அவர் பேசுதையில் சமீபத்தில் எந்த நிகழ்ச்சியிலும் நாங்கள் ஒன்றாக கலந்து கொள்ளவில்லை என்றும் இதனால் நாங்கள் பிரிந்து இருக்கலாம் என்றும் சிலர் யூகத்தின் அடிப்படையில் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் நாங்கள் எங்கள் குடும்ப விஷயங்களுக்கு ஒன்றாக சேர்ந்து போய் கொண்டிருக்கிறோம். அந்த புகைப்படங்களை வெளியிட விரும்பவில்லை. நாங்கள் யார் என்பது எங்களுக்கு தெரியும். நாங்கள் சினிமாவில் பார்ப்பதற்கு வேறு விதமாக இருந்தாலும் எங்களுடைய வீட்டிற்குள் எங்களுடைய உலகம் வேறு மாதிரி தான் இருக்கிறது. ரம்யா கிருஷ்ணன் வீட்டிற்குள் ரொம்பவும் வேடிக்கையான நபர்.
அவர் மனிதர்களை மிகவும் நேசிப்பவர், அக்கறையுடன் கவனித்துக் கொள்வார். வீட்டில் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார். அதே நேரத்தில் புத்திசாலி எல்லா விஷயங்களையும் மிகவும் சாதாரணமாகவும் கூர்மையாகவும் யோசித்து செயல்படுவார். என்னுடைய குடும்பத்தை மிகவும் அக்கறையோடு கவனித்துக் கொள்வார் என்று பல தகவல்களை வம்சி பேசி இருக்கிறார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications