Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பல வருடம் முன்பு நடித்த "அந்த”காட்சி..பாக்கியராஜ் முன்பு கூனி குறுகிய எதிர்நீச்சல் ரேணுகா

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ரேணுகா கேரக்டரில் நடிகை பிரியதர்ஷினி நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் தான் குழந்தை நட்சத்திரமாக நடித்த "தாவணி கனவுகள்" திரைப்பட அனுபவம் குறித்து நடிகர் மற்றும் இயக்குனர் பாக்கியராஜ் உடன் மனம் திறந்து பேசி இருக்கிறார்.

அதில் தான் எந்த மாதிரி எல்லாம் நடித்தேன் என்றும், தனக்கு எப்படி அந்த திரைப்படத்தில் வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பது பற்றி வெட்கத்தோடு பிரியதர்ஷினி பேசியிருக்கிறார். அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

Director Pakyaraj talks about actress Priyadarshini Dhavani kanavugal film experience

சன் டிவியில் அதிகமான ரசிகர்களை கவர்ந்த சீரியல்களில் ஒன்றாக எதிர்நீச்சல் இருந்து வருகிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் அனைவருமே ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்திருக்கின்றனர். அந்த வகையில் அதிகமான ரசிகர்களை கவர்ந்த கேரக்டரில் ரேணுகா கேரக்டரும் இருந்து வருகிறது. அதில் ரேணுகாவாக நடிகை பிரியதர்ஷினி நடித்துக் கொண்டிருக்கிறார்.

பிரியதர்ஷினி வேறு யாரும் இல்லை தொகுப்பாளர் டிடி என்று அழைக்கப்படும் திவ்யதர்ஷினியின் அக்கா தான். அதுபோல பிரியதர்ஷினி இந்த சீரியல் மட்டுமல்லாமல் அதிகமான சீரியலில் நடித்திருக்கிறார். அதுபோல திரைப்படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக தொடங்கி பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அது மட்டும் அல்லாமல் தற்போது சொந்தமாக டான்ஸ் கிளாஸ் ஒன்று வைத்து பலருக்கும் டான்ஸ் சொல்லிக் கொடுத்தும் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் நடிகர் மற்றும் இயக்குனர் என பல முகங்களை கொண்ட கே. பாக்யராஜ் உடன் பேட்டியில் கலந்து கொண்டிருக்கிறார். அதில் பாக்யராஜ் கேட்ட கேள்விகளுக்கு பிரியதர்ஷினி வெட்கத்தோடு பயந்த படியே பதில் கூறி இருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது. அந்த வகையில் அதில் பிரியதர்ஷினியை பிரியா என்று செல்லமாக பாக்கியராஜ் அழைத்துக் கொண்டிருக்கிறார். அதற்கான காரணமும் அவரே கூறி இருக்கிறார்.

எம்மா, பிரியா நான் உன்னை பேர சொல்லி கூப்பிடறது தப்பு இல்லையே என்று கேட்க, அதற்கு சார் நீங்க கண்டிப்பா கூப்பிடலாம் சார் என்று பிரியதர்ஷினி கூற, நீ எனக்கு ஒரு முறையில தங்கச்சி தான் ஞாபகம் இருக்கா என்று கேட்க, கண்டிப்பா இருக்கு சார் என்று பிரியா சொல்ல, நீ என்னோடு நடிச்ச தாவணி கனவுகள் திரைப்படம் உனக்கு ஞாபகம் இருக்கா? என்று கேட்க, அதுல கொஞ்சம் கொஞ்சம் ஞாபகம் இருக்கு. ஆடிஷனுக்கு வந்தது அந்த திரைப்படத்தில் நடிச்சது ஞாபகம் இருக்கு.

Director Pakyaraj talks about actress Priyadarshini Dhavani kanavugal film experience

நான் உங்க கூடவும் சிவாஜி சாருடனும் நடிச்சது என்னால மறக்க முடியாது. அதுவும் அந்த திரைப்படத்தில் நடிக்கும் போது எனக்கு எட்டு வயசு தான். அந்த ஆடிஷனில் நீங்க என்ன எப்படி செலக்ட் பண்ணுனீங்க சார் என்று பிரியதர்ஷினி கேட்க, அதற்கு பாக்கியராஜ் நான் அந்த நேரத்துல அந்த கேரக்டருக்கு ஆள் தேடிட்டு இருந்தேன். அப்போ சரியா நீயும் நடிச்சுக்கிட்டு இருந்த, உன்னை நடித்து காட்ட சொன்னேன் டான்ஸ் ஆட சொன்னேன் நீ நான் சொன்னதெல்லாம் சரியா செஞ்ச, அதனால உன்னையே ஓகே பண்ணிட்டோம்.

ஆனால் அந்த திரைப்படத்தில் நீ பண்ணின சேட்டை எல்லாம் பார்த்து தான் உனக்காக அதிகமா பிரேம் வச்சு, உனக்காக கதையும் மாத்தி உனக்கு அதிக முக்கியத்துவமும் கொடுத்து இருப்பேன் என்று பாக்கியராஜ் சொல்கிறார். அதில் உனக்கு ஞாபகம் இருக்கான்னு தெரியல, நானே அந்த படத்தை இப்போ பார்த்து தான் எனக்கு ஞாபகம் வந்துச்சு. ஒருமுறை நாம அக்கா எல்லாருமே என் பிரண்டோட கல்யாணத்துக்கு போவோம். அந்த கல்யாண வீட்டு வாசலில் வைத்து எனக்கு உச்சா.. வருதுன்னு நீ சொல்லுவ.

நான் அப்போ இங்கே எப்படி போறது வீட்டிலே போயிட்டு வந்திருக்க வேண்டியதுதானே என்று கேட்பேன் நீ அதுக்கு நான் அங்க இருட்டு இருக்கு அங்க போயிட்டு வந்துருவேன் என்று தைரியமா சொல்லிட்டு போவா, நானும் மீதமுள்ள தங்கச்சிகளை கூட்டிட்டு கல்யாண வீட்டுக்குள்ள போயி என் பிரண்ட சந்திச்சு பேசிட்டு சாப்பிட உட்கார்ந்திருவோம்.

அந்த நேரத்தில் என் பிரண்டோட சொந்தக்காரங்க ஒருத்தர் இவங்களுக்கு மேனஸ் இல்லையா? குடும்பத்தோட வாங்கன்னு சும்மா சொன்னதுக்கு குடும்பத்தை கூட்டிட்டு வந்துட்டாங்கன்னு திட்டுவாங்க. அப்ப நீ அதை கேட்டுட்டு என்கிட்ட வந்து சொல்லுவ, அந்த இடத்துல நான் பஞ்சு வசனம் பேசிட்டு வெளியே வருவோம். அது கூட உனக்காக மாற்றியது தான் என்று ரகசியங்களை பாக்கியராஜ் கூறி இருக்கிறார். அதைக் கேட்டு பிரியதர்ஷினி வியந்து போய்விட்டார்.

அதற்கு பிரியதர்ஷினி ஆமா சார் அது எனக்கு தெரியும். உங்களோட நடிச்சது எனக்கு மறக்கவே முடியாது என்று சொல்ல, உனக்கு அந்த திரைப்படத்தில் எந்த காட்சியாவது ஞாபகம் இருக்கா? என்று பாக்கியராஜ் கேட்க, ஆமா அதில் தியேட்டரில் நீங்க அக்கா எல்லாரும் படம் பார்த்துட்டு இருப்போம். அப்போ நீங்க திடீர்னு காசை கீழே போட்டு அதை எல்லாரும் தேட சொல்லுவீங்க.

Director Pakyaraj talks about actress Priyadarshini Dhavani kanavugal film experience

எல்லாரும் குனிஞ்சு கீழே தேடிட்டு இருப்போம் அப்போ ஒரு முறை நான் கூட அண்ணே நீங்க இப்போ காசு போட மறந்துட்டீங்கன்னு சொல்லுவேன்.
ஆனா அப்போ சூட்டிங் எடுக்கும் போது அங்க திரையில் எங்களுக்கு நீங்க எதுவுமே காட்டல. ஆனா நீங்க படத்தை எதுவும் நாங்க பாத்திரக் கூடாதுன்னு எங்களை குனிஞ்சு தேட வைக்கிறீங்கன்னு அப்போ புரியல.

ஆனா அப்புறம் இப்ப படத்தை பார்க்கும் போது தான் எனக்கே தெரியுது என்று பிரியதர்ஷினி கூற, பாக்கியராஜ் அதுவெல்லாம் ஞாபகம் இருக்கா? இந்த திரைப்படம் 1984 இல் வந்துச்சு என்று பாராட்டுகிறார். மேலும் அந்த திரைப்படத்தில் பிரியதர்ஷினியின் டான்ஸ் வீடியோவை பாக்யராஜ் போட்டு காட்ட அதை பார்த்து அவரே வெட்கப்பட்டுக் கொண்டிருக்கிறார். தற்போது இந்த வீடியோ வைரல் ஆகி கொண்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+