கமலின் ரகசியங்களை புட்டு புட்டு வைத்த "பிரபலம்".. விஜய் உடன் இப்படி ஒரு உறவாமே? மருதநாயகம் ரகசியம்?
சென்னை: தமிழ் சினிமாவின் கமல், விஜய், அஜித்,விக்ரம் போன்ற முன்னணி கதாநாயகர்கள் படங்களில் கலை இயக்குனராக பணியாற்றியுள்ள தமிழ் திரையுலகின் முன்னணி கலை இயக்குனர்களில் ஒருவராக பிரபாகரன் இருக்கிறார்.
அவர் நடிகர் கமல் மற்றும் விஜய் அவர்களுடன் பணி செய்த அனுபவங்களையும், கமலின் கனவு படங்களான மருதநாயகம் மற்றும் மர்மயோகி குறித்த தகவல்களை பகிர்ந்துள்ள காணொளி கமல் ரசிகர்களால் இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
அன்பே சிவம், விருமாண்டி, தசாவதாரம் போன்ற படங்களில் கமலஹாசன் உடன் இணைந்து கலை இயக்குனராக பணியாற்றியுள்ள பிரபாகரன் 16 வயதினிலே படத்திலிருந்தே கமலின் தீவிர ரசிகராம். பல படங்கள் அவருடன் பணியாற்றி இருந்தும் இதை கமலிடம் கூட சொன்னதில்லையாம். தன்னுடைய குருநாதர் அசோக் கலை இயக்குனராக பணியாற்றிய தேவர் மகன் படத்தின் போதுதான் கமலஹாசனை முதன்முதலாக நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்திருக்கிறது.
அந்த சமயத்தில் தன்னுடைய வேலையையும் மறந்து கமலஹாசனை மெய்மறந்து கொண்டே இருப்பாராம்.கமல் படங்களில் எவர்களின் படமான மூன்று படங்களில் கலை இயக்குனராக பணியாற்றியுள்ள பிரபாகரன் கமலுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றால் அவருடைய ரசிகராக இருந்தால் மட்டுமே அது முடியும் என்றும், அப்பொழுதுதான் கமலஹாசன் படத்திற்கு என்ன தேவை என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும் என்றும் கூறியுள்ளார்.

மருதநாயகம் படத்தில் பணியாற்றிய அனுபவத்தை பற்றி கூறும் பொழுது பாகுபலி படத்தில் பிரபாஸ் அருவியில் இருந்து விழுவது போல் காட்சி எடுக்கப்பட்டிருக்கும். இப்பொழுதாவது அட்வான்ஸ் கிராபிக்ஸ் டெக்னாலஜி, கிரீன் மேட் ஷாட் போன்ற பல தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்டது.
ஆனால் அதே அருவியில் கமலஹாசன் எந்தவித டூப்பும் இல்லாமல் அருவியின் மேலிருந்து கீழாக குதித்து இருப்பார்.
மருதநாயகம் ட்ரைலரில் காட்டப்பட்டிருக்கும் காட்டெருமை மீது சவாரி செய்வது போன்ற காட்சியையும் கமலே செய்தார் என்றும், காட்டெருமையை சாதாரணமாக ஏதோ வளர்ப்பு குதிரையை கையாள்வது போல் கையாண்டு அசால்டாக அதன் மீது சவாரி செய்தார் என்று மெய்சிலிர்க்க கூறியுள்ளார்.
அந்தப் படம் மட்டும் இந்நேரம் வெளிவந்திருந்தால் தமிழ் சினிமாவையே ஏன் இந்திய சினிமாவையே ஒரு புரட்டு புரட்டி போட்டு இருக்கும் என்று ஆதங்கப்பட்டுள்ளார்.கமலின் மற்றொரு ட்ரீம் ப்ராஜெக்ட் ஆன மர்மயோகி குறித்து கூறும் பொழுது தசவதாரம் படத்தை முடித்த கையோடு தன்னுடைய அலுவலகத்திற்கு அழைத்து கமல் என்னிடம் மர்மயோகி பட கதையை கூறியதாகவும்,
அவர் கூறும் பொழுதே படத்திற்கு தேவையான அனைத்தையும் தான் ஒரு பேப்பரில் எழுதி உடனே அவரிடம் காண்பித்ததாகவும் கூறியுள்ள பிரபாகரன், அதை வாங்கிப் பார்த்த கமல் தன்னுடைய உதவியாளரை அழைத்து அவருடைய பேக்கை எடுத்து வரச் சொல்லி அதில் இருந்த பேப்பரையும் எடுத்து இரண்டு பேப்பரையும் ஒப்பிட்டுப் பார்த்தார்.
இருவருக்கும் ஒரே அதிர்ச்சி காரணம் இரண்டு பேப்பரில் எழுதப்பட்டிருந்த படத்திற்கு தேவையான விஷயங்களும் பொருட்களும் ஒன்றாக இருந்தது தான்.பேண்டஸி படமான மர்மயோகி படமும் வரலாற்று படமான மருதநாயகம் படமும் கண்டிப்பாக கமலஹாசன் முயற்சியில் சிறப்பாக வெளிவரும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ள அவருக்கு கமல் ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.
நினைத்தேன் வந்தாய், துள்ளாத மனமும் துள்ளும் படங்கள் துவங்கி பைரவா வரை சுமார் ஆறு விஜய் படங்களில் கலை இயக்குனராக பணியாற்றி உள்ள பிரபாகரன் விஜயின் வளர்ச்சி குறித்து கூறும்போது, சினிமா துறையிலேயே தான் தம்பி என்று உரிமையுடன் அழைக்கக்கூடிய ஒரே நபர் விஜய் தான் என்றும், பள்ளிக்கு செல்லும் தன்னுடைய மகன் அந்தப் பள்ளியின் சிறந்த மாணவனாக வந்ததை பார்த்து மகிழ்ச்சி அடையும் அப்பாவை போல் விஜயின் வளர்ச்சியை பார்த்து தான் பெருமைபடுவதாகவும் கூறியுள்ளார்.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications