தேவயானியை அந்த கட்சியில் அந்தியூர் தொகுதிக்கு கூப்பிட்டாங்க! முடியாதுன்னு சொல்லிட்டேன்! - ராஜகுமாரன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குனரும் நடிகை தேவயானியின் கணவருமான ராஜகுமாரன் சமீபத்தில் பல பேட்டிகளில் பேசிக் கொண்டிருக்கிறார். அதுதான் இப்போது சோசியல் மீடியாவில் அவரை கலாய்க்க வைத்துக் கொண்டிருக்கிறது. அவரை சிலர் ட்ரோல் செய்து வருகிறார்கள். இந்த வரிசையில் சமீபத்தில் அவர் தன்னுடைய மனைவி தேவயானியை பிரபல கட்சி ஒன்றில் அந்தியூர் தொகுதியில் போட்டியிட கூப்பிட்டதாகவும் அதற்கு தான் மறுத்துவிட்டேன் என்றும் சொல்லி இருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

நடிகை தேவயானி 90ஸ் காலகட்டத்தில் சினிமாவில் அறிமுகமானாலும் இப்போது தொடர்ந்து சினிமா மற்றும் சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவருடைய கணவர்தான் இயக்குனர் ராஜகுமாரன். இயக்குனர் ராஜகுமாரனை 90ஸ் ரசிகர்களுக்கு தெரியும். அவர் அப்போது நீ வருவாய் என, விண்ணுக்கும் மண்ணுக்கும் போன்ற ஒரு சில திரைப்படங்களை இயக்கி இருந்தார்.

Rajakumaran Devayani

ஆனால் இப்போதுள்ள ரசிகர்களுக்கு சந்தானத்துடன் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் ராஜகுமாரன் நடித்த கேரக்டர் தான் தெரியும். அதை வைத்து இவர்தான் தேவயானியின் கணவரா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனால் அவர் சமீபத்தில் தொடர்ச்சியாக பேட்டிகளில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி வருகிறார்.

ராஜகுமாரன் பேசுவதையே பார்த்து பலர் மிரட்டுவதாகவும் கூறியிருக்கிறார். ஆனாலும் நான் என்னுடைய மனதில் பட்டதை தான் பேசுவேன், அடுத்தவர்களுக்காக நான் என்னை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை, எனக்கு எது பிடிக்கிறதோ அதை பிடிக்கிறது என்று சொல்கிறேன்.. இல்லை பிடிக்கவில்லை என்றால் அதில் இருக்கும் குறைகளை சொல்கிறேன் அவ்வளவுதான் என்று சொல்லி இருக்கிறார்.

இயக்குனர் மகேந்திரன் பற்றி விமர்சித்து பேசியதற்கு பல திரை பிரபலங்களும் கூட கண்டனம் தெரிவித்திருந்தார்கள். மகேந்திரனை மட்டுமல்லாமல் கமல்ஹாசனையும் விட்டு வைக்காமல் குறை சொல்லி இருந்தார். கமல்ஹாசன், விக்ரம் போன்றவர்களுக்கு எல்லாம் நடிக்க தெரியாது என்றும் அவர் சொல்லியது குறித்து அவர்களுடைய ரசிகர்கள் இவரை கமாண்டுகளில் திட்டி தீர்த்து வருகிறார்கள்.

ஆனாலும் ராஜகுமாரன் இதையெல்லாம் கண்டு கொண்டது போல இல்லை. சமீபத்தில் ஒருவர் யூடியூப் சேனலில் அவர் பேசும்போது, தேவயானியை மக்கள் நீதி மையம் அந்தியூர் தொகுதியில் தேர்தலில் நிறுத்துவதற்காக முயற்சி செய்தது. ஆனால் எனக்கு கொஞ்சம் அரசியல் தெரியும் என்பதால் அதை நான் காதிலேயே போட்டுக்கொள்ளவில்லை. தேர்தலில் நின்று ஜெயிப்பதை விடவும் ஆளுங்கட்சி எம்எல்ஏவாக ஜெயிக்க வேண்டும். அப்போதுதான் மக்களுக்கான விஷயங்களை செய்ய முடியும்.

அதனால் நாங்கள் அதற்கு ஒத்துக்கொள்ளவே இல்லை ஒரு முறை அந்தியூரில் வைத்து எங்களை கமல் சந்திக்க வருவதாகவும், உங்கள் வீட்டில் தான் சாப்பிட போகிறார் என்றும் சொன்னார்கள். ஆனால் நாங்களோ இல்லை சார் சென்னை கிளம்பிட்டோம் சாவியை கொடுத்துவிட்டு போகிறோம் இங்கு வந்து ரெஸ்ட் எடுத்துக்கொள்ள சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டு வந்தோம்.

ஏன்னா அரசியல் நிமித்தமாக கமல்ஹாசன் எங்களை சந்திப்பதை நாங்கள் விரும்பவில்லை. மக்கள் நீதி மையம் கட்சியின் நிலைமை தான் தவெகவிற்கும் வரும். அந்த கட்சியினர் எங்களை அழைத்து தலைகீழாக நின்னாலும் போகமாட்டோம் என்று ராஜகுமாரன் பேசி இருக்கிறார். வழக்கம்போல இவர் இப்போது பேசியதையும் பலர் திட்டி தீர்த்து ட்ரோல் செய்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+