3BHK: சித்தார்த் உடன் தான் நானும் படிச்சேன்.. அவர் அடி முட்டாள், ஏன்னா? இயக்குனர் ராம் சொன்ன விஷயம்
சென்னை: நடிகர் சரத்குமார், தேவயானி, சித்தார்த் இணைந்து நடிக்கும் 3BHK படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் இயக்குனர் ராம் கலந்து கொண்டு சித்தார்த்தை பற்றி பல விஷயங்களை மனம் திறந்து பேசி இருந்தார். அப்போது நாங்கள் இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள், ஆனால் சித்தார்த் அடி முட்டாள் என்று பேசி இருந்தார். அதற்கு என்ன காரணம் என்றும் ராம் பேசியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
எட்டு தோட்டாக்கள், ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி, யோகி பாபு, சைத்ரா உட்பட பலர் நடிப்பில் 3BHK படம் உருவாகி இருக்கிறது. இந்த திரைப்படத்தின் கதையானது சென்னை போன்ற நகரத்தில் இருக்கும் ஒரு குடும்பத்தினர் சொந்தமாக மூன்று பெட்ரூம் வசதி உடைய ஒரு வீடு வாங்க வேண்டும் என்று கனவோடு இருக்கிறார்கள். அந்த கனவை சுற்றி தான் இந்த படம் பயணிக்கிறது. வீடு வாங்குவதற்காக குடும்பமே எவ்வளவு கஷ்டப்படுகிறது? அந்த வீட்டிற்க்காக அவர்கள் படும் வேதனை, கடைசியில் வீடு வாங்கினார்களா? இல்லையா? என்பதுதான் கதையாக இருக்கிறது.

இந்த திரைப்படம் வரும் நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. அதில் இயக்குனர் ராம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசும்போது "எனக்கு, சித்தார்த் மற்றும் தயாரிப்பாளர் அருண் விஷ்வா மூன்று பேருக்கும் ஜூலை 4ஆம் தேதி முக்கியமான நாள். என்னுடைய "பறந்து போ", ஸ்ரீ கணேஷ் இயக்கி இருக்கும் 3BHK படமும் ஜூலை நான்காம் தேதி ஒரே நாளில் வெளியாகிறது.
என்னுடைய தங்கம் மீன்கள் படம் வெளியாகாமல் இருந்தபோது எனக்கு அருள் விஷ்வா தான் உதவினார். உற்சாகமும் நம்பிக்கையும் தரக்கூடிய நல்ல பையன் தயாரிப்பாளர் அருண் விஷ்வா. நடிகர் சித்தார்த் அதி புத்திசாலி, மரியாதையில்லாமல் நடந்து கொள்பவர், எதிராளியின் மனம் புண்படுமா? என்று யோசிக்காமல் பேசுபவர், என்றெல்லாம் அவர் மீது ஒரு பின்பம் இருக்கிறது. ஆனால் சித்தார்த் ஒரு அடி முட்டாள். எந்த அர்த்தத்தில் இதை சொல்கிறேன் என்றால் அவர் ஒரு வளர்ந்த குழந்தை.
நானும் சித்தார்த்தும் ஒரே பள்ளியில் படித்தவர்கள். நாங்கள் இரண்டு பேருமே இன்னும் அந்த பள்ளியை விட்டு வெளியே வரவில்லை. இன்னும் குழந்தை மனதிலேயே இருக்கிறோம். எது எப்போ எதை செய்யணும்னு தெரியாது. பக்க விளைவுகள் பின் விளைவுகள் பற்றி எல்லாம் யோசிக்கிறதே கிடையாது. மனதிற்கு பிடித்ததை அதன் போக்கிலேயே செய்பவர்.

சித்தார்த்தை பார்க்கும் போதே தெரியும் அவர் இளமையாக இருக்கிறார்கள் என்று அவர் அப்படி இருப்பதற்கு காரணம் அவருடைய மனம் தான். அவர் எப்போதும் காற்றின் இறகு போல வாழ்பவன். இளகிய மனம் கொண்டவன். அதனால் அவனால் எப்போதும் சந்தோஷமாக இருக்க முடிகிறது. இந்த படம் சொந்த வீட்டைப் பற்றிய உணர்வுபூர்வமான படம். சொந்த வீடு என்பது வெறும் மரியாதை மட்டுமல்ல, நம் பிள்ளைகளின் எதிர்காலம் எப்படி இருக்கும்? அவர்கள் இந்த வீட்டில் எப்படி வாழ போகிறார்கள்? என்று பார்க்கும் ஒரு உணர்வு என இயக்குனர் ராம் பேசியிருக்கிறார்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications