நடிகர் ஸ்ரீக்கு வில் அம்பு படத்தில் பணம் கொடுக்கணுமா? நடந்தது இதுதான்! விளக்கம் கொடுத்த இயக்குனர்
சென்னை: விஜய் டிவில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் பிரபலமடைந்து வழக்கு எண் 18, வில் அம்பு, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் போன்ற திரைப்படங்களில் நடித்த நடிகர் ஸ்ரீ இப்போது ஆளே அடையாளம் தெரியாத வகையில் மாறி இருக்கிறார். இவருடைய நிலைமைக்கு என்ன காரணம் என்று பல தகவல்கள் பரவி வரும் நிலையில் வில் அம்பு திரைப்பட இயக்குனர் ரமேஷ் சுப்பிரமணியம் பேட்டி ஒன்றில் நடிகர் ஸ்ரீ பற்றி பல தகவல்களை பேசி இருக்கிறார்.
சினிமாவில் பார்த்து வியந்த பல நடிகர்கள் திடீரென்று காணாமல் போகிறார்கள். இவர்கள் எல்லாம் சினிமாவில் பெரிய அளவில் சாதிப்பார்கள் என்று நினைத்தவர்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் பாதியிலேயே சினிமாவை விட்டு விலகி இருக்கிறார்கள். ஒரு சிலருக்கு என்னதான் திறமையும் அதற்கான உழைப்பும் இருந்தாலும் சரியான அங்கீகாரம் கிடைக்காமல் இருக்கிறது. அதுபோல ஒருவர்தான் நடிகர் ஸ்ரீ.

காணாமல் போன நடிகர்
கனா காணும் காலங்கள் சீரியல் மூலமாக பிரபலமாகி அதைத் தொடர்ந்து வழக்கு எண் 18 என்ற திரைப்படத்தில் வித்தியாசமான கேரக்டரில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் ஸ்ரீக்கு பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுத்தது. அதை தொடர்ந்து ஓநாயும் ஆட்டுக்குட்டியும், வில் அம்பு, இறுகப்பற்று போன்ற பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் திடீரென்று சினிமாவில் இருந்து காணாமல் போய்விட்டார்.
அதிர்ச்சி கொடுத்த புகைப்படங்கள்
இந்த நிலையில் தான் கடந்த வாரத்தில் இவருடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே தான் நடித்த வில் அம்பு மற்றும் இறுகப்பற்று திரைப்படத்தில் தனக்கு சரியான சம்பளம் கிடைக்கவில்லை. தன்னை ஏமாற்றி விட்டார்கள் என்பது போன்று போஸ்ட் போட்டு இருக்கிறார்.
ஸ்ரீ போட்ட போஸ்ட்
ஒரு தடவை மட்டுமல்லாமல் அதே போஸ்டை மூன்று முறை ஷேர் செய்து இருக்கிறார். அதுபோல இப்போது அவர் அரைகுறை ஆடையோடு ஆபாசமான வீடியோக்கள் வெளியிட்டு வருவது ரசிகர்களுக்கு வருத்தத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. எப்படி இருந்த மனிதன் இப்படி மாறியதற்கு காரணம் சினிமாவில் அவர் நடித்த திரைப்படங்களுக்கு அவருக்கு சரியான சம்பளம் கொடுக்காதது தான் மன அழுத்தத்திற்கான காரணம், மன அழுத்தத்தால் அவர் இப்படி ஆகிவிட்டார் என்று பலரும் பீல் பண்ணி பேசி வருகிறார்கள்.

அழகான நடிகர்
இந்த நிலையில் ஸ்ரீ நடித்த வில் அம்பு திரைப்பட இயக்குனர் ரமேஷ் சுப்பிரமணியன் ஸ்ரீ பற்றி பேட்டி ஒன்றை பேசியிருக்கிறார். அதில் அவர் பேசும்போது இப்போது இருப்பது எங்களுடைய ஸ்ரீயே கிடையாது. அவர் இதுபோன்று இருக்கவே மாட்டார். ஸ்ரீ அழகாக நடிக்க கூடியவர் நடிப்பு மட்டுமல்லாமல் அவருக்கு இயக்குனராக வேண்டும் என்று ஆசையும் இருந்தது. அதுபோல கதையை தேர்வு செய்வதிலும் அவர்க்கு நல்ல திறமை உண்டு. ஆனால் சில வருடங்களாகவே சினிமாவை விட்டு காணாமல் போய்விட்டார். அதற்கு காரணம் என்ன என்பதுதான் தெரியவில்லை.
சம்பள பாக்கி சர்ச்சை
வில் அம்பு திரைப்படத்தில் அவருக்கு சம்பளம் சரியாக கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது பற்றி நான் ப்ரொடக்ஷன் டீமில் விசாரித்தேன் அப்போது அவர்கள் நாம கொடுக்க வேண்டியதை சரியாக கொடுத்து விட்டோம் என்று கூறுகிறார்கள். இது பற்றி ஸ்ரீ விளக்கம் கொடுத்தால் தான் சரியாக இருக்கும். எப்படி விஜய், அஜித் போன்றவருக்கு கதை உருவாக்கப்படுகிறதோ அதேபோல ஸ்ரீக்கு என்று பல உதவி இயக்குனர்கள் கதை எழுதி இருக்கிறார்கள். ஆனால் ஸ்ரீயை தான் கடந்த சில வருடங்களாக கான்டாக்ட் பண்ண முடியாமல் இருக்கிறது.

தொடர்பு கொள்ள முடியவில்லை
அவரிடம் எப்படி பேச? எப்படி அவரை தொடர்பு கொள்ள என்று தெரியாமலேயே பலர் இருக்கிறார்கள். ஸ்ரீ மீண்டும் பழைய நிலைக்கு வரவேண்டும் அவருக்கு நாங்கள் உதவி செய்கிறோம். அவருக்காக நாங்கள் கதைகள் வைத்திருக்கிறோம். அவரை மீண்டும் பழையபடி நடிக்க வைக்கலாம் என்பது எங்களுக்கு ஆசையாக இருக்கிறது. ஸ்ரீ எங்களிடம் பழகிய வரைக்கும் ரொம்பவும் ஜெனுனாக இருப்பார். இப்போது அவர் வீடியோக்கள் வெளியிடுவது ஆச்சரியமாக இருக்கிறது. இந்த மாதிரி அவர் மாறக்கூடிய நபரே கிடையாது.
ஆனால் இவருடைய வாழ்க்கையில் என்ன நடந்தது என்று தான் யாருக்கும் தெரியாத புதிராக இருக்கிறது. விரைவில் ஸ்ரீ மீண்டும் பழையபடி வரவேண்டும். இந்த வீடியோவை பார்த்தாவது ஸ்ரீ எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் என்று அந்த பேட்டியில் இயக்குனர் ரமேஷ் சுப்பிரமணியன் பேசியிருக்கிறார்.
-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications