அந்த மாதிரி காதலை மிஸ் பண்ணிடாதீங்க! இப்போ தனுஷ் தூங்காம ஓடுறான்.. செல்வராகவன் ஓபன்
சென்னை: இயக்குனர் செல்வராகவன் பேட்டி ஒன்றில் தன்னுடைய தம்பியான தனுஷ் பற்றி சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். தன்னுடைய தம்பி தனுஷ் தற்போது தூக்கம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறார் என்று அதற்கான காரணத்தையும் கூறியிருக்கிறார்.
சமீபத்தில் சில தினங்களாகவே நடிகர் தனுஷ் பற்றிய செய்திகள் அதிகமாக அடிபடுகிறது. ஒரு பக்கத்தில் தனுஷ் மற்றும் அவருடைய மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து செய்திகள் பற்றி பேசப்படுகிறது. சில தினங்களுக்கு முன்புதான் ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நாங்கள் மீண்டும் சேர்ந்து வாழ்வதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறிய நிலையில் இந்த மாத இறுதியில் இவர்களின் விவாகரத்து வழக்கிற்கு தீர்ப்பு கிடைக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. இதே நேரத்தில் நடிகை நயன்தாரா தனுஷ் பற்றி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்ததும் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.
நயன்தாரா மற்றும் அவருடைய கணவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தின் மூலமாக சந்தித்திருந்தனர். அந்த திரைப்படத்தை தனுஷ் தான் தயாரித்திருந்தார். இந்த நிலையில் நயன்தாராவின் பிறந்தநாளின் போது அவருடைய ஆவணப்படம் netflix தளத்தில் வெளியாக இருந்தது.

அதில் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் சந்தித்துக் கொண்ட காட்சி மற்றும் ஒரு சில கிளிப்ஸ்களை பயன்படுத்துவதற்கு தனுஷிடம் பெர்மிஷன் கேட்டு வந்தோம், ஆனால் அவர் அதற்கு உரிய அனுமதி தராமல் இரண்டு வருடம் இழுத்தடித்து விட்டார் என்று மூன்று பக்கத்திற்கு தனுஷ் பற்றி நயன்தாரா புகார் தெரிவித்து இருந்தார்.
அதற்குப் பிறகு தனுஷ் செய்தது தரியா தவறா என்பது இணையத்தில் அதிகமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தனுஷின் அண்ணனும் இயக்குனருமான செல்வராகவன் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது தனுஷ் குறித்து கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு தனுஷின் கடின உழைப்பை பார்த்து எனக்கு வியப்பாக இருக்கிறது.
தனுஷ் ராட்சச தனமாக உழைக்கிறார். இரவு பகல் என தூங்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறார். எனக்கு அவனைப் பார்க்கும்போது பொறாமையா இருக்கிறது. நாமும் இப்படி இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. தனுஷ் இயக்கத்தில் நடிக்கும் போது அவர் சொல்வதை அப்படியே செய்ய வேண்டும் என்று இல்லை. ஆனால் அதைக் கெடுக்காமல் செய்தால் போதும்.
அவருக்கு என்ன வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பதில் தனுஷ் தெளிவாக இருப்பார் என்று கூறியிருக்கிறார். அதுபோல காதல் பற்றிய கேள்விக்கு செல்வராகவன் பேசுகையில் காதல் என்பது ஒரு அற்புதமான உணர்வு, அது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வரக்கூடியது. ஆனால் சமீபத்தில் உள்ள காதல் எல்லாம் அப்படி கிடையாது. இப்போதுஅதிகமான பெண்கள் ஒரு ஆணை பார்த்ததும் இவரை கல்யாணம் செய்தால் அல்லது காதலித்தால் வாழ்க்கையில் நாம் எப்படி எல்லாம் செட்டில் ஆகலாம் என்கிற ரீதியில் தான் சிந்திக்கிறார்கள்.

அதுபோல ஒரு ஆண் பெண்ணை பார்த்ததும் இவரால் நமக்கு என்ன லாபம் கிடைக்கும்? இவரை வைத்து நம்முடைய வாழ்க்கைக்கு என்னவெல்லாம் முன்னேற்றம் கிடைக்கும் என்று வேறு விதமாக யோசிக்கிறார். இதுபோல இல்லாமல் ஒரு ஆணையோ அல்லது பெண்ணையோ பார்த்ததும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அவர்களை பிடிக்கிறது என்றால் அதுதான் உண்மையான காதல். அப்படி ஒருவர் கிடைத்துவிட்டால் அவர்களை விட்டு விடாதீர்கள் என்று செல்வராகவன் பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications