Sundar C: ரஜினியின் 173வது படத்திலிருந்து விலகிய இயக்குநர் சுந்தர். C! உருக்கமான கடிதத்தில் வெளியிட்ட தகவல்
சென்னை: தமிழ் சினிமாவின் பிக் ப்ராஜெக்ட்களில் ஒன்றான, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க, உலக நாயகன் கமல்ஹாசன் தயாரிக்கும் #Thalaivar173 திரைப்படத்திலிருந்து, இயக்குநர் சுந்தர். C விலகிவிட்டார்! (நவம்பர் 13) இன்று அவர் வெளியிட்ட ஓர் உருக்கமானக் கடிதத்தில் இந்த முடிவை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்திருக்கிறார்.

அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இவை:
"தவிர்க்க முடியாத மற்றும் எதிர்பாராத சூழ்நிலைகள்" காரணமாக, இந்தப் பிரம்மாண்டமானத் திட்டத்திலிருந்து விலக வேண்டிய கடினமான முடிவை எடுத்துள்ளதாகக் கூறியிருக்கிறார். "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களையும், தயாரிப்பாளர் கமல்ஹாசன் அவர்களையும் வைத்துப் படம் இயக்குவது என்பது, எனக்கு நிஜமாகவே ஒரு கனவு நனவான முயற்சி" என்றும், அதிலிருந்து விலகுவது மனதிற்கு வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
மதிப்பும் மரியாதையும்
"வாழ்வில் நாம் நம் கனவு பாதையிலிருந்து விலகும் தருணங்கள் வரும்போதும், எங்களின் உறவு நீடிக்கும். இந்தக் கலைஞர்கள் இருவர் மீதும் நான் எப்போதுமே மிகுந்த மரியாதையை வைத்திருக்கிறேன்" என்று குறிப்பிட்டார். இந்த மகத்தானத் திட்டத்திற்காக தன்னையும் பரிசீலித்த இருவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ள சுந்தர். C, இந்தப் படம் மகத்தான வெற்றிபெறத் தனது வாழ்த்துகளையும் தெரிவித்திருக்கிறார்.
இந்த விலகல், ரஜினி ரசிகர்களுக்கும், சுந்தர். Cயின் ரசிகர்களுக்கும் ஒரு ஷாக் செய்தியாக வந்திருக்கிறது! இந்த படத்தை பற்றிய அடுத்த அறிவிப்பு என்னவாக இருக்கும் என்றுத் திரையுலகம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications