பாக்யராஜை சும்மா விட கூடாது.. கண்டிப்பா இதை பண்ணனும்.. நடிகர் ஆர். சுந்தர்ராஜன் எமோஷனல்
சென்னை: வெள்ளி திரையில் பல திரைப்படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்து நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் இருந்த ஆர். சுந்தர்ராஜன் தற்போது இயக்குனர் பாக்யராஜ் பற்றி பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.
ஆர். சுந்தர்ராஜன் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் கதாநாயகனின் அப்பாவாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் பாக்யராஜ் பற்றி காட்டமாக சுந்தர்ராஜன் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் என்னதான் பேசி இருக்கிறார் என்பதை பற்றி விரிவாக பார்ப்போம்.
அந்த வகையில் பல நடிகைகள் நடிகர்கள் வெள்ளித்திரையில் கொடி கட்டி பறந்து பிறகு சின்னத்திரையில் அறிமுகம் ஆகி இருக்கிறார்கள். அந்த வரிசையில் நடிகராகவும், இயக்குனராகவும், திரை கதை எழுத்தாளர் என பலம் முகம் கொண்ட சுந்தர்ராஜன் விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை சீரியலில் மூலமாக சின்னத்திரை ரசிகர்களையும் கவர்ந்து வருகிறார்.
அதுபோல நடிகர் சுந்தர்ராஜன் அன்று சிந்திய ரத்தம் என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமாகி பயணங்கள் முடிவதில்லை, வைதேகி காத்திருந்தால், ராஜாதி ராஜா, அம்மன் கோவில் கிழக்காலே, மெல்ல திறந்தது கதவு என பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். வெள்ளி திரையில் இவரை குணசித்திர வேடங்களிலும், காமெடியாகவும் பார்த்திருந்த ரசிகர்களுக்கு இப்போது இவர் சின்னத்திரையில் அமைதியின் சிகரமாக ஒரு குடும்பத்தின் தலைவராக இவரை பார்ப்பதற்கு வித்தியாசமாகத்தான் இருக்கிறது.
இந்த நிலையில் ஆர் சுந்தர்ராஜன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தன்னுடைய சினிமா அனுபவங்கள் குறித்து பேசி இருக்கிறார். அப்போது இயக்குனர் பாக்கியராஜ் பற்றியும் பேசி இருக்கிறார். பாக்கியராஜ் திரைப்பட இயக்கத்தின் மூலமாக மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறார். ஒரு இயக்குனராக மட்டுமல்லாமல் பல படங்களில் நடிகராகவும் நடித்திருக்கிறார்.
16 வயதினிலே திரைப்படத்தின் உதவி இயக்குனராக அறிமுகமான பாக்கியராஜ் பிறகு சொந்தமாக படங்களை இயக்க ஆரம்பித்தார். அதிலும் சுவரில்லா சித்திரங்கள் என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அதற்கு பிறகு பல திரைப்படங்களை இயக்கி முன்னணி இயக்குனராகவும் இயக்கி வந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் இவர் பெரிய அளவில் திரைப்படங்களை இயக்குவது இல்லை. இதை குறிப்பிட்டு இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன் பாக்கியராஜ் எனும் இயக்குனர் தமிழ் சினிமாவை ஒரு படி மேலே கொண்டு சென்றவர். ஆனால் இக்கால இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் அவரின் கதையை விரும்பவில்லை.
அவர்கள் இந்த கால ஸ்டைலில் படங்களை விரும்புகிறார்கள். ஆனால் தமிழ் சினிமா என்றும் பாக்யராஜை மறக்கக்கூடாது. மேலும் ஒவ்வொரு இயக்குனர்களும் தங்களது படத்தினை இயக்கும்போது பாக்யராஜ் மூத்த இயக்குனர் எனும் மரியாதையில் அவரையும் அழைத்து படத்திற்கான கதையை விவாதிக்கலாம் என்றும் சுந்தர்ராஜன் பேசியிருந்தார்.
அதோடு பாக்யராஜ் கதை பழைய கதை என்று நினைத்தால் அவருக்கு முன்பே சினிமாவில் நடிக்க ஆரம்பித்த ரஜினி, கமல் இன்று வரை முன்னணி கதாநாயகர்களாக வரவில்லையா? என்றும் தன்னுடைய ஆதங்கத்தை ஆர் சுந்தர்ராஜன் கொட்டி இருக்கிறார். இந்த வீடியோவை பலர் பாராட்டி வருகிறார்கள். பாக்கியராஜ் இயக்கி நடித்த முந்தானை முடிச்சு, தாவணி கனவுகள் போன்ற திரைப்படம் இப்போதும் அதிகமான ரசிகர்களை கவர்ந்த லிஸ்டில் இருக்கிறது.
-
பாரதிராஜாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு.. தீவிர மருத்துவ கண்காணிப்பு! இமய இயக்குனருக்கு என்ன ஆச்சு -
"குடும்ப வாழ்க்கை” மொத்த சர்ச்சைகளுக்கும் போல்டாக முற்றுப்புள்ளி வைத்த நடிகை சுகன்யா.. பாராட்டும் ரசிகர்கள் -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
Bharathiraja: இறப்பதற்கு முன் பாரதிராஜா கூறிய கடைசி ஆசை? ரசிகர்களை கலங்க வைக்கும் நினைவுகள்! -
பாரதிராஜா, இளையராஜா வாழ்க்கையில் நடந்த "ஒரே” துயரம்.. நம்பிக்கை நாயகனுக்கு இப்படியா நடக்கணும்! -
Bharathiraja: "கூட இருப்பவர்களையே நம்ப முடியாது..." ரசிகர்களை கலங்க வைக்கும் பாரதிராஜாவின் கடைசி பேட்டி -
திரிஷா பிரண்ட் நடிகை சார்மியோட மட்டும் ஃப்ரெண்ட்ஷிப் வச்சுக்காதீங்க! எச்சரித்த விஜய் சேதுபதி! பின்னணி காரணம் -
"29 வயசுல உங்களுக்கு இந்த ஃபீலிங் வந்திருக்கா? Netflix-ல் டிரெண்டாகும் ‘29’ படம் ஏன் இளைஞர்களின் மனசை கலக்குது!" -
மன்னிப்பு கேட்டும் ஓயாத சர்ச்சை... ரவி மோகனுக்கு என்ன ஆச்சு? நீதிமன்றத்துக்கு தெரியாதா? பிரபலம் கேள்வி -
100ஐ தொடாமல் போன சூப்பர் குட் பிலிம்ஸ் RB சௌத்ரி.. காற்றில் கரைந்த ரியல் ஜென்டில்மேனின் கடைசி ஆசை -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய்












Click it and Unblock the Notifications