பாம்பே ஞானம் தெரியாம பேசிட்டாங்க.. எதிர்நீச்சல் முடிய காரணமே இதுதான்.. இயக்குனர் கொடுத்த விளக்கம்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் சீரியல் கடந்த ஜூன் 8-ம் தேதியோடு முடிவுக்கு வந்தது. அதை தொடர்ந்து அந்த சீரியலில் இயக்குனர் திருச்செல்வம் முதல் முறையாக அந்த சீரியல் எதற்காக விரைவில் முடிவுக்கு வந்தது என்பது குறித்து விளக்கம் கொடுத்திருக்கிறார். அப்போது அந்த சீரியலில் நடித்த நடிகை பாம்பே ஞானம் கொடுத்த பேட்டி குறித்தும் திருச்செல்வம் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலை அவ்வளவு சீக்கிரத்தில் யாராலும் மறந்து இருக்க முடியாது. அந்த சீரியல் கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2024 ஜூன் மாதம் எட்டாம் தேதி வரைக்கும் ஒளிபரப்பாகி வந்தது. சீரியல் தொடங்கி ஒரு சில வாரங்களிலேயே டிஆர்பியில் டாப் 3 இடங்களுக்குள் வந்துவிட்டது.

அதுபோல இது சீரியலில் நடித்த நடிகர்கள் இதற்கு முன்பு பல சீரியல்களில் நடித்திருந்தாலும் அதில் எல்லாம் கிடைக்காத பெயரும் புகழும் இந்த சீரியல் மூலம் அவர்களுக்கு கிடைத்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த சீரியல் குறுகிய காலத்திற்குள் முடிவுக்கு வந்துவிட்டது. இது பெரிய அளவில் பேசப்பட்டது. அதிலும் கடந்த சில மாதங்களாக நெகட்டிவ் கருத்துக்கள் அதிகமாக வந்தது. இந்த நிலையில் இந்த சீரியலில் முடிவுக்கு குறித்து இயக்குனர் திருச்செல்வம் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அதில் திருச்செல்வம் பேசுகையில் எதிர்நீச்சலின் திடீர் முடிவு குறித்து வெளியே பலவிதமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதுவெல்லாம் உண்மை கிடையாது. சேனல் தரப்பில் இருந்து எனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதால் சீரியல் முடிந்துவிட்டது என்று சிலர் கூறியிருக்கிறார்கள். அதிலும் இந்த சீரியலில் நடித்த நடிகை பாம்பே ஞானம் கூட பேட்டியில் பேசியிருந்தார். அதை நானும் பார்த்தேன். ஆனால் அது முழுக்க உண்மை கிடையாது.
சேனல் தரப்பில் டிஆர்பிக்காக என்னிடம் வருத்தப்பட்டது உண்மைதான். ஆனால் முடிக்க சொல்லி அவர்கள் கட்டாயப்படுத்தவில்லை. டிஆர்பி அவர்களுக்கும் முக்கியம். ஆனால் எனக்கு டிஆர்பி முக்கியம் கிடையாது. ஆனால் நான் திடீர் முடிவு எடுப்பதற்கு காரணம் சீரியலை இனி இன்னொரு கோணத்தில் கொண்டு வர வேண்டும் என்றுதான். அடுத்ததாக இதே சீரியலில் இன்னொரு பரிமாணத்தில் கொண்டுவர முடிவெடுத்து இருக்கிறேன்.
ஆனால் அது எதிர்நீச்சல் 2ஆக இருக்கும் என்று நம்புவதை விடவும் வேறு கோணத்தில் வேறு விதத்தில் இருக்கும் என்று நம்பலாம். அதற்காகத்தான் நான் இந்த முடிவை எடுத்தேன். சீரியல் கதையில் மாற்றம் செய்வதில் எனக்கு உடன்பாடு கிடையாது. மக்கள் ஒரு விதமான முடிவை எதிர்பார்த்து இருக்கிறார்கள். அது நான் கொண்டு வரவில்லை என்பது அவர்களுக்கு வருத்தத்தை கொடுத்து இருக்கலாம். ஆனால் இந்த சீரியலில் மையக் கருத்தே நான்கு பெண்கள்தான். அவர்களை சுற்றி தான் கதை இருக்கிறதே தவிர சீரியலில் வில்லன் குணசேகரன் திருந்த வேண்டும் என்று நினைப்பதெல்லாம் எனக்கு சரியா படல.
இது விட இன்னொரு சூப்பரான கதையை நான் தேடிக் கொண்டிருக்கிறேன். அது வந்தபோது இந்த சீரியல் பற்றி பெரிதாக யாரும் பேசாமல் விட்டுவிடுவார்கள். இதுதான் மக்களின் மனநிலை. உண்மை எதுவும் தெரியாமல் சிலர் தவறாக பேசிக் கொண்டிருப்பது தான் பார்ப்பதற்கு வருத்தமாக இருக்கிறது என்று அந்த பேட்டியில் திருச்செல்வம் பேசி இருக்கிறார்.
அதே நேரத்தில் எதிர்நீச்சல் சீரியலில் நடித்த பாம்பே ஞானம் சில மாதங்களுக்கு முன்பு கொடுத்த பேட்டியில் எதிர்நீச்சல் சீரியல் முடிவு செய்வதற்கு காரணம் இரவு நேரத்தில் எதோ ஒரு மெயில் வந்தது என்று சிலர் சொல்றாங்க அந்த மெயிலில் என்ன இருந்தது என்று யாருக்கும் தெரியாது. ஆனால் சேனல் தரப்பில் இருந்து சீரியல் கதையை மாற்றம் ஏற்படுத்துவதற்கு கூட டைம் கொடுக்காமல் பத்து நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டதால் தான் சீரியல் முடித்து விட்டார்கள் என்று அவர் பேசி இருந்தார். அதற்கு திருச்செல்வம் இப்போது விளக்கம் கொடுத்திருப்பது இணையத்தில் அதிகமாக பேசப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications