சீரியல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி! எதிர்நீச்சலுக்கு போட்டி வந்தாச்சு.. புது “அப்டேட்” கொடுத்த திருமுருகன்
சென்னை: இயக்குனர் திருமுருகன் இயக்கும் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு இருக்கும் நிலையில் அவர் கடைசியாக "கல்யாண வீடு" என்ற சீரியலை இயக்கி நடித்து இருந்தார். அதற்கு பிறகு எந்த சீரியலிலும் நடிக்காமல் இருக்கிறார்.
இந்த நிலையில் நேற்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்த இயக்குனர் திருமுருகன் அவருடைய யூடியூப் சேனலில் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் இந்த புத்தாண்டில் புதிய படைப்பு வரவிருக்கும் தகவலையும் ஷேர் செய்து இருக்கிறார்.

அந்த வகையில் சமீப காலமாகவே சீரியலில் அரைத்த மாவையே அரைத்து கொண்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பொதுவாக இப்போது உள்ள பெரும்பாலான சீரியல்களில் கதாநாயகன் பெரிய பணக்கார வீட்டு பையனாக இருக்கிறார். அம்மா பேச்சை தட்டாத நபராக இருக்கிறார். ஆனால் கதாநாயகி ரொம்பவும் கஷ்டப்படுகிற பெண்ணாக இருக்கிறார்.
எதிர்பார்க்காத சூழ்நிலையில் கதாநாயகன் கதாநாயகியை கல்யாணம் செய்கிற மாதிரி இருக்கிறது. ஆனால் இருவரும் ஆரம்பத்தில் திருமணத்தில் விருப்பமில்லாமல் திருமணம் செய்கிறார்கள். அதற்குப் பிறகு அந்த கதாநாயகனை ஒருதலையாக காதலிக்கும் அத்தை பொண்ணு அல்லது மாமன் பொண்ணு ஒருவர் இருப்பார். இந்த கதாநாயகனும் கதாநாயகியும் சேரவிடாமல் அவர் தொடர்ந்து பிரச்சனைக்கு மேலே பிரச்சனை பண்ணிக் கொண்டு இருப்பார்.

அதுபோல தனக்கு பிடிக்காத ஏழை மருமகளோடு தன்னுடைய மகன் சேரக்கூடாது என்று மாமியார் ஒரு பக்கம் வில்லத்தனம் செய்து கொண்டிருக்கிறார். இப்படித்தான் பல சீரியல்கள் இருக்கிறது. இது சின்னத்திரை ரசிகர்களை அதிருப்தி அடைய வைத்திருக்கிறது.
அதே நேரத்தில் ஒரு சில இயக்குனர்களின் சீரியல் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் தனித்துவத்தோடு வரவேற்பை பெற்றுவிடும். அந்த வகையில் ஒருவர் தான் இயக்குனர் திருமுருகன். இயக்குனர் திருமுருகன் தான் இயக்கி நடித்த நாதஸ்வரம் சீரியலில் கின்னஸ் சாதனையை படைத்திருந்தார். அது பலருக்கும் தெரிந்ததாக தான் இருக்கும்.
அதாவது நாதஸ்வரம் சீரியலில் ஒரு எபிசோடில் தொடர்ச்சியாக 23 நிமிடங்கள் 25 வினாடிகள் வரை நீண்ட தொடர்ச்சியான கேமரா ஷாட் செய்ததற்காக அவர் கின்னஸ் உலக சாதனை பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார். இப்படி புதியதாக பல விஷயங்களை தன்னுடைய சீரியலில் கொண்டு வரும் திருமுருகன் திரைப்படங்கள், குறும்படங்கள், சீரியல்கள் என்று பலவற்றை இயக்குகிறார்.
அதிலும் அவர் இயக்கிய மெட்டி ஒலி, நாதஸ்வரம், குலதெய்வம், கல்யாண வீடு போன்ற சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. ஆனால் கல்யாண வீடு சீரியலுக்கு பிறகு திருமுருகன் எந்த சீரியலையும் இயக்கவில்லை. இதனால் அவருடைய ரசிகர்கள் அவர் சீரியல் எப்போது வரும் என்று எதிர்பார்த்தனர். இந்த நிலையில் நேற்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருமுருகன் அவருடைய" Thiru tv" என்ற யூடியூப் பக்கத்தில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து இந்த புத்தாண்டில் புதிய படைப்பு வரவிருக்கும் தகவலையும் பகிர்ந்து இருக்கிறார்.
இந்த நிலையில் இந்த தகவலை பார்த்ததும் ரசிகர்கள் எதிர்நீச்சல் சீரியலுக்கு போட்டி சீரியல் விரைவில் வரப்போகிறது என்று கமெண்ட்களை வெளியிட்டு வருகிறார்கள். காரணம் எதிர்நீச்சல் சீரியல் இயக்குனர் திருச்செல்வம் இயக்கத்தில் வெளியாகி வருகிறது. இந்த சீரியல் ஆரம்பத்தில் அதிகமான பாசிட்டிவ் கருத்துக்களை பெற்று வந்த நிலையில் இப்போது சமீபமாக சீரியலுக்கு அதிகமான நெகட்டிவ் கருத்துக்கள் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications