ராதிகா எனும் ராட்சசி.. 2 மணி நேர சம்பவம்! எஸ்பிபி வாழ்வை மாற்றிய நிமிடம்.. இயக்குனர் வசந்த் த்ரோபேக்
சென்னை: பாடகராக பலருடைய மனம் கவர்ந்த எஸ்பி பாலசுப்ரமணியனை முதல் முறையாக நடிகராக மாற்றிய பெருமை இயக்குனர் வசந்தை சாரும். ஆனால் வசந்த் இந்த முயற்சியை எதற்காக எடுத்தார் என்பது பற்றியும் கேளடி கண்மணி திரைப்படத்தில் நடந்த அனுபவங்கள் குறித்து சில வருடங்களுக்கு முன்பு பேசிய வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குனர் வசந்த் கே. பாலச்சந்தரிடம் உதவியாளராக இருந்து வந்த நிலையில் முதல் முறையாக தயாரிப்பாளர் விவேக் சித்ரா மூலமாக தனக்கு திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில் முதல் திரைப்படத்திலேயே பெரிய அளவில் வசந்த் பிரபலம் அடைந்திருந்தார்.

நடிகர் சிவாஜி, ரஜினி, கமல், சிவக்குமார், மோகன், ராமராஜன் என்று முன்னணி ஹீரோக்களின் படங்கள் மட்டுமே திரைப்பட அரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த காலகட்டத்தில் முதல் முறையாக ஒரு பாடகரை ஹீரோவாக்கி அவரது நடிப்பை ஜெயிக்க வைத்தவர் இயக்குனர் வசந்த் தான்.
அதுவரைக்கும் பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியன் பல பாடல்களை பாடி பிரபலமாக இருந்த காலகட்டத்தில் அவரை நடிகராக யோசித்து இயக்குனர் வசந்த் எஸ்பிபி இடம் பேசி இருக்கிறார். ஆனால் அப்போது எஸ்பிபி ரொம்பவே பிஸியாக இருந்திருக்கிறார். ஒரு நாளைக்கு 15 பாடல்களுக்கு பாடிக்கொண்டிருக்கிறார். தமிழில் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் பிஸியாக இருந்த காலகட்டத்தில் என்னால் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க முடியாது எனக்கு பாட்டு பாடுவதற்கு நேரம் சரியாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
ஆனாலும் வசந்த் விடுவது ஆக இல்லையாம். சார் இது உங்களை நினைச்சே எழுதின கதை நீங்க நடிச்சா அருமையாக இருக்கும் என்று மனதை மாற்றி இருக்கிறார். அப்போது எஸ்பிபி என்னால் ஒரு நாள் முழுக்க கால் சீட்டு தர முடியாது. ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் கால்ஷீட் தான் தர முடியும் ஓகேவா என்று கேட்டிருக்கிறார். அதற்கு வசந்த் போதும் சார் என்னால் இந்த இரண்டு மணி நேரத்தை வைத்தே படத்தை எடுத்து முடித்து விடுவேன் என்று சொல்லி இருக்கிறார்.
ஒரு கதாநாயகனுக்கு ஒரு நாளைக்கு இரண்டு மணி நேர கால்ஷீட் வைத்து நடித்து முடித்த படம் என்றால் இதுவாக தன் இருக்கும் என்று நினைக்கிறேன் என வசந்த் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார். அதோடு எஸ்பிபி எனக்கு நடிப்பு பீல்டு இல்லை என்றாலும் பாட்டு திறமை இருக்கு அதனால் நான் இன்னொரு பக்கமாக போய் விடுவேன் ஆனால் உங்களுக்கு இது முதல் படம் இதில் போய் இப்படி ரிஸ்க் எடுக்க வேண்டுமா என்று எஸ்பிபி வசந்த் இடம் கூறி இருக்கிறார்.
அதற்கு வசந்த் உங்களைத் தவிர வேறு யாராலும் இந்த கேரக்டரில் நடிக்க முடியாது நானும் நடிக்க வைக்க மாட்டேன் என்று விடாப்பிடியாக சொல்ல, மறுக்க முடியாமல் எஸ்பிபி அந்த திரைப்படத்தில் நடிக்க தொடங்கி இருக்கிறார். அதிலும் அந்த திரைப்படத்தில் ஒவ்வொரு காட்சிகளையும் இயக்குனர் செதுக்கி இருப்பார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த திரைப்படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா தான் பாடல்களை இசை அமைத்திருந்தார்.
அதிலும் கற்பூர பொம்மை ஒன்று, நீ பாதி நான் பாதி, இந்த மண்ணில் காதல் இன்றி யாரும் வாழ்ந்திட முடியுமோ, தென்றல் தான் இது... போன்ற பாடல்கள் இப்போதும் ரசிகர்களின் எவர்கிரீன் ப்ளே லிஸ்டில் இடம் பிடித்திருக்கிறது. ஆனாலும் இந்த திரைப்படம் வசந்த்தின் முதல் திரைப்படம் என்று சொல்ல முடியாத அளவிற்கு பெரிய அளவில் பாராட்டுகளையும் பெற்று வந்தது.
நடுத்தர வயது ஆணின் வாழ்க்கையில நடக்கும் போராட்டங்கள் மற்றும் காதல், மகளின் பாசம் போன்ற மொத்த உருவமாக இந்த திரைப்படம் அமைந்திருந்தது. அதிலும் இந்த திரைப்படத்தில் ராதிகாவின் நடிப்பும் வேற லெவலில் இருக்கும் அது குறித்தும் அந்த பேட்டியில் வசந்த் பெருமையாக பேசி இருக்கிறார். அதாவது நான் பார்த்து மிரண்டு போனவர் ராதிகா தான்.
அவருடைய நடிப்பை பார்த்து நான் ஆடிப் போய் விட்டேன். நடிப்பின் ராட்சசி என்று ராதிகாவை சொல்லலாம். அந்தப் படத்தில் ராதிகாவின் அப்பாவும் அம்மாவும் இறந்து போய் விடுவார்கள். அதற்கான சூட்டிங் எடுக்கும் போது நான் ராதிகாவிடம் பேசி இருந்தேன். ஆனால் ராதிகா இதை நாளை எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லி இருந்தார். நானும் சரி என்று சொல்லி இருந்தேன்.
அடுத்த நாள் 350 அடி சீனை ஒரே டைட்டில் நடித்து கதற விட்டுவிட்டார் ராதிகா. அவர் நடித்து முடித்ததும் நான் ஷார்ட் ஓகே சொன்னதும் மொத்த யூனிட்டும் கைதட்டியது. என் படத்தில் நான் இப்படி பார்த்ததே முதல் தடவை. ராதிகாவின் அப்பா எம் ஆர் ராதா நடிகவேள் என்றால் அவருடைய மகள் ராதிகா நடிகையர்வேள் என்று ராதிகா குறித்தும் அந்த வீடியோவில் இயக்குனர் வசந்த் பெருமையாக பேசி இருக்கிறார்.
-
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications