“பச்சை துரோகி.. முதுகில் குத்திவிட்டான்” நடிகரை பற்றி ஆதங்கப்பட்ட மறைந்த இயக்குநர் விக்ரம் சுகுமாரன்
சென்னை: 'மதயானைக் கூட்டம்' 'இராவண கோட்டம்' ஆகிய திரைப்படங்களை இயக்கிய விக்ரம் சுகுமாரன் காலமானார். முதல் படத்தின் மூலமே கவனம் ஈர்த்திருந்தாலும் விக்ரம் சுகுமாரனுக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தனக்கு ஒரு நடிகர் துரோகம் செய்துவிட்டதாக முன்பு கூறி இருந்தார் விக்ரம் சுகுமாரன்.
இயக்குநர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் இயக்குநர் விக்ரம் சுகுமாரன். வெற்றிமாறன் இயக்கிய 'ஆடுகளம்' திரைப்படத்தில் மதுரை வட்டார மொழி பயிற்றுநராகவும் படத்தின் வசனகர்த்தாவாகவும் பணியாற்றினார்.

அதைத்தொடர்ந்து, 'மதயானைக் கூட்டம்' படத்தின் மூலம் விக்ரம் சுகுமாரன் இயக்குநராக அறிமுகமானார். கதிர், ஓவியா, கலையரசன், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்த அப்படம், இன்றும் விமர்சகர்கள் மத்தியில் பாராட்டப்படும் படமாக இருக்கிறது. ஆனாலும், 'மதயானைக் கூட்டம்' படத்துக்கு பிறகு விக்ரம் சுகுமாரனுக்கு தொடர்ச்சியாக இயக்குநர் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
பல ஆண்டுகள் கழித்து நடிகர் ஷாந்தனுவை வைத்து 'இராவண கோட்டம்' திரைப்படத்தை இயக்கினார். அப்படமும் பெரிதாக கவனம் பெறவில்லை. அந்தப் படத்திற்காக அளித்த நேர்காணல் ஒன்றில் தன் மீது சாதிய முத்திரை குத்தப்படுவதாக வேதனையுடன் கூறி இருந்தார் விக்ரம் சுகுமாரன்.
மேலும், தனக்கு ஒரு நடிகர் துரோகம் செய்துவிட்டதாக அந்த சமயத்தில் விக்ரம் சுகுமாரன் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், "மதயானைக் கூட்டம் திரைப்படம் இயக்கியதற்கு பிறகு எனக்கு வேறு பட வாய்ப்பு வரவில்லை. நானும் யாரும் அழைக்கவில்லை என்றுதான் நினைத்தேன். ஆனால், வந்த வாய்ப்புகளை எல்லாம் ஒருவன் தடுத்து இருக்கிறான் என்பதை இன்றுதான் தெரிந்து கொண்டேன்.
அவன் வேறு யாரும் அல்ல அவனை நான்தான் நடிகன் ஆக்கினேன். பச்சை துரோகி... கைக்கூலியாக என் எதிரிக்கு செயல்பட்டிருக்கிறான். முதுகில் குத்திவிட்டான். இதைக் கேட்டதிலிருந்து ஆண்டவன் மீதுதான் ஆத்திரம் வருகிறது. ஆத்திரப்பட்டு ஒன்றும் ஆகப் போவது இல்லை" எனக் கூறி இருந்தார். விக்ரம் சுகுமாரனின் அந்தப் பதிவு சினிமா உலகில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில், மாரடைப்பு காரணமாக விக்ரம் சுகுமாரன் நேற்று நள்ளிரவில் காலமானார். மதுரையில் தயாரிப்பாளர் ஒருவரிடம் கதை சொல்லிவிட்டு, இரவு பேருந்து ஏறிய போது, அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் விக்ரம் சுகுமாரன் காலமானார். விக்ரம் சுகுமாரன் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications