முதல் முறையாக சீரியலில் இருந்து விலகுவதற்கு விளக்கம் கொடுத்த திவ்யா.. "ரொம்ப தொந்தரவு கொடுக்கிறாங்க"
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லமா சீரியலில் மேகா கேரக்டரில் நடித்து வந்த திவ்யா கணேஷ் அந்த சீரியல் இருந்து தான் விலகியதற்கான காரணத்தை பற்றி முதல் முறையாக பேசி இருக்கிறார்.
ரொம்பவே ஆசைப்பட்டு ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்தை நான் என்னுடைய சொந்த காரணத்தால் விட்டு விலகவில்லை என்று அங்கே நடப்பது பற்றி என்று அவர் லைவில் பேசியிருக்கிறார்.

சன் டிவி சீரியலில் அறிமுகம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி கேரக்டரில் நடிக்கும் திவ்யா கணேஷ் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறார். இவர் இதற்கு முன்பு ஜீ தமிழில் ஒளிபரப்பான லட்சுமி வந்தாச்சி மற்றும் சுமங்கலி போன்ற பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். ஆனாலும் இவர் அறிமுகமானது சன் டிவியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி சீரியல் மூலமாகத்தான். இந்த சீரியலின் மூலமாக ரசிகர்களின் மத்தியில் இவர் அறிமுகமானாலும் இவருக்கென்று தனி ரசிகர்கள் உருவானது பாக்கியலட்சுமி சீரியல்தான்.

ரசிகர்களை கவர்ந்த ஜெனி
திவ்யா கணேஷை இப்ப வரைக்கும் ரசிகர்கள் பலர் ஜெனி என்று தான் கூப்பிட்டு வருகின்றனர். அந்த அளவிற்கு பாக்கியலட்சுமி சீரியல் மூலமாக இவருக்கு நல்ல ஒரு வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த சீரியலில் மாமியாருக்கு சப்போர்ட் பண்ணும் மருமகளாக இவர் இருந்து வருகிறார். அதனாலே பலர் இவரை போல ஒரு மருமகள் நமக்கு கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று இவரை குறிப்பிட்டு கூறி வருகின்றனர். சீரியல் மூலமாக குடும்பப் பெண்களின் மனதையும் சமூக வலைத்தளத்தின் மூலமாக இளைஞர்களையும் கவர்ந்திருக்கிறார். இந்த நிலையில் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா சீரியலிலும் நடித்து வருகிறார்.

செல்லம்மா சீரியலில் மேகா
ஆரம்பத்தில் செல்லமா சீரியலில் கதாநாயகியாக இவர்தான் இருப்பார் என்றே நினைத்த ரசிகர்களுக்கு இவர் தான் அந்த சீரியலில் வில்லி என்பது அதிர்ச்சியை கொடுத்தது. ஏற்கனவே லட்சுமி வந்தாச்சி சீரியலில் திவ்யா வில்லியாக நடித்திருந்தாலும் அது அந்த அளவிற்கு அப்போது தாக்கத்தை ஏற்படுத்தவில்லை ஆனால் இப்போது இவர் பாசிட்டிவ் கேரக்டரில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமாகி இருக்கும் நேரத்தில் திடீரென இவர் வில்லியாக நடிப்பதை பலர் ஏற்றுக் கொள்ளாமல் தான் இருந்து வருகின்றனர். செல்லமா சீரியலில் மேகா கேரக்டரில் இவர் நடித்து வருகிறார்.

இதுதான் உண்மையான காரணம்
இந்த நிலையில் தான் மேகா கேரக்டரை அதிகமாக விரும்பி ஏற்று கொண்டேன். இதுவரைக்கும் நான் நடித்த எல்லா சீரியல்களிலும் சாஃப்ட்டான கேரக்டரில் நடித்ததால் தனக்கு நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு தான் இந்த கேரக்டரை நடித்து வந்தேன். ஆனால் அங்கே ஒரு சிலர் என்னை வேலை செய்ய விடாமல் தடுக்கிறார்கள். அது மட்டும் அல்லாமல் நான் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவதற்கு காரணம் என்னுடைய சொந்த பிரச்சனை என்று சொல்லிவிட சிலர் கூறினார்கள் ஆனால் நான் அப்படி சொல்ல மாட்டேன். என்னுடைய சொந்த விஷயத்தினால் நான் வெளியேறவே இல்லை. என்னை அங்கே சிலர் வேலை செய்ய விடாமல் சிலர் தொந்தரவு செய்வதால் தான் இந்த சீரியலில் இருந்து விலகுகிறேன் என்று உருக்கமாக பேசியிருக்கிறார். இனி எப்போதும் நீங்கள் பாக்கியலட்சுமி ஜெனியாக பார்க்கலாம் என்று கூறி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications