கண்ணான கண்ணே! குழந்தை புகைப்படத்தை போட்டு நடிகை திவ்யா ஸ்ரீதர் உருக்கம்.. அர்னவ் மனம் இறங்குவாரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: எந்த பிரச்சினையாக இருந்தாலும் ஒரு தாய் தனது குழந்தைக்கு எப்போதும் துணையாக இருப்பார் என சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர் தெரிவித்திருந்தார்.

சின்னத்திரை நடிகர்களான அர்னவ் மற்றும் திவ்யா ஸ்ரீதர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமான சில நாட்களிலேயே இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு போலீஸ் ஸ்டேஷன் வரை இவர்களது பஞ்சாயத்து சென்றது.

செல்லம்மா தொடரில் நடித்து வரும் அன்ஷிதா என்ற நடிகையுடன் தொடர்பு வைத்துக் கொண்டு அர்னவ் தன்னை விட்டு போய்விட்டார் என்றும் அடித்து துன்புறுத்துகிறார் என்றும் திவ்யா ஸ்ரீதர் புகார் கூறினார். அதே சமயம் திவ்யாவின் குற்றச்சாட்டுக்கு அன்ஷிதா எந்த மறுப்பும் சொல்லவில்லை.

மேலும் தான் கர்ப்பமாக இருந்தது தெரிந்தும் தன்னை அவர் கடுமையாக தாக்கியதாகவும் தெரிவித்திருந்தார். தனது கர்ப்பம் கலைந்து விடுமோ என்ற அச்சம் இருந்ததாகவும் திவ்யா கவலை தெரிவித்திருந்தார். அவருக்கு சமூகவலைதளங்களில் ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வந்தனர்.

மேலும் திவ்யாவுக்கு அவருடன் சீரியலில் நடித்தவர்கள் வளைகாப்பு செய்தனர். டெலிவரிக்கு 10 நாட்களுக்கு முன்பு கூட டெலிவரிக்கு நாள் நெருங்கிவிட்டது, ஆனாலும் எனக்கு உதவிக்கு ஆள் இல்லை என இன்ஸ்டாவில் கவலை தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அர்னவ் அன்ஷிதாவுடன் மிகவும் நெருக்கம் காட்டி வருவதாகவும் திவ்யா புகார் கூறியிருந்தார்.

Divya Shridhar recent post about her daughter

இருவரும் சேர்ந்து அடிக்கடி ரீல்ஸ் புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தனர். இந்த நிலையில் திவ்யாவுக்கு பெண் குழந்தை பிறந்ததும் அந்த குழந்தையை கவனிப்பது, நடிப்பது என திவ்யா இருந்து வந்தார். இந்த நிலையில்தான் அர்னவ் தன்னை போலவே பல பெண்களை ஏமாற்றியுள்ளதாக அவரால் ஏமாற்றப்பட்ட ஒரு பெண் தற்கொலைக்கு காரணமாக அர்னவ் இருந்ததாகவும் பேட்டி அளித்திருந்தார்.

மேலும் அது தொடர்பான ஆதாரங்களை திவ்யா வெளியிட்டுள்ளார். திவ்யாவின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள அர்னவ், முதல் கணவருடன் வாழ்ந்து கொண்டிருக்கும் போதே திவ்யா என்னுடன் கள்ளத்தொடர்பில் இருந்து என்னை ஏமாற்றினார். மேலும் எனது கேரியரை காலி செய்ய ஈஸ்வருடன் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளார். அவருடனும் திவ்யாவுக்கு கள்ளத் தொடர்பு இருக்கிறது.

அதற்கான ஆதாரங்களை நான் விரைவில் வெளியிடுவேன் என தெரிவித்திருந்தார். நாள்தோறும் திவ்யாவும் அர்னவ்வும் மாற்றி மாற்றி புகார்களை கூறி வந்தனர். இந்த நிலையில் இன்ஸ்டாவில் திவ்யா தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் எந்த பிரச்சினையாக இருந்தாலும் ஒரு தாய் தனது குழந்தைக்கு எப்போதும் துணையாக இருப்பார் என கூறியுள்ளார்.

குழந்தையை கட்டி அணைத்தபடி ஊஞ்சலில் உட்கார்ந்துள்ளார். குழந்தையின் முகம் நன்றாக தெரிகிறது. இதை பார்த்த ரசிகர்கள் குழந்தை துரதிருஷ்டவசமாக அப்பாவை போல் உள்ளது. ஆனால் உங்களுடைய நல்ல பண்பு அந்த குழந்தைக்கு இருக்கும் என்பது உறுதி என ஒரு நெட்டிசன் கூறியுள்ளார். விண்ணுலகில் இருந்து வந்த தேவதை என ஒரு வலைஞர் தெரிவித்துள்ளார். நிறைய பேர் குழந்தை அழகாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மற்றொரு வீடியோவில் கண்ணான கண்ணே பாடல் ஒலிபரப்பப்படுகிறது. குழந்தையை ஊஞ்சலில் வைத்துக் கொண்டு கொஞ்சி வருகிறார். எப்போதுமே பெண் குழந்தைகள் தாயின் பொக்கிஷம் என தெரிவித்துள்ளார். குழந்தையின் பிஞ்சு சிரிப்பை பார்த்துவிட்டு அர்னவ் உங்களிடமே வந்துவிடுவார் அக்கா என பலர் ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள். ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரேக் கிடைக்கும் போது தனது குழந்தையை கொஞ்சி வீடியோ புகைப்படங்களை போட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+