கிராமங்களுக்கு உதவிய டிஸ்கோ சாந்தி.. இப்படி ஒரு நடிகையா? சொல்லும்போதே பூரிக்குதே.. கிரேட் கிரேட்
சென்னை: பிரபல நடிகை டிஸ்கோ சாந்தியின் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. பிறருக்கு உதவுவது குறித்தும், அடுத்தவர்களின் நலன்குறித்தும் அந்த பேட்டியில் டிஸ்கோ சாந்தி பேசியிருப்பது, பலருக்கும் நெகிழ்ச்சியை கூட்டி வருகிறது.
தென்னிந்திய சினிமாக்களில் 80கள் மற்றும் 90களில் முன்னணியில் இருந்தவர் டிஸ்கோ சாந்தி.. 7 வயதிலேயே இந்திப்படத்தில் நடித்திருந்தாலும், தமிழ், தெலுங்கு மொழிகளில்தான் அதிக அளவு கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார்.

தமிழில் கமல், ரஜினி என அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள டிஸ்கோ சாந்தி, தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரியை திருமணம் செய்து கொண்டார்.
டிஸ்கோ சாந்தி: இவருக்கு தற்போது 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கிறார்கள்.. கணவரின் மறைவுக்கு பிறகு, ஹைதராபாத்தில் அமைதியாக வசித்து வருகிறார். ஆனால், கணவர் மீது உள்ள காதலால், தன்னுடைய வீட்டை விட்டு எங்குமே அதிகமாக வெளியில் வருவதில்லையாம். எனினும், அடிக்கடி யூடியூப் சேனல்களுக்கு பேட்டிகளை தந்து வருகிறார்.
அந்தவகையில், சமீபத்தில்கூட ஒரு பேட்டி தந்துள்ளார்.. இதில், தன்னுடைய குடும்ப வாழ்க்கை பற்றி நிறைய விஷயங்களை பகிர்ந்திருந்தார் டிஸ்கோ சாந்தி. அப்போது, கணவர் ஸ்ரீஹரி விட்டுச்சென்ற, சமூக தொண்டினை, தற்போதும் தொடர்வது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு டிஸ்கோ சாந்தி சொன்ன பதில்தான் இது:
சமூகசேவை: "24 மணிநேரமும் என் கணவர் பாவா நினைப்பில்தான் இருப்பேன்.. மறந்தால்தானே அவரை? பாவா கிட்ட சமூகசேவையை செய்ய சொன்னதே நான்தான்.. நான் முன்பெல்லாம் நடிக்கும்போது சின்ன சின்ன உதவிகளை செய்துள்ளேன்.. என்கிட்ட படிக்கிற விஷயத்துக்காக உதவி கேட்பார்கள். நானும் செய்து தருவேன். ஆனால், அப்போது என்னைவிட பாவா கிட்ட நிறைய காசு இருந்தது.. நிறைய படங்களில் ஹீரோவாக நடித்து கொண்டிருந்தார்.
அதனால், என்னைவிட அதிகமாக மற்றவர்களுக்கு அவரால் உதவ முடியும். அதனால்தான், அந்த ஐடியாவை நான் தந்தேன்.. பாவா எப்போது ஷூட்டிங்கில் இருந்தாலும், அவர்கிட்ட உதவி கேட்டு நிறைய பேர் வருவாங்க.. நிறைய படங்கள் அவர் கையில் இருந்தது.. 10 புரொடியூசர்கள் வீட்டிற்கே வந்து வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க.. அதனால், பணம் அதிகமாக வந்ததால், நமக்கு தேவையானதை வைத்து கொண்டு, மீதியை அடுத்தவருக்கு உதவலாம் என்று முடிவெடுத்தேன்..
குழந்தைகள்: ஒருநாள் நான் டிவி பார்த்து கொண்டிருந்தபோது, ஹைதராபாத் அருகிலுள்ள கிராமங்களில் கெமிக்கல்ஸ் பரவல் காரணமாக, குழந்தைகள் எல்லாம் கை, கால்கள் குறைபாடுகளுடன் பிறந்தன..
அப்போது பாவாவிடம், அந்த கிராமங்களை தத்தெடுக்க சொன்னேன்.. பாவாவும் அப்படியே செய்தார்.. குடிநீர் சரியில்லாத காரணத்தினால்தான், குழந்தைகள் எல்லாம் ஊனமாக பிறந்தன.. அதனால், கிட்டத்தட்ட 7 கிராமங்களில், கெட்ட தண்ணீரை மாற்றி, மினரல் வாட்டரை சப்ளை செய்தோம். இதற்காக மிஷின்களை அந்த கிராமங்களுக்கு வாங்கி தந்தோம்.. இப்போது அவர்கள் எல்லாரும் நல்லா இருக்காங்க..
ஆஸ்பிட்டல் செலவு: பாவா போனபிறகு, அதே பணியை நானும் செய்துட்டு வர்றேன்.. ஆனால், யார் கையிலும் நான் பணமாக தரமாட்டேன்.. ஸ்கூல் பீஸ், காலேஜ் பீஸ், ஹாஸ்டல் பீஸ் இதுக்கெல்லாம் ஒரு வருஷத்துக்கு சேர்த்து நானே கட்டிவிடுவேன்.. ஹாஸ்பிடல் செலவு என்றால், பில் கேட்டு, நேரடியாக ஹாஸ்பிடலுக்கே கட்டிடுவேன். மருந்து, மாத்திரைகளை வாங்கி தருவேன்.
நாம போகும்போது என்னத்த எடுத்துட்டு போறோம்? என் பசங்க கிட்டயும் இதைத்தான் சொல்லியிருக்கேன்.. வாழ்க்கையில் நல்ல நிலைமைக்கு வந்துட்டால், உங்களுக்காக கொஞ்சம் அம்மவுண்ட் வெச்சிக்கிட்டு, மற்றதை ஏழைகளுக்கு தந்துடுங்கன்னு சொல்லி வெச்சிருக்கேன்.. பாவா நிறைய சம்பாதிச்சார்.. ஆனால் எல்லாம் போயிருச்சு.. எங்க கூட இருக்கறவங்களே எங்களை ஏமாத்திட்டாங்க..
கல்யாணம்: ஆண்டவன்னு ஒருத்தன் இருக்கார்.. மனசார கூட யாருக்கும் நான் துரோகம் பண்ணதில்ல.. இன்னொரு கல்யாணம் நான் பண்ணல, இன்னொருத்தனுடன் நான் வாழல.. என்மேல இதுவரை எந்த தப்பான விஷயமும் வந்ததில்லை.. நல்லது நினைச்சால், நல்லது நடக்கும்." என்றெல்லாம் டிஸ்கோ சாந்தி அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications