ரிதன்யா பளார்னு விட்டிருக்கணும்! பிரபலத்தின் மகள் கதை தெரியுமா.. வினை தந்த வியாபார கல்யாணம்: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "உன்னால் தைரியமாக தனித்து நிற்க முடியும்" என்ற தைரியத்தை பெற்றோர்களும் மகள்களுக்கு சொல்லி வளர்க்க வேண்டும்.. ஆனால், இப்படியொரு தைரியத்தை தந்தால், விவாகரத்து வழக்குகள் அதிகமாக வரும்.. எனினும், ஒரே பாயிண்ட்தான்.. பிடிக்காதவனுடன் காலமெல்லாம் வாழ்வதைவிட, உறவை வெட்டிவிட்டுவிட்டு, தனியே வருவதே நல்லது" என்று ரிதன்யா விவகாரத்தில் டாக்டர் காந்தராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.

Metro Mail என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள டாக்டர் காந்தராஜ், "என்னால் ரிதன்யாவின் தற்கொலையை ஏற்க முடியவில்லை.. எங்க காலம் வேற, ஆனால், இன்றைய கால பெண்கள் இப்படியொரு முடிவை எடுக்க தேவையில்லை..

Television rithanya famous producer

கல்லானாலும் கணவன்

எங்களுடைய காலத்தில் கல்லானாலும் கணவன் என்றிருந்தார்கள்..இன்று பெண்களுக்கு பொருளாதார உரிமை, சுதந்திரம் வந்துவிட்டது. அதனால்தான் கணவன் சரியில்லையென்றாலும், தன் வாழ்க்கையின் முடிவை பெண்கள், துணிந்து எடுக்கிறார்கள்.. அப்படியிருக்கும்போது, ரிதன்யாவின் மரணத்தை ஏற்கவே முடியவில்லை.

தனக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை கணவன் செய்ததால், ரிதன்யா பளாரென்று ஒரு அறை விடுவதுதானே? போலீசுக்கு சென்று புகார் தந்திருக்க வேண்டியதுதானே? வசதியாக வாழ்ந்த பெண் தற்கொலை செய்து கொள்கிறார என்றால், அந்த பெண்ணுக்கு மனரீதியான தைரியத்தை பெற்றோர் கொடுக்க தவறிவிட்டார்கள் என்றே அர்த்தம்?

வக்கிரம் நிறைந்த கணவர்

கணவன் பாலியல் வக்கிரம் நிறைந்தவராக உள்ளார்.. பணக்கார வீட்டு பிள்ளை.. யாருடனும் பழகியிருக்க மாட்டார்.. காரிலேயே போய் காரிலேயே வரும் இளைஞன், மக்களிடம் பழகவேயில்லை.. செல்போனில் வரும் படங்களை பார்த்துவிட்டும், சீரியலை பார்த்துவிட்டும், அதுல வரும் விஷயங்களைதான் பிரவீனுக்கு செய்ய தோன்றியிருககும்.

கொங்கு பெல்ட்டில் மட்டும்தான் வரதட்சணை தரப்படுகிறது என்றில்லை.. காஷ்மீர் முதல் குமரி வரை வரதட்சணை கொடுமை உள்ளது.. பெண்ணின் செல்வாக்கு என்பது வரதட்சணையை வைத்தே கணிக்கப்பட்டு வருகிறது... கடன் வாங்கியாவது பெண்ணுக்கு சீர்செய்யும் கொடுமை தொடர்கிறது.. வரதட்சணை என்பது இந்தியாவில் பெண்கள் அனுபவிக்கும் கொடுமையாகும்..

பெண் வாழாமல் வந்துவிட்டால், நம்முடைய குடும்ப கவுரவம் என்னாவது? நம்ம குடும்பத்தை பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? என்று பெண்ணின் பெற்றோர்கள் கேட்பது கொடுமையான விஷயம்.. "என்ன ஆனாலும் பரவாயில்லை, நம்ம வீட்டுக்கு வந்து சேர்" என்று பெற்றோர் சொல்லியிருக்க வேண்டும். பெண்ணின் பெற்றோர் சரியில்லை, வளர்ப்பும் சரியில்லை. புருஷன் வீட்டிலும் சரியில்லை, அப்பா வீட்டிலும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால்தான், இந்த முடிவு ரிதன்யா எடுத்துள்ளார்.


நண்பர்களிடமும் பழகவில்லையா

நண்பர்களிடம் ரிதன்யா பழகியிருந்தால், அந்த நண்பர்கள் வீட்டில் ரிதன்யா சென்று தங்கியிருப்பார்.. அந்த நண்பர்களே ரிதன்யாவை காப்பாற்றியுமிருப்பார்கள்.. அந்த தைரியத்தை மகளுக்கு தராமல் விட்டுவிட்டனர. உத்தர பிரதேசம் போன்ற மாநிலத்தில் படிப்படிறிவில்லாத பெண் இப்படியொரு முடிவை எடுத்திருந்தால் நாம் ஆச்சரியப்பட தேவையில்லை.. தமிழ்நாட்டில் நடந்துள்ளதைதான் ஏற்க முடியவில்லை.

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதுக்கு? என்பது அந்த காலம்... இன்று படித்துவிட்டு, வேலைவாய்ப்பில் ஆண்களைவிட அதிகமாக பெண்கள சம்பளம் பெற்று வரும்போது, ரிதன்யா தற்கொலையில் அர்த்தமில்லை..

சமூக அந்தஸ்து, பொருளாதாரம் பார்த்து கவின்குமாருக்கு, ரிதன்யாவை திருமணம் செய்து வைத்துள்ளனர். வேண்டா வெறுப்பாககூட ரிதன்யா இந்த திருமணத்துக்கு சம்மதித்திருக்கலாம் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்தாகும்.. கல்யாணமானதுமே தற்கொலை செய்கிறார் என்றால் என்ன அர்த்தம்? தன் கல்யாண போட்டோவில் சிரிப்பதை வைத்து எந்த முடிவுக்கும் வரமுடியாது..

பிரபல தயாரிப்பாளர் மகள்

அந்த காலத்தில் ஒரு பிரபல தயாரிப்பாளர், தன்னுடைய மகளுக்கு வசதியான வீட்டு மாப்பிள்ளையை பார்த்து திருமணம் செய்து வைத்தார்.. மகளுக்கு பல சினிமாக்காரர்களுடன் தொடர்பிருந்தது என்பதால், வேண்டா வெறுப்பாக அந்த திருமணத்தை செய்து கொண்டார். தயாரிப்பாளரின் மகள்.

குழந்தை பிறக்கும் நேரத்தில், தம்பதிக்குள் பிணக்குகள் வெடித்தது.. ஒருவரையொருவர் பிரிந்து போகும் அளவுக்கு கருத்து வேறுபாடு முற்றியது.. குழந்தை பிறந்ததுமே, தன்னுடைய குழந்தையை தன்னிடமே தந்துவிடும்படி தயாரிப்பாளரின் மகளிடம் கேட்டார் கணவர்.. அதற்கு அந்த பெண், "குழந்தை உனக்கு பிறந்தது கிடையாது" என்று துணிச்சலாக சொன்னார்..

5 முறை புகார் சொல்லியும்

இதைக்கேட்டதும், கணவரும், கணவர் வீட்டினரும் என்ன செய்திருக்க வேண்டும்? அந்த பெண்ணை உதறித்தள்ளியிருக்க வேண்டும்தானே? ஆனால் அப்படி செய்யவில்லை.. "உங்கள் பெண்ணை எப்படியாவது எங்களுடன் சேர்த்து வாழ சொல்லுங்கள்" என்று தயாரிப்பாளரிடம் போய் கெஞ்சினார்கள்.. அதாவது, வேறு யாருக்கோ குழந்தை பிறந்தது என்று தெரிந்தும், பணக்கார இடத்தை விட்டுவிட மனமில்லை..

ரிதன்யா விவகாரத்திலும் அப்படித்தான் நடந்துள்ளதாக நினைக்கிறேன்.. மகள் பிரச்சனை என்று 5 முறை சொல்லியும்கூட, "மாப்பிள்ளை வீட்டில் அட்ஜெஸ்ட் செய்து இருந்துகொள்" என்றால் அந்த பெண் என்ன செய்வாள்? எனவே, இது பெண்ணை பெற்றவர்கள் தவறுதான்.. அவர்கள் மட்டும் கை கொடுத்திருந்தால், அந்த குடும்பத்தை இந்நேரம் வரதட்சணை கொடுமை என்று கோர்ட் வரை கொண்டு சென்றிருப்பார் ரிதன்யா.

தற்கொலை தீர்வு கிடையாது

இந்த காலத்தில் பெண்களால் தனித்து நிற்க முடியும்.. எனவே தற்கொலை என்பது தீர்வு கிடையாது என்பதை பெண்கள் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

உன்னால் தைரியமாக தனித்து நிற்க முடியும் என்ற தைரியத்தை பெற்றோர்களும் மகள்களுக்கு சொல்லி வளர்க்க வேண்டும்.. ஆனால், இப்படியொரு தைரியத்தை தந்தால், விவாகரத்து வழக்குகள் அதிகமாக வரும்.. எனினும், ஒரே பாயிண்ட்தான்.. பிடிக்காதவனுடன் காலமெல்லாம் வாழ்வதைவிட, உறவை வெட்டிவிட்டுவிட்டு, தனியே வருவதே நல்லது" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+