யாருக்காச்சும் தெரியுமா? நடிகை அதுல்யா கோயமுத்தூர் பொண்ணுங்க...!
சென்னை: ஏனுங்க..ஏமாளி படம் வந்துச்சு...பொறவு சுட்டுக் பிடிக்க உத்தரவு படம் வந்துச்சல்லோ... அதுல ஆக்ட்டு குடுத்து இருக்கும் அதுல்யா கோயமுத்தூர் பொண்ணுங்கோ..
ஏனுங்க நம்ப முடியலீங்களா...இதோ அவிங்களே சன் டிவி முகநூல் பக்கத்துல சொல்லிப்போட்டு இருக்காங்க பாருங்க.. அட நம்ம ஊர் பொண்ணாச்சே கோயமுத்தூர் குசும்பு இல்லாம இருக்குமா?
இருக்குதுன்னு சொல்லிப்போட்டு, ரெண்டு வார்த்தை பேசியும் இருக்குதுங்க...பார்க்க நம்ம பக்கத்து வூட்டு பொண்ணு கணக்கா இருக்குதுங்க.

டிபி ஏமாளி
என்னோட முதல் படம் ஏமாளி படம் வந்தப்போ இந்த அளவுக்கு மக்கள் மத்தியில் ரீச்சாவேன்னு நினைக்கலை. என்னை தெரிஞ்சவங்க. அவங்களுக்கு தெரிஞ்சவங்க எல்லாரும் என்னோட படத்தை போனில் டிபியா வச்சு இருக்கறதா மத்தவங்க சொல்லி கேட்கும்போது சந்தோஷமா இருக்கும்.

உத்தரவு படம்
சுட்டு பிடிக்க உத்தரவு படத்திலும் எனக்கு நல்ல பேர் கிடைச்சுது. அதுல என்னோட கலரை கொஞ்சம் குறைச்சு எல்லாம் காண்பிச்சு இருந்தாங்க. எனக்கும் அது ரொம்ப பிடிச்சு இருந்துச்சு. விக்ராந்த் ரோம்ப ஹார்டு வொர்க் பண்றவர்.. அவர் இன்னும் நல்லா வரணும்.. வருவார்னு எனக்கு நம்பிக்கை இருக்கு

ரஜினி சார்
நாடோடிகள் 2 படத்தில் நடிக்கும்போதுதான் சசிகுமார் சார், ரஜினி சார் சொன்ன மாதிரி குழந்தைன்னு தெரிஞ்சுது. அவர் ஒரு குழந்தை மனசு கொண்டவர்.ஆனால், நானும் அஞ்சலியும் எங்கியாவது வெளியில போறோம்னு சொன்னா ஜாக்கிரதையா போங்கன்னு சொல்வார்.. கொஞ்ச நேரம் கழிச்சு வந்துட்டீங்களான்னு விசாரிப்பார்.

சன் டிவியில்
அடிக்கடி சன் டிவியில் என்னோட பட ஆடியோ லான்ச், பட ப்ரோமோஷன் என்று, இன்டர்வியூ என்று காண்பிச்சு மக்கள் மத்தியில் பிரபலமாக்கிட்டாங்க. இதுக்கு நான் சன் டிவிக்குத்தான் நன்றி சொல்லணும் என்று சொன்னார் அதுல்யா.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications