கருத்தம்மா பாடல்.. ரெக்கார்டிங் தியேட்டரில் தேனி குஞ்சரம்மாவுக்கு ஏ.ஆர்.ரகுமான் தந்த சர்ப்ரைஸ்
சென்னை: கருத்தம்மா திரைப்படத்தில் தேனி குஞ்சரம்மா, கள்ளிப்பால் கொடுத்து குழந்தையை கொல்லும் பாடலை பாட ரெக்கார்டிங் தியேட்டருக்கு சென்ற போது இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவரை ஏமாற்றினாராமே.
ஒரு சில மாவட்டங்களில் பெண் குழந்தை பிறந்துவிட்டால் அதற்கு கள்ளிப்பால் ஊற்றி கொல்லும் வழக்கம் இருந்து வந்தது. அதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்தான் கருத்தம்மா. இவர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால் தேனி குஞ்சரம்மாள் என அழைக்கப்பட்டார்.

இவர் ஏ.ஆர்.ரகுமானுடன் அதிக அளவில் பாடல்களை பாடியுள்ளார். 1990களின் பிற்பகுதியிலும் 2000-களின் முற்பகுதியிலும் நாட்டுப்புற பாடல்களை பாடியுள்ளார். இவர் ஹாரிஸ் ஜெயராஜின் இசையிலும் பாடியுள்ளார்.
கருத்தம்மா படத்தில் நடித்து திருப்புமுனையை ஏற்படுத்தினார். இவர் பேட்ட ராப், கொக்கு சைவ கொக்கு உள்ளிட்ட பாடல்களை பாடியுள்ளார். இவர் திரைப்படங்களில் நடித்தும் உள்ளார். விவேக் காமெடியில் பாயாசம் போடும் பாட்டியாக நடித்திருந்தார்.
அது போல் இளையராஜா இசையிலும் குஞ்சரம்மாள் பாடியுள்ளார். இவர் கடந்த 2008ஆம் ஆண்டு வயது மூப்பு காரணமாக காலமாகிவிட்டார். ஆனாலும் அவருடைய குரல் வளத்தை அடித்துக் கொள்ள இன்று யாரும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவர் இருந்தார்.
இதுகுறித்து வாகைத் தமிழ் என்ற சேனலுக்கு விமர்சகர் ராஜகம்பீரன் என்பவர் கூறியிருப்பதாவது: கருத்தம்மா படத்திற்கு தேனி குஞ்சரம்மா ஒரு பாட்டு பாட வேண்டும் என இயக்குநர் பாரதிராஜா முடிவு எடுத்தார். இதையடுத்து ஏ.ஆர். ரகுமானின் ரெக்கார்டிங் தியேட்டருக்கு வந்தார். அங்கு பிரம்மாண்டமாக இருப்பதை கண்டு அவர் சற்று கலக்கம் அடைந்தார்.
கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் அநாயாசமாக பாடும் அவருக்கு ரெக்கார்டிங் தியேட்டரை பார்த்ததும் ஒரு விதமான பதற்றம் வந்துவிட்டது. கிராமங்களில் களையெடுக்கும் போது பாட்டு பாடியவர். கள்ளிப்பால் கொடுத்து குழந்தையை கொல்லும் வழக்கம் கொண்ட ஒரு நாட்டுப்புற பாடலை அவர் பாட வேண்டும்.
தேனி குஞ்சரம்மாவின் பதற்றத்தை புரிந்து கொண்ட ரகுமான், ஒரு அறைக்கு அவரை அனுப்பி, "நீங்கள் பயப்பட வேண்டாம், உங்களுக்கு தைரியம் வரும் வரை நீங்கள் பாட்டு பாடிக் கொண்டிருங்கள். பயிற்சி செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு பயமின்றி பாடுவேன் என நம்பினால் என்னிடம் சொல்லுங்கள் ரெக்கார்டிங் செய்துவிடலாம்" என கூறினார்.
அந்தம்மாவை உள்ளே விட்டுவட்டு ரகுமான் வெளியே காத்திருந்தார். உள்ளே சென்ற குஞ்சரம்மா, கள்ளிப்பால் கொடுத்து கொல்லும் பாடலை பல முறை பாடினார். ஒரு கட்டத்தில் நம்மால் தைரியமாக பாட முடியும் என தெரிந்து கொண்டதை அடுத்து வெளியே வந்த தேனி குஞ்சரம்மா, "அய்யா நான் பாடுறேன்" என ரகுமானிடம் சொன்னார்.
அப்போது ரகுமான், "ரெக்கார்டிங் முடிந்துவிட்டதும்மா" என்றார். ரெக்கார்டிங் என்றால் ஒரு வித பதற்றம் வரக் கூடாது என்பதற்காகத்தான் சும்மா பாடி பிராக்டீஸ் செய்யுங்கள் என சொன்னேன். நீங்கள் பாடினீர்கள். அதை நான் அப்படியே ரெக்கார்ட் செய்துவிட்டேன். இதுவே இயல்பாக இருக்கிறது என்றார்.
கருத்தம்மாவில் அவர் பாடிய பாடல் ஆராரோ ஆரிரரோ என்பதாகும். இந்த கான்செப்ட்டை வைத்துதான் விவேக் தனது காமெடியில் கள்ளிப்பால் வைத்து கொன்ற பாட்டி நீதானா என ஒரு படத்தில் கிண்டல் செய்வார்.












Click it and Unblock the Notifications