விசுவல் எஃபெக்ட் எடிட்டிங்கில் கிங்!.. மொத்த சொத்தையும் யார் பெயருக்கு எழுதி வைத்தார் பீட்டர் பால்?
சென்னை: பீட்டர் பால் தான் பணியாற்றிய போது சம்பாதித்த சொத்துகளை யார் பெயரில் எழுதி வைத்துள்ளார் தெரியுமா?
பீட்டர் பால் என்பவர் சினிமாவில் எடிட்டிங் கலைஞராக இருந்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு வரை அவரை எல்லாருக்கும் தெரிந்திருக்கவில்லை. அவருடன் பணியாற்றுவோருக்கும், அந்த துறையில் இருந்தோருக்கும் மட்டுமே தெரியும்.

ஆனால் அவர் எப்போது வனிதா விஜயகுமாரை இரண்டாவது தாரமாக திருமணம் செய்தாரோ அப்போது முதல் அவரை வறுத்தெடுக்காதவர்களே இருக்க மாட்டார்கள். அந்தளவுக்கு அவரை எல்லாரும் தெரிந்தது. வனிதா ஒரு யூடியூப் சேனல் தொடங்கியுள்ளார்.
அந்த சேனலுக்கு விசுவல் எபெஃக்ட் எடிட்டிங் பணி செய்ய வனிதா, பீட்டர் பாலை நாடியுள்ளார். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் மனம் விட்டு பேசி 2020 ஆம் ஆண்டு கொரோனா ஊடரங்கு காலத்தில் தங்கள் வீட்டிலேயே திருமணம் செய்து கொண்டனர். பீட்டர் பால் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.
அவர்களுடைய திருமணத்தை திருச்சபையை சேர்ந்த ஒரு மூதாட்டி முன் நின்று செய்து வைத்தார். இவர்களது திருமணமே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பீட்டர் பாலுக்கு ஏற்கெனவே திருமணமாகி கல்லூரி படிக்கும் மகனும் பள்ளியில் படிக்கும் மகளும் இருப்பதாக அவருடைய முதல் மனைவி ஹெலன் எலிசபெத் யூடியூப் சேனல்களில் பேட்டி கொடுத்தார்.
மேலும் தன்னிடம் விவாகரத்து பெறாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதை எதிர்த்து அவர் போலீஸ் நிலையத்தில் புகாரும் கொடுத்திருந்தார். ஆனால் வனிதாவோ அவருக்கு திருமணமானதே தனக்கு தெரியாது என்றார். ஆனால் பல முறை பீட்டர் பாலை முதல் மனைவியின் வீட்டுக்கு காரில் கொண்டு வந்து இறக்கி விட்டதாக மகன் கூறினார். மேலும் வனிதாவின் வீட்டிற்கு பீட்டர் பாலின் மகனும் மகளும் சென்றதாகவும் அவர்கள் கூறியிருந்தனர். அப்படியிருக்கும் போது பீட்டர் பாலுக்கு ஒரு குடும்பம் இருப்பது எப்படி தெரியாமல் இருந்திருக்கும் என எலிசபெத் கேள்வி எழுப்பினார்.
இத்தனை எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடந்த இவர்களது திருமணம் சில மாதங்கள் கூட நீடிக்கவில்லை. கோவாவிற்கு பீட்டர் பால், தனது மகள்களுடன் வனிதா டூர் சென்ற போது அங்கு சதா சர்வகாலமும் பீட்டர் பால் குடித்துக் கொண்டிருந்தாகவும் சிகரெட் பிடித்ததாகவும் தனக்கு பிடிக்கவில்லை என கூறி பீட்டர் பாலை கோவாவில் இருந்து வந்ததும் வராததுமாக விரட்டி விட்டார் வனிதா.

அத்துடன் பீட்டர் பால் என்ன செய்கிறார் என்றே தெரியாமல் இருந்த நிலையில் அவர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இறந்துவிட்டார். அவர் குடித்து குடித்து கல்லீரல் செயலிழந்துவிட்டதால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது. குடித்தாலும் பீட்டர் பாலை அவருடைய பணியில் மட்டும் யாரும் குறையே சொல்ல முடியாது.
அந்த அளவுக்கு இயக்குநர்களின் பாராட்டை அவர் பெற்றுள்ளாராம். அப்படி திரைப்படங்களில் பணியாற்றி அவர் நிறைய சொத்து சேர்த்து வைத்திருக்கிறாராம். அந்த சொத்துகள் தற்போது யார் பெயருக்கு அவர் எழுதி வைத்திருக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. அவர் தனது சொத்துகளை தனது முதல் மனைவியான ஹெலன் எலிசபெத் பெயரில் எழுதி வைத்துள்ளது தெரியவந்தது. இதை எண்ணி நெட்டிசன்கள் பீட்டர் பாலின் ஆத்மா சாந்தி அடைய பாராட்டி வருகிறார்கள்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications