விசுவின் படங்களில் உமா என்ற கதாபாத்திரம் இருந்ததற்கான காரணம் தெரியுமா? நெகிழ்ச்சிதான் போங்க
சென்னை: விசுவின் படங்களில் உமா என்ற பெயர் ஏதாவது ஒரு கதாபாத்திரத்திற்கு வரும், அத்துடன் அந்த கதாபாத்திரத்திற்கு நல்ல வெயிட் இருக்கும். இது ஏன் தெரியுமா?
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சம்சாரம் அது மின்சாரம்... இந்தப் படத்தில் விசு தன் பாத்திரங்களுக்கு பெயர் வைத்திருப்பார். அவர் மூத்தமகன் சிதம்பரம். வஉசியின் நினைவாக வைத்ததாக சொல்வார். வஉசி அவர்கள் தன் சொத்து, ஆஸ்தி எல்லாம் விற்று சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டவர். கடைசி காலத்தில் பணம் இல்லாமல் கஷ்டப்பட்டவர். ரகுவரனின் சிதம்பரம் பணம் சம்மந்தப்பட்ட ரோல்...

அடுத்து சிவா. சந்திரசேகர் ஏற்ற ரோல். சுப்ரமணியசிவா இந்த நாட்டுக்காக சிறை சென்று வெளி வரும்போது அவரை வரவேற்க ஆளிருக்காது. இந்த சிவாவை அவர் மனைவி கூட விரும்பமாட்டார்.
சரோஜினி
மூன்றாவது சரோஜினி. இளவரசி ரோல். சரோஜினி என்கிற பெங்காலி இந்து பெண் அந்தக் காலத்தில் கலப்புமணம் புரிந்தவர். டாக்டர் கோவிந்தராஜுலு நாயுடு என்பவரை திருமணம் செய்து சரோஜினி நாயுடுவானார். நம்ம சரோஜினி இளவரசி கூட கலப்பு மணம்.
மகன் பாரதி
நாலாவது பாரதி. பாரதி படிப்புக்கும் புலமைக்கும் பெயர் போனவர். ஆனால் இந்த பாரதிக்கு படிப்பே வராது. அப்புறம் அந்த அம்மா கோதாவரி. கோதாவரி நதி மகாராஷ்ட்ரா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, ஒரிசா, மத்தியபிரதேஷ், சட்டீஸ்கர் என ஓடுகிற நதி. நம்ம கோதாவரி அம்மாவும் குடும்பத்தின் எல்லா உறவுகளிடம் முட்டி மோதி பழகும் அந்த நேயம்....
பாரதியின் கண்ணம்மா
கடைசியாக பாரதியின் கண்ணம்மா... மனோரமா. தீர்வுகளுக்கே பிறந்தவள். என்ன பொருத்தம். கடைசியாக உமா. விசுவின் கதாநாயகிகள் உமா தான். அவர் வீட்டு நாயகியின் பெயர். உமையின் கணவர் சிவன். அர்த்தநாரி. அம்மையப்பன்.
இயக்குனர் அய்யா விசு ஸ்பெஷல் இது தான்...

பள்ளிக் கூட பசங்க
எண்பதுகளில் பள்ளிக்கூட பசங்கள்லாம் ஒரு டயலாக்கை சொல்லி சொல்லி சிரிப்போம்.. பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கிற பைத்தியக்கார டாக்டர்....இதை முழுசா சொல்லுடா பார்ப்போம்னு போட்டி...அப்போலாம் விசுவோட குடும்பம் ஒரு கதம்பம் பார்க்கவில்லை.
மணல் கயிறு
மணல்கயிறு படத்தை பற்றி ஆனந்த விகடன் எழுதும் போது கூட பார்க்கவில்லை. ஆனால் அவர் ராஜதந்திரம் போன்ற படங்களில் சண்டையெல்லாம் போட்டு நடித்த போது ரசித்து பார்த்திருக்கிறேன்..ஒரு கை பார்ப்போம் என்கிற படத்தில் ஜிப்பா, கைலியுடன் பேட்டை பிஸ்தாவாகவெல்லாம் வருவார்...
பாலச்சந்தர்
பல வருடங்களாக பாலச்சந்தரிடம் அசிஸ்டண்ட்டாக இருந்த விசு நாடக உலகிலும் கோலோச்சி இருந்த நேரம். குடும்பம் ஒரு கதம்பம் ஹிட்டானதும் விசு நாயக அந்தஸ்த்தை பெற்றார். அவர் நடித்து நிறைய படங்கள் வந்தன.. அவருக்கே வருத்தம்.. தான் இளைஞனாக இருந்த போது இந்த நாயக அந்தஸ்து கிடைக்கவேயில்லையே என.

வயதுக்கேற்ற கதாபாத்திரங்கள்
காலப்போக்கில் தன் வயதுக்கேற்ற படங்களை தானே எழுதி நடிக்க ஆரம்பித்தார். தமிழ்நாட்டு பெண்களை தன் ரசிகைகளாக மாற்றும் தந்திரம் அவருக்கு தெரிந்தது. அவர் எழுதிய சதுரங்கம், நெற்றிக்கண், நல்லவனுக்கு நல்லவன் போன்ற படங்களில் ரஜினி நடித்தார். அவர் எழுதிய பட்டினப்பிரவேசம் பேசப்பட்ட படமாக இருந்தது. தில்லுமுல்லு, அவன் அவள் அது, கீழ்வானம் சிவக்கும், மழலை பட்டாளம் என அவர் வசனமெழுதிய படங்களும் பேசப்பட்டன.
விஜயகாந்த்
விஜய்காந்த் ஹீரோவாக நடித்து மார்க்கெட் இழந்து படமில்லாமல் நின்ற போது தன் டௌரி கல்யாணம் படத்தில் நடிக்க வைத்தார். அருண்பாண்டியன் ஊமைவிழிகள் நடித்துவிட்டு இருந்த போது சிதம்பர ரகசியம் படத்தில் நடிக்க வைத்தார். கார்த்திக் மார்க்கெட் இழந்த போதும் அவள் சுமங்கலி தான் போன்ற படங்களில் நடிக்க வைத்தார். இளவரசி, மாதுரி, கோகிலா, அருணா, ரவி ராகவேந்தர், கோபி, ரமேஷ் அர்விந்த், இளவரசன், மனோரமா மகன் பூபதி, சந்திரசேகர் போன்றோர் வாய்ப்பில்லாமலிருந்த போது அழைத்து வாய்ப்பு தந்தவர் விசு.
ஜோடி போடாத நடிகை இல்லை
விசுவோடு ஜோடி போடாத அம்மா நடிகையே கிடையாது என்பது போல எல்லோரோடும் ஜோடியாக நடித்தவர். ஒரு ஜோடியோடு அடுத்த படத்தில் நடிப்பது ஒன்றோ, இரண்டோ பேர் தான். குடும்ப உறவின் துரோகங்களையும், துக்கங்களையும், மேன்மைகளையும் அழகாக சொன்னவர்.. அவர் நடித்த அடுத்த ஹீரோ படங்களிலெல்லாம் ஒரு ஆபத்பாந்தவனாகவே வருவார்.

அரட்டை அரங்கம்
அப்படித்தான் வாழ்விலும் திகழ்ந்தார் விசு. தன் சினிமா போனாலும் அரட்டை அரங்கம் என்கிற டாக் ஷோ மூலம் மக்களிடம் நேரடித் தொடர்பிலிருந்தவர்... அவர் இறப்பதற்கு முன்பு அவர் நெற்றிக்கண் பிரச்சினை குறித்து ஒரு வீடியோ வெளியிட்டார். என் பதிவில் அவரிடம் சில கேள்விகள் கேட்டிருந்தேன்.
என்ன பதிவு
அந்த பதிவை அவர் பார்வைக்கு கொண்டு செல்லவா என அவர் நெருங்கிய தோழி கேட்க நான் சரி என்றேன். அதைப்படித்த அவர் எப்போது ஃப்ரியானாலும் சென்னையில் வந்து சந்திக்க சொல்லுங்கள் என தோழியிடம் சொன்னதாக மெசேஜ் அனுப்பினார். நான் துபாய் கிளம்பிக்கொண்டிருந்த நேரமாதலால் அடுத்த முறை லீவில் சந்திக்கலாம் என நினைத்திருந்தேன்.. என்னை ஏமாற்றி விட்டார் விசு அவர்கள். என்னிடம் என்ன பதில் சொல்ல நினைத்தாரோ... இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
உமா ஏன்
அது போல் இந்த பதிவில் கவி கணேஷ் கவி என்பவர் தனது கமென்ட்டில் "விசு ஆரம்ப காலங்களில் தனது கதைகளை எழுதிகுறிப்பிட்ட ஒரு பத்திரிகை அலுவலகத்திற்கு கொண்டு சென்ற போது அது திருப்பி அனுப்பப்பட்டு வந்தது. அந்த காலகட்டங்களில் அங்கே பணிபுரிந்தவர் உமா என்கிற பெண் அவர்தான் நிச்சயமாக உங்கள் கதைகள் ஒரு நாள் வெல்லும் என்று அவருக்கு ஊக்கம் கொடுத்தவர். அவரின் நினைவாக தான் விசுவின் எல்லா படத்திலும் உமா என்கிற கதாபாத்திரம் மிக முக்கியமான ரோலில் வரும்" இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications