நடிகை சுஜா வருணியின் கணவர் முதல் விஜய் டிவி நடிகர் வரை! யாரெல்லாம் வைல்ட் கார்டு போட்டியாளர்கள்?
சென்னை: பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இன்றைய தினம் 6 போட்டியாளர்கள் வைல்ட் கார்டு என்ட்ரியாக போகிறார்கள் என்ற தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்ற தகவலும் கிடைத்துள்ளது.
பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் 9 ஆண் போட்டியாளர்கள், 9 பெண் போட்டியாளர்கள். வீட்டிற்கு நடுவே ஒரு கோடு இருக்கும். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் முதல் எவிக்ஷன் ரவீந்திரன் சந்திரசேகரன்தான்.

இவர் மகாலட்சுமியின் கணவராவார். அது போல் அடுத்த வாரம் நடிகர் அர்ணவ் வெளியேற்றினார். இவர் செவ்வந்தி சீரியலில் நடித்து வரும் திவ்யா ஸ்ரீதரின் கணவராவார். இவருக்கும் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அன்ஷிதாவுக்கும் இடையே செல்லமா சீரியலில் நடித்த போது தகாத பழக்கம் ஏற்பட்டதாக திவ்யா குற்றம்சாட்டி வருகிறார். இதனால் திவ்யாவும் அர்ணவ்வும் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த வாரம் பெண் போட்டியாளர்களில் யார் வெளியேறுவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பவித்ராவா இல்லை தர்ஷா குப்தாவா என இருந்தது. அதில் பவித்ராவை ஹவுஸ்மேட்ஸ் சேவ் செய்ததால் தர்ஷா குப்தா எலிமினேட் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.
நேற்றைய தினம் ஒவ்வொரு ஹவுஸ்மேட்ஸ்களும் ஒவ்வொருவரை போல் நடித்தனர். அதில் உள்ள நிறை குறைகளை விஜய் சேதுபதி கேட்டறிந்தார். உதாரணமாக சுனிதா போல் சாச்சனாவும், சாச்சனாவை போல் சுனிதாவும் நடித்தனர். அது போல் முத்துக்குமரன் போல் ரஞ்சித்தும், ரஞ்சித்தை போல் முத்துக்குமரனும் நடித்திருந்தனர்.
இந்த நிலையில் இன்றைய தினம் யார் எலிமினேட் செய்யப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்தது. அந்த வகையில் அன்ஷிதா என சொல்லப்பட்டது. ஆனால் இந்த வாரம் யாரும் எலிமினேட் செய்யப்படவில்லையாம். அதற்கு பதிலாக 6 போட்டியாளர்கள் வைல்ட் கார்டு என்ட்ரியாக அறிமுகமாகிறார்களாம். அவர்கள் யார் என்பதை பார்க்கலாம்.
இந்நிலையில், வைல்டு கார்டு என்ட்ரியாக, டி.எஸ்.கே, ராணவ், வர்ஷினி வெங்கட், மஞ்சரி, சிவாஜி தேவ் ஆகிய போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் களமிறங்கப் போவதாக நேற்றைய தினம் தகவல் பரவியது. ஆனால், டி.எஸ்.கே-விற்கு பதிலாக தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வில்லனாக நடிக்கும் ராயன் மற்றும் ரியா தியாகராஜன் ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் புதிதாக களமிறங்கப்போவதாக தெரிய வந்துள்ளது. இவர்கள் சிவாஜி தேவ் என்பவர் நடிகை சுஜா வருணியின் கணவராவார். சுஜாவும் பிக்பாஸ் போட்டியாளராக இருந்தவர்தான். சிவாஜி தேவ், நடிகை ஸ்ரீப்ரியாவின் சகோதரி மகனாவார்.
ஏற்கெனவே பிக்பாஸ் வீட்டில் அடிதடி குழாயடி சண்டைகள் நடந்து வரும் நிலையில் புதிய போட்டியாளர்கள் 25 நாட்களாக வெளியே நடப்பதை பார்த்துவிட்டு உள்ளே செல்கிறார்கள். இவர்கள் உள்ளே போய் எந்த மாதிரி விளையாட போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications