எதிர்நீச்சல் சீரியலில் ஜீவானந்தன் யார் தெரியுமா? இவரா? வெளியான தகவல்கள்.. இப்படி ஒரு ட்விஸ்டா?
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் அப்பத்தா அடிக்கடி ஜீவானந்தம் என்ற பெயரை சொல்லிக் கொண்டிருக்கிறார்.
யார் அந்த ஜீவானந்தம் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் கௌதம் தான் அந்த ஜீவானந்தமாக இருக்க கூடுமோ என்ற ஒரு தகவல்கள் தற்போது பரவி வருகிறது.

சன் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத ஒரு சீரியலாக எதிர்நீச்சல் சீரியல் இருந்து வருகிறது. இந்த சீரியலில் பெண்கள் அடிமைத்தனத்துக்கு எதிராக எதிர்நீச்சல் அடிப்பார்கள் என்று அனைவரும் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர். ஆரம்பத்தில் அதிகமான விறுவிறுப்போடு சென்று கொண்டிருந்த இந்த சீரியலில் திடீரென்று சடன் பிரேக் போட்ட மாதிரி ஆதிரையின் திடீர் காதல் அதைத்தொடர்ந்து திருமண பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கிறது.
ஆரம்பத்தில் அமைதியாகவே இருந்து வந்த அப்பத்தா தான் ஒரு பட்டம்மாள் பி ஏ என்று கெத்தாக கூறிய அந்த எபிசோடு பெரிய அளவில் பரபரப்பையும் சீரியலுக்கே விறுவிறுப்பையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதே ஸ்பீடும் விறுவிறுப்பும் தொடர்ந்து இருக்கும் என்று ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்த நிலையில் சமீபகாலமாகவே இந்த சீரியலில் ஆதிரைக்கு யாரோடு திருமணம் என்ற ஒரே ட்விஸ்ட் கொண்டு தான் கதை பயணித்துக் கொண்டிருக்கிறது.
இந்த ட்ராக் சிலருக்கு அலுப்பாக இருக்கிறது என்று கூறிக் கொண்டிருந்தாலும் இந்த சீரியல் நடிகர்கள் இந்த திருமணத்தில் தான் இந்த சீரியலுக்கான மொத்த கதையும் இருக்கிறது. அதனால் தான் இந்த கதையை திருமண ட்ராக் இவ்வளவு பெருசாக வந்து கொண்டிருக்கிறது என்று விளக்கம் கொடுத்து கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில் அப்பத்தா கோமாவில் இருக்கிறார். அவர் அடிக்கடி கண் விழிக்கும் பொழுதெல்லாம் ஜீவானந்தம் என்ற ஒரு பெயரை மட்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஜனனியும் யார் அந்த ஜீவானந்தம் என்று தேடிக் கொண்டிருக்கிறார்.
ரசிகர்கள் ஜீவானந்தம் கேரக்டரில் இந்த சீரியலில் இயக்குனர் திருச்செல்வன் தான் அறிமுகமாவார் என்று ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர். காரணம் திருச்செல்வன் இயக்கும் பல சீரியல்களில் அவர் முக்கியமான கேரக்டரில் நடித்துக் கொண்டிருப்பார். இது பலரும் விரும்பக்கூடிய ஒன்றாக இருக்கிறது. இதுவே இந்த சீரியலிலும் வரும் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இந்த சீரியலில் ட்விஸ்ட் ஏற்பட இருக்கிறது என்று தகவல்கள் பரவி வருகிறது.

காரணம் இந்த சீரியலில் ஆரம்பத்தில் இருந்து குணசேகரனுக்கு டஃப் கொடுக்கும் ஒரு நபராக தான் கௌதம் இருந்து வருகிறார். ஜனனியின் நண்பராக பல நேரங்களில் தோள் கொடுக்கும் கௌதம் பல நாட்களுக்குப் பிறகு மீண்டும் இப்போது சீரியலில் வந்து கொண்டிருக்கிறார். இதனால் ஜீவானந்தம் என்று கௌதமை தான் அப்பத்தா அழைக்கிறாரா? அவர் பெயரில்தான் சொத்து எல்லாம் மாற்றி வைத்திருக்கிறாரா? என்று தகவல்களும்,கேள்விகளும் இப்போது வலம்வருகிறது. என்ன இருந்தாலும் பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரியும் கடைசி நேரத்தில் இயக்குனர் என்ன மாதிரி ட்விஸ்ட் வைக்கப் போகிறார் என்று அவருக்கு மட்டும் தான் தெரியும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications