நடிகை ஸ்ரீதேவி பாகுபலியில் கேட்ட ரூ.10 கோடி.. வாய்க்கு வந்ததை பேசி ஓடவிட்ட பிரபலம்.. போனிகபூர் நறுக்
சென்னை: படையப்பா நீலாம்பரி கேரக்டரையே, பாகுபலி சிவகாமி கேரக்டர் மிஞ்சிவிட்டதாக பேசப்பட்டது. அந்த அளவுக்கு பாகுபலி படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்து அசத்தியிருந்தார்.. இந்நிலையில், ரம்யா கிருஷ்ணன் கேரக்டரில் முதன்முதலில் நடிக்கவிருந்தது மறைந்த நடிகை ஸ்ரீதேவிதான் என்றும், ராஜமௌலி ஸ்ரீதேவி வீட்டுக்கே சென்று கதையை சொல்லியும், ஸ்ரீதேவி சில காரணங்களுக்காக நடிக்க மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் கசிந்தன. இந்நிலையில், பாகுபலி படத்தில் சிவகாமி கதாபாத்திரத்தில் நடிக்க ஸ்ரீதேவி மறுத்ததற்கான காரணத்தை அவரது கணவர், இயக்குநர் போனி கபூர் தற்போது விளக்கியுள்ளார்.
ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், ஜேம்ஸ் கேமரூன் போன்ற ஹாலிவுட் ஜாம்பவான்களாலேயே பாராட்டப்பட்டவர் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி.. இவர் இந்திய சினிமாவின் முன்னணி டைரக்டர்களில் முதன்மையானவராக விளங்கி வருகிறார்.. அதிலும், தன்னுடைய பாகுபலி படத்தின் மூலம் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை கவர்ந்தவர்.

ரம்யா கிருஷ்ணன் சபாஷ்
கடந்த 2015ல் 'பாகுபலி' படத்தில் அனுஷ்கா, ரம்யாகிருஷ்ணன்,ராணா டகுபதி, நாசர், சத்யராஜ் மற்றும் பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியை மக்களிடையே பெற்று ரூ.1800 கோடிக்கும் மேல் வசூல் செய்திருந்த நிலையில், 2017ல் பாகுபலி 2 வெளியானது. இந்த 2 பாகங்களுமே நல்ல வரவேற்பை பெற்று இந்திய சினிமாவை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றதை மறுக்க முடியாது.
அதிலும் சிவகாமி தேவி கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன் நடித்து அசத்தியிருந்தார்.. 'பாகுபலி 1' மற்றும் 'பாகுபலி-2' இரண்டிலுமே சிவகாமி தேவி கேரக்டரை உயிர்ப்பித்தவர் ரம்யா கிருஷ்ணன்.. இந்த புகழின் உச்சிக்குபிறகு, ரம்யா தனது சம்பளத்தை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியது நினைவிருக்கலாம்.
ரம்யா கிருஷ்ணன் கேரக்டரில் ஸ்ரீதேவி
இப்படிப்பட்ட இயக்குனரின் பாகுபலி படத்தில், எத்தனையோ நட்சத்திரங்கள் நடிக்க தவம் கிடக்கும்போது, நடிகர் ஸ்ரீதேவி நடிக்க மறுத்துவிட்டதாக தகவல் ஒன்று பரவியது..
அதாவது, பாகுபலி படத்தில் சிவகாமி தேவி கேரக்டரில் நடிக்க முதலில் எஸ்.எஸ்.ராஜமவுலி, ஸ்ரீதேவியை அணுகினாராம்.. ஸ்ரீதேவியின் வீட்டிற்கே சென்று இந்த படத்தின் கதையை சொன்னாராம் ராஜமௌலி.. ஸ்ரீதேவிக்கு கதை மிகவும் பிடித்துபோகவும், உடனே நடிக்கிறேன் என்றும் சொன்னாராம்..
ஆனால், ஸ்ரீதேவி ரூ.10 கோடி சம்பளம் கேட்டாராம்.. மேலும், ஹோட்டலில் தனக்கு தனி ஃபுளோர் வேண்டும், ஷூட்டிங்குக்கு வரும்போது, தன்னுடைய குழந்தைகளுக்கும் கூடுதலாக விமான டிக்கெட்டுகள் போட வேண்டும் என்றெல்லாம் ஸ்ரீதேவி கண்டிஷன் போட்டாராம்.. இதற்கு பிறகுதான் பாகுபலி படத்தில் இருந்து ஸ்ரீதேவி தவிர்க்கப்பட்டதாக ராஜமௌலியே, பல நேர்காணல்களில் சொல்லியிருந்தார்.
மறுத்து பேசிய ஸ்ரீதேவி
மேற்கண்ட செய்திகள் எல்லாம், ஸ்ரீதேவி உயிருடன் இருந்தபோதே மீடியாக்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன..
இதைக்கேள்விப்பட்ட ஸ்ரீதேவி உடனடியாக இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்திருந்தார்.. பணப்பிரச்சினை காரணமாக பாகுபலி படத்தை நான் நிராகரிக்கவில்லை, அப்படி நினைச்சிருந்தால் என்னுடைய கேரியரில் 300 படங்களில் நடித்திருக்க மாட்டேன்" என்றும் ஸ்ரீதேவி கூறியிருந்தது நினைவிருக்கலாம்.
இந்நிலையில், ஸ்ரீதேவியின் கணவரும், பிரபல தயாரிப்பாளருமான போனி கபூர் இதுகுறித்து தற்போது விரிவான விளக்கத்தை தந்துள்ளதுடன், ஸ்ரீதேவி ஏன் பாகுபலி படத்தில் நடிக்கவில்லை என்பதற்கான உண்மை காரணத்தையும் விவரித்துள்ளார்.
உடைத்து பேசிய போனிகபூர்
'கேம்சேஞ்சர்ஸ்' என்ற யூடியூப் நிகழ்ச்சியொன்றில் பேசிய போனிகபூர், "சிவகாமி தேவி கேரக்டருக்கு ஸ்ரீதேவியைதான் ராஜமௌலி அணுக நினைத்தது உண்மைதான். அவர் வீட்டிற்கே வந்து கதை சொன்னார்.. இந்த கேரக்டர் மீது ஸ்ரீதேவிக்கு ஆர்வம் எற்பட்டதால், அவர் மீது ராஜமௌலிக்கு மேலும் மரியாதை கூடியது.
ஆனால், பாகுபலியில் ஸ்ரீதேவி நடிக்காததற்கு காரணம் ராஜமௌலி கிடையாது, , அப்படத்தின் தயாரிப்பாளர்கள்தான் காரணம்... ராஜமௌலி கதை சொல்லிவிட்டு போனதுமே, தயாரிப்பாளர்கள் எங்கள் வீட்டிற்கு வந்து சம்பளம் பேசினார்கள். ஆனால், ஸ்ரீதேவி வழக்கமாக பெற்று வந்த சம்பளத்தை விட குறைவான சம்பளத்தை வழங்க முன்வந்தனர். இதன் காரணமாகதான் ஸ்ரீதேவி பாகுபலி படத்தில் இருந்து விலகினார்.
2 பேருமே சின்ன குழந்தைகள்
எங்கள் வீட்டில் நடந்த விஷயங்களை தயாரிப்பாளர்கள் ராஜமௌலியிடம் தவறாக பரப்பிவிட்டனர்.. ஹோட்டலில் ஒரு ஃபுளோரை புக்கிங் செய்ய கேட்டது உண்மைதான்.. ஏனென்றால் அப்போது எங்க பிள்ளைகள் 2 பேருமே சின்ன குழந்தைகளாக இருந்தார்கள்.. அவர்களுக்கு லீவு கிடைக்கும்பொது பெரிய கால்ஷீட்களை கேட்க வேண்டாம் என்று சொன்னோம்..
ஆனால், தயாரிப்பாளர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்ததால், ஸ்ரீதேவி அந்த கேரக்டரில் நடிக்க மறுத்து விட்டார்.. அதனால்தான், தயாரிப்பாளர்கள் ஸ்ரீதேவியை பற்றி தப்பு தப்பாக ராஜமௌலியிடம் சொல்லிவிட்டார்கள்..
இத்தனைக்கும் ஸ்ரீதேவி அப்போது வாய்ப்புகள் இல்லாமல் இல்லை. அவர் மூலமாக இந்தி, தமிழிலும் நல்லதொரு வரவேற்பு நிச்சயம் கிடைத்திருக்கும். அப்படியொரு நிலையில், நான் ஏன் அவரை குறைந்த சம்பளத்திற்கு நடிக்க வைக்க வேண்டும்?
ஸ்ரீதேவி ரொம்ப அன்-புரொபஷனல்
உண்மையான காரணத்தை ராஜமௌலியிடம் தயாரிப்பாளர்கள் கடைசிவரை சொல்லவே இல்லை.. அதற்கு பதிலாக, "ஸ்ரீதேவி ரொம்ப அன்புரொபஷனல்" என்று சொல்லியிருக்கிறார்கள்.. அதனை ஏற்கவே முடியவில்லை.. ஸ்ரீதேவி அப்படி இருந்திருந்தால் ராகேஷ் ரோஷன், யாஷ் சோப்ரா, ராகவேந்திர ராவ் போன்றவர்கள் எப்படி மீண்டும் மீண்டும் அவரை வைத்து படங்களை உருவாக்கியிருக்க முடியும்?" என்றெல்லாம் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
2 பாகுபலி வெற்றிப் படங்களின் பாகங்களையும் ஒன்றாக சேர்த்து "பாகுபலி எபிக்" என்ற பெயரில் விரைவில் ரிலீஸ் செய்யப்படுவதாக சொல்லப்படும் நேரத்தில், போனிகபூர் தந்துள்ள இந்த பேட்டி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications