அமைச்சர்களுடன் நடிகை பெயர்கள் அடிபட்டது ஏன்.. பயில்வான் ரங்கநாதன் இதையும் விடலயே
சென்னை: நடிகைகள் ஏன் அமைச்சர்களுடன் இணைத்து பேசப்படுகிறார்கள்? அரசியல்வாதிகளுடன் கிசுகிசுவில் நடிகைகள் சிக்குவது ஏன்? என்பது குறித்து பயில்வான் ரங்கநாதன் விளக்கம் ஒன்றை தந்துள்ளார்.
பயில்வான் ரங்கநாதன், metro mail என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்திருக்கிறார். அந்த பேட்டியில் நடிகை மீனா ஏன் டெல்லி போனாங்க.. அமைச்சர்களுடன் நடிகைகள் சேர்ந்து கிசுகிசுக்கப்பட்டு வருவது ஏன்? சீமான் - விஜயலட்சுமி விவகாரம் பின்னணிதான் என்ன? என்பது முதல் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு பயில்வான் ரங்கநாதன் சொன்னதாவது:

எல்.முருகன்: "எல்.முருகனின் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் மீனாவின் ரசிகர்கள். அதனால்தான் பாஜகவில் உள்ள கலா மாஸ்டர் மூலம் அழைப்பு விடுத்திருக்கிறார்.
கலா மாஸ்டரும், மீனாவும் நெருங்கிய தோழிகள் ஆவர். தன்னுடைய ஏற்றத்தாழ்வுகள், நல்லது கெட்டதுகள் என அனைத்தையுமே கலா மாஸ்டரிடம்தான் மீனா பகிர்ந்து கொள்வார். அந்தவகையில்தான் எல்.முருகன் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார். மற்றபடி, பிரதமர் மோடியுடன் மீனா பேசவும் இல்லை. போட்டோ எடுத்து கொள்ளவும் இல்லை" என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

1967-ல் பெருந்தலைவர் காமராஜரை அவரது சொந்த ஊரான விருதுநககரில் தோற்கடித்தவர் விருதுநகர் சீனிவாசன். அவர் மனைவி ஸ்ரீதரால் தேனிலவு படத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜெயந்தி. ஆரம்பத்திலிருந்தே இப்படி அரசியல்வாதிகளை நடிகைகள் திருமணம் செய்வது இருந்து வருகிறது.. இப்போதும் அப்படியே உள்ளது. முன்னாள் அமைச்சர் அரங்கநாயகத்தின் மகன், தன்னுடன் நடித்த மலையாள நடிகையைதான் திருமணம் செய்துள்ளார்.
கிசுகிசு: அமைச்சர்களுடன் நடிகைகள் சேர்ந்து கிசுகிசுக்கப்படுவதற்கு காரணம், காய்ச்ச மரம்தானே கல்லடி படும்.. அமைச்சர் பதவியேற்பதால், அவரை தொடர்புபடுத்தி செய்திகள் போடும்போது, சோஷியல் மீடியா முழுக்க பரவும்.. இதனால் தங்கள் பெயரும் சேர்ந்து பரவும் என்ற நோக்கமாகவும் இருக்கலாம்.
சீமான் - விஜயலட்சுமி விவகாரத்தை பொறுத்தவரை, இருவருமே கணவன் மனைவியாக லிவிங் டூ கெதர் வாழ்க்கையாக வாழ்ந்தோம் என்று விஜயலட்சுமி சொல்லிட்டு இருக்காங்க.. டைரக்டர் சீமான்தான், என்னுடைய கணவர் என்று என்னிடமே விஜயலட்சுமி சொல்லி இருக்கார்.. லிவிங் டூ கெதர்தானே தவிர, தாலி கட்டி வாழவில்லை..
காளிமுத்து: முன்னாள் அமைச்சர் காளிமுத்துவின் மகளைதான், சீமான் தாலி கட்டி திருமணம் முடித்துள்ளார். காளிமுத்துவின் மனைவி தெலுங்கு மொழி பேசுபவர் என்பதால், சீமான் மனைவிக்கும் தெலுங்கு தெரியும்" என்று தெரிவித்துள்ளார் பயில்வான் ரங்கநாதன்.












Click it and Unblock the Notifications