அழகம்மையை அழ வைக்காதீங்கடா.. பாவம் என்ன செய்வா?
சென்னை: சன் டிவியின் அழகு சீரியலில் ரேவதி அழகம்மையா மனசை அள்றாங்க. குடும்பமே அவங்களை கொண்டாடுவது பார்க்க நல்லாத்தான் இருந்துச்சு.
இடையில் என்னன்னவோ நடந்துவிட, இப்போ அழகம்மைக்கு உடம்பு சரியில்லை. இருதயத்தில் கோளாறு. இதை மூத்த மருமகள், மகனிடம் மட்டுமே சொல்லும் அழகம்மை, இன்னும் கணவனிடம் கூட சொல்லலை.
ரெண்டாவது மகன் மகேஷ் பொண்டாட்டி பூர்ணா பக்கம் சேர்ந்து தாய், தந்தையை உதாசீனப்படுத்தறான். அம்மா, அப்பா கல்யாண நாளன்று கூட அவர்களிடம் ஆசி வாங்காமல், உடனிருந்து சேர்ந்து சாப்பிடாமல், பொண்டாட்டியுடன் வெளியில சாப்பிட்டு வந்து அம்மாவை மதிக்காமல் இருக்கான்.

அம்மா அப்பா
மகேஷ் தன் மனைவி பூர்ணாவுடன், அவளின் அம்மா அப்பாவைத் தேடி அலைகிறான். பூர்ணாவை தனது வீட்டார் அவமானப்படுத்தி வருகின்றனர் என்று குடும்பத்தை விட்டு ஒதுங்கி பொண்டாட்டியுடன் மட்டும் நேரத்தை செலவிடுகிறான்.

அழுகை
இப்படி ஆசையா வளர்த்த மகனும், மருமகளும் குடும்பத்தோடு ஒட்டாமல் இருக்கறதை நினைச்சு அழகு ரொம்ப வருத்தப்படறாங்க. அடுத்த வருஷம் கல்யாண நாளுக்கு நான் உயிரோட இல்லேன்னா என்னடா பண்ணுவேன்னு அழகு அழுதபடி கேட்க, அனைவரும் அதிர்ந்துவிட, மகேஷ் அதிராமல் மனைவியுடன் நிற்கிறான்.

அழகு
அழகு அழாத... இன்னும் கொஞ்ச நாளில் எல்லாம் சரியாய் போயிரும்னு ரவி அப்பா மனைவியை சமாதானப்படுத்த, குடும்பமே அழாதீங்கம்மா... நீங்க அழுதா எங்களால தாங்க முடியாதும்மான்னு ஆறுதல் சொல்றாங்க.

பித்தல்லவா
பெத்த மனம் பித்தாச்சே.. குருவிக்கூட்டுல கல்லெறிஞ்சது போல, நல்லா இருந்த குடும்பத்தில் கோர்ட், கேஸ், நோட்டீஸ், போலீஸ்னு வந்தா, குடும்பம் குடும்பமா இருக்குமா? இதுதான் கவலை அழகம்மைக்கு.
இவருக்காக சீரியல் பார்க்கறவங்க.. ஐயோ ஏண்டா பெத்த தாயை இப்படி அழுகாச்சி அழ வைக்கறீங்கன்னு வாய் விட்டு புலம்பறாங்க. ஸ்டார் காஸ்ட் எவ்ளோ வேல்யூ பாருங்க...
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications