நான் நெப்போலியன் மகனை பற்றி தப்பா பேசல.. அவங்க தான் அப்படி கேட்டது.. காந்தராஜ் பேட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் நெப்போலியன் தான் ஒரு நடிகருக்கு உதவி செய்தேன், ஆனால் அந்த நடிகரின் குடும்பத்தை சார்ந்த ஒரு டாக்டர் என்னுடைய மகன் பற்றி தப்பா பேசிக் கொண்டிருக்கிறார் என்று பேட்டி ஒன்று வருத்தத்தை வெளிப்படுத்தி இருந்தார். அதற்கு டாக்டர் காந்தராஜ் என்பவர் நான் நெப்போலியன் மகனை பற்றி பேசவில்லை என்று ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார்.

நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ் திருமணம் இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. தனுஷ் நான்கு வயதில் இருந்தே தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 10 வயதிற்கு மேலே அவரால் நடக்க முடியாமல் வீல் சேரில் பயணத்தை தொடங்கி வருகிறார்.

television napoleon

தனுஷிற்காக நெப்போலியன் பல இடங்களில் சிகிச்சை மேற்கொண்டும் அது பலன் அளிக்காததால் அவருடைய ஆசைகளை நெப்போலியனும் அவருடைய மனைவியும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். மகன் ஆசைப்பட்டது போலவே அமெரிக்காவில் குடும்பத்தோடு நெப்போலியன் செட்டில் ஆகி இருக்கிறார்.

இந்த நிலையில் நெப்போலியன் மகன் தனுஷுக்கும் திருநெல்வேலியை சார்ந்த அக்ஷயா என்ற பெண்ணிற்கும் கடந்த நவம்பர் 7ஆம் தேதி ஜப்பானில் வைத்து திருமணம் நடைபெற்றது . சில மாதங்களுக்கு முன்பு இவர்களுடைய எங்கேஜ்மென்ட் வீடியோ கால் மூலமாக நடைபெற்றது.

அப்போதிலிருந்து இவர்கள் பற்றி இணையத்தில் அதிகமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மகனுக்கு நெப்போலியன் திருமணம் செய்து கொடுப்பதை சிலர் பாராட்டினாலும் அதிகமானோர் விமர்சனமும் செய்கிறார்கள். நெப்போலியன் தன்னுடைய மகனுக்காக ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுத்து விட்டார் என்று சிலர் குற்றம் சாட்டுகிறார்கள்.

இன்னும் ஒரு சிலர் அந்தப் பெண் எடுத்த முடிவை பாராட்டி வந்தாலும் ஒரு சிலர் அவர் பணத்திற்காகத்தான் இந்த திருமணத்திற்கு சம்மதத்திருக்கிறார், தனுஷுக்கு அவர் மனைவியாக வாழ முடியாது ஒரு நர்ஸ் போல தான் வாழ வேண்டும் என்று எல்லாம் விமர்சிக்கிறார்கள். இதுகுறித்து நெப்போலியன் பேட்டி ஒன்றில் தன்னுடைய வருத்தத்தை பகிர்ந்து இருந்தார்.

அதில் சமூக வலைதளத்தில் அதிகமான நெகட்டிவ் கமாண்டுகள் வருகிறது. அதை நாங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அதைப் பற்றி பெரியதாக நாங்கள் வருத்தப்படவில்லை. ஆனால் நான் பலருக்கு உதவி செய்திருக்கிறேன் அதைப்பற்றி எந்த இடத்திலும் சொன்னது கிடையாது. சொல்லி பெருமை பேசிக்கொள்ள வேண்டும் என்று நினைத்ததும் கிடையாது.

ஒரே ஒரு விஷயம் மட்டும் நான் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். அதாவது சினிமாவில் என் உயிர் தோழன் பாபு என்று ஒருவர் இருந்தார். அந்த நடிகர் சினிமாவில் நடிக்கும் போது அடிபட்டதில் அவரால் எழுந்து உட்கார முடியவில்லை. முப்பது வருடங்களாக அவர் படுத்த படுக்கையாக இருந்தார். அந்த செய்தி அவர் இறப்பதற்கு நான்கு வருடங்களுக்கு முன்பு எனக்கு நடிகர் பொன்வண்ணன் மூலமாக தெரிய வந்தது.

பொன்வண்ணன் எனக்கு போன் செய்து சார் அவருக்கு யாரும் இல்லை சாப்பிட கூட கஷ்டப்படுகிறார் நீங்க ஏதாவது உதவி செய்யுங்க என்று சொன்னார். அன்னையிலிருந்து நான்கு வருஷமாக நான் அவருக்கு மாதா மாதம் பணம் அனுப்பி கொண்டு இருந்தேன். அவர் யார் என்று எனக்குத் தெரியாது அவர் என்னுடைய குரு பாரதிராஜாவின் மாணவன் என்பது மட்டும்தான் எனக்கு தெரியும்.

ஆனால் அந்த நடிகரின் உறவினர் ஒருவர் டாக்டராக இருக்கிறார். அவர் சமீபத்தில் என்னுடைய மகனை பற்றி தப்பு தப்பாக பேசி இருக்கிறார். என்னுடைய மகனால் எதுவும் செய்ய முடியாது என்று அவர் பேசியது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது என்று பேசி இருந்தார். நெப்போலியன் குறிப்பிட்டது டாக்டர் காந்தராஜ் தான். இவர் ஏற்கனவே அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் காந்தராஜ் பேட்டி ஒன்றில் இது பற்றி விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் அவர் பேசுகையில் நான் நெப்போலியன் மகன் பற்றி எந்த இடத்திலும் பேசவில்லை. ஒரு பேட்டியில் தசை சிதைவு நோய் பாதிப்பு பற்றி கேட்டார்கள் அப்போதுதான் நான் அது பற்றி பேசினேன்.

நெப்போலியன் மகனுக்கு தசைசிதைவு பற்றி கேட்டபோது நான் அதைப்பற்றி பேச மாட்டேன் என்று சொல்லிவிட்டேன். ஒரு டாக்டராக நோயாளி பற்றி பேசுவது தவறு என்று நான் பேசவில்லை. பிறகு பொதுவாக தான் அக்ஷயா வாழ்க்கையே தியாகம் செய்து இருக்கிறார் என்று சொன்னேன்.

நான் அப்படி பொதுவாக பேசியது நெப்போலியனுக்கு வருத்தத்தை கொடுத்திருந்தா நான் அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய அக்கா மகன் பாபுவுக்கு நடிகர் விஜய் முதலில் 5 லட்சம் பணம் உதவி செய்ததுதான் எனக்கு தெரியும். பிறகு கார்த்தி, பொன்வண்ணன் போன்றோர் உதவி செய்தார்கள். ஆனால் நெப்போலியன் உதவி செய்தது எனக்கு தெரியாது என்று அந்த பேட்டியில் காந்தராஜ் பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+