சீச்சி இப்படியுமா பண்ணுவாங்க..?யோசிக்கவே மாட்டீங்களா?பிரபல சீரியலை திட்டும் ரசிகர்கள்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியலின் கதையை பார்த்து ரசிகர்கள் திட்டுகின்றனர்.
அக்கா தங்கைகள் இருவரும் வில்லிகள் செய்த சூழ்ச்சியால் அண்ணன் தம்பிகளை திருமணம் செய்து கொள்கிறார்கள்.
ஆனா இப்போது அந்த வில்லியே கதாநாயகியின் மனதை மாற்றும் விதமாக பேசிக் கொண்டிருப்பதை பார்த்து தான் அந்த சீரியலின் ரசிகர்கள் திட்டிக் கொண்டிருக்கிறார்கள். அது என்ன என்பதை முழுமையாக பார்க்கலாம்.

பொதுவாக ஒரு சீரியல் அல்லது நிகழ்ச்சி ஹிட் ஆகிவிட்டால் அதை தொடர்ந்து இரண்டாவது பாகம் வருவது இயல்பானது தான். அதுபோல இப்பொழுது விஜய் டிவியில் ஈரமான ரோஜாவே சீரியலில் இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால் முதல் பாகத்திற்கு சம்பந்தமில்லாத கதையாக தான் இருக்கிறது.
ஆனாலும் முதல் பாகத்தை போலவே அண்ணன் தம்பி ஒரே வீட்டில் பிறந்த அக்கா தங்கையை கல்யாணம் செய்வது போன்று தான் இந்த பாகமும் இருக்கிறது. அதுபோல முதல் பாகத்தில் நடித்த நடிகர் திரவியம் இரண்டாவது சீசனிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் கதையை பார்க்கலாம்.
அதில் ஜீவா, பார்த்தியின் அப்பாவும், பிரியா மற்றும் காவியாவின் அப்பாவும் நண்பர்களாக இருக்கின்றனர். இருவரும் பேசி பார்த்திக்கும் பிரியா விற்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று இன்று பெண் பார்க்க வைக்கின்றனர். இருவருக்கும் பிடித்து போனதால் திருமண ஏற்பாடு நடக்கிறது. ஆனால் பார்த்தியை ஒருதலையாக அவருடைய அத்தை மகள் காதலித்துக் கொண்டிருக்கிறார்.
அதே நேரத்தில் காவியாவும் ஜீவாவும் காதலிக்கிறார்கள். இந்த நிலையில் திருமணத்தின் போது ப்ரியாவை பார்த்தியின் அத்தை மகள் ரம்யா ஆள் வைத்து கடத்தி விடுகிறார். அதனால் திருமணத்தை நிறுத்தலாம் என்று பிளான் போட்ட நிலையில், கடைசியில் வேறு வழியில்லாமல் பிரியாவின் அப்பா காவியாவை பார்த்திக்கு கல்யாணம் செய்து விட்டு விடுகிறார்.
பிறகு கடத்தப்பட்டிருந்த பிரியாவை ஜீவா காப்பாற்றி கூட்டி வந்த நிலையில் ஜீவாவிற்கு பிரியாவை கல்யாணம் செய்து வைக்கின்றனர். இப்படியாக இரண்டு பக்கமும் ஜோடி மாறிவிடுகிறது. ஆனாலும் பார்த்தியின் அத்தை மகள் ரம்யா பார்த்தியின் மீது பயங்கரமான காதலில் இருக்கிறார். எப்படியாவது பார்த்தியை அடைய வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார்.
ஒரு கட்டத்தில் பல பிரச்சனைகளை செய்து காவியாவை பார்த்தியிடம் இருந்து பிரித்து திருமணம் செய்ய பார்க்கும் நிலையில் கடைசியில் அது நின்று போகிறது. அந்த நேரத்தில் ரம்யாவை அவருடைய அத்தை மகன் ஜேகே ஒருதலையாக காதலித்து வந்து நிலையில் ரம்யா ஜேகேவை திருமணம் செய்து கொண்டு அதே பார்த்தி இருக்கும் வீட்டிற்கு வந்து விடுகிறார்.
இந்த நிலையில் திருமணத்திற்கு முன்பு காவியாவும் ஜீவாவும் காதலித்த விஷயத்தை ரம்யாவின் அம்மா அனைவருக்கும் போட்டு கொடுத்ததை தொடர்ந்து பிரியாவும் ஜீவாவும் பிரிந்து இருக்கின்றனர். இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் ரம்யா பிரியாவிடம், ஒருத்தங்களை உயிருக்கு உயிரா காதலிச்சவங்களை எப்படி மறக்க முடியும்? ஜீவா இப்போதும் காவியாவை நினைச்சு கொண்டுதான் இருப்பாரு.
நீ இந்த வீட்ல இருந்தா ஜீவாவால காவியாவை மறக்க முடியாது என்று பிரியாவின் மனதை மாற்றுகிறார். ஆனால் கதாநாயகி பிரியாவோ தன் வாழ்க்கையை கெடுத்ததே இவங்க தானு தெரிஞ்சும் அவங்க சொல்றதுக்கு எல்லாம் ஆமாம் என்பது போல யோசித்துக் கொண்டிருக்கிறார். இது குறித்து தான் தற்போது நெட்டிசன்கள் ரசிகர்கள் திட்டி வருகிறார்கள்.
இவங்களுடைய வாழ்க்கையே இப்படி மாறுவதற்கு காரணமே இதே ரம்யாவும் அவருடைய அம்மாவும் தான். ஆனால் அந்த ரம்யாவே வந்து ஜீவாவும் காவியாவும் காதலிச்சது தப்பு என்று கிளாஸ் எடுத்துட்டு இருக்கு அதை இந்த பிரியாவும் கேட்டுகிட்டு இருக்கு. எப்படி எல்லாம் கதை எடுத்தாலும் நாங்க பாப்போம்ங்கறதுக்காக இப்படி எல்லாம் எடுக்குறாங்க. கொஞ்சம் கூட லாஜிக்கா எடுக்க மாட்டாங்களா? என்று திட்டிக் கொண்டிருக்கின்றனர்.
அதுபோல நீயும்தான் பார்த்தியை உயிருக்கு உயிரா காதலிச்சா, இப்போ ஜேகே கூட சந்தோசமா வாழலையா? எதுக்காக என் வாழ்க்கை கெடுக்க பாக்குறேன்னு ப்ரீயா கேட்டு இருந்தா செமையா இருக்கும். ஆனால் இந்த பிரியா ஜீவா கிட்ட மட்டும் தான் மல்லு கட்டிகிட்டு சண்டைக்கு நிக்குது. தவிர இப்படி யோசிக்காமல் நம்பிகிட்டு இருக்குது என்று கடுப்பான ரசிகர்கள் கமெண்ட்களை கொட்டி கொண்டிருக்கின்றார்கள்.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications