ஈரமான ரோஜாவே சீரியல் நடிகை கண்ணீரோடு வெளியிட்ட புகைப்படம்.. இதனால்தான் எப்படி ஒரு திடீர் முடிவு?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியலில் நடித்து வரும் நடிகை சுவாதி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்ணீரோடு தான் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்.
அதோடு சுவாதி something end soon என்று பதிவு வெளியிட்டு இருப்பதால் சீரியல் முடிவுக்கு வருகிறதா? அல்லது இவருடைய கேரக்டர் முடிவுக்கு வருகிறதா? என்று கேள்வி ரசிகர்களின் மத்தியில் எழுந்திருக்கிறது.

ஈரமான ரோஜாவே சீரியலில் விறுவிறுப்பான கதைக்களம் வந்து கொண்டிருக்கும் நேரத்தில் திடீரென்று சுவாதி வெளியிட்ட பதிவுக்கு ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியலில் அக்கா காதலித்த நபரை தங்கைக்கும், தங்கை காதலித்த நபரை அக்காவுக்கும் சந்தர்ப்ப சூழ்நிலையால் திருமணம் செய்து வைத்த நிலையில் அது குறித்து அதிகமான சர்ச்சைகள் ஆரம்பத்திலே தொடங்கி இருந்தது. அதை தொடர்ந்து இந்த சீரியல் ஒருவழியாக ரசிகர்களுக்கு பிடிக்கத் தொடங்கியிருந்தது. ஆனால் திடீரென்று இந்த சீரியல் நேரம் மாற்றி ஒளிபரப்ப தொடங்கியிருந்தனர்.
தற்போது இந்த சீரியல் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் நன்றாக ஓடிக் கொண்டிருந்த இந்த சீரியல் இடையில் கொஞ்சம் டல்லடிக்க தொடங்கி இருந்தது. சீரியலில் கதைக்களம் திடீரென்று மாற்றப்பட்டு இருந்த நிலையில் அது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. அதோடு இந்த சீரியலில் இயக்குனர் இறப்பு புதிய இயக்குனர் என பல மாற்றங்கள் நடந்து விட்டது.
சீரியலின் சுவாரசியத்திற்காக அடிக்கடி கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவுகள் பிறகு ரொமான்ஸ் என்றே இந்த கதையை ஓட்டிக் கொண்டிருந்த நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தனர். அதுவும் பிரியா கேரக்டரில் நடித்து வரும் சுவாதிக்கு அதிகமான ரசிகர்கள் உருவாகி இருக்கின்றனர்.

இந்த நிலையில் சுவாதி தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் Something end soon என்று பதிவு வெளியிட்டிருக்கிறார். இதனால் இந்த சீரியல் மொத்தமாக முடிய போகிறதா? அல்லது சீரியலை விட்டு இவர் விலகப் போகிறாரா? அதனால் தான் இப்படி ஒரு பதிவு வெளியிட்டாரா? என்று குழப்பத்தில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏற்கனவே பிரியா மற்றும் காவியா என கதாநாயகி இருவருடைய திருமணமும் குழப்பத்தில் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து இந்த சீரியலில் கதாநாயகியின் சகோதரியின் திருமணமும் அதேபோலவே குழப்பத்தில் நடத்தி வைத்தனர். காதலித்த நபரை விட்டு விட்டு இன்னொரு நபருக்கு கட்டாய திருமணம் நடத்தி வைப்பது இந்த சீரியலில் வாடிக்கையாக இருக்கிறது என்பது பலருடைய வருத்தமாக இருக்கிறது. ஆனாலும் இந்த சீரியலில் கதாநாயகி திடீரென்று வெளியிட்ட பதிவால் ரசிகர்கள் என்னவென்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கின்றனர்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications