எங்க ஊரு பாட்டுக்காரன் செண்பகமா இது? அப்படியே அக்கா பானுப்ரியா மாதிரியே இருக்காங்களே! செம கேப்ஷன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ராமராஜன் நடித்த எங்க ஊரு பாட்டுக்காரன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை சாந்திப்பிரியா சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. நடிகை சாந்திப்பிரியா நடிகை பானுப்ரியாவின் தங்கை தான் இந்த நிலையில் புடவையில் சாந்தி பிரியா வெளியிட்ட போட்டோ ஷூட் புகைப்படங்கள் பல்வேறு கருத்துக்களை பெற்று வருகிறது.

1987 ஆம் ஆண்டு கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான எங்க ஊரு பாட்டுக்காரன் திரைப்படத்தில் நடிகை சாந்திப்பிரியா நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 35 வருடங்களை தாண்டிவிட்ட நிலையிலும் இன்னும் அதே இளமை குறையாமல் நடிகை சாந்தி பிரியா அடிக்கடி பெண்களுக்கு மோட்டிவேஷன் கொடுக்கிற மாதிரி ஒர்க் அவுட் வீடியோக்கள் மற்றும் யோகா, தியானம் செய்கிற வீடியோக்கள் புகைப்படங்களை வெளியிட்டு பலரையும் வாவ் சொல்ல வைத்துக் கொண்டிருக்கிறார்.

Enga Uru Patukaran Movie Actress Santhipriya insta post

நடிகை சாந்தி பிரியாவிற்கு எங்க ஊரு பாட்டுக்காரன் திரைப்படம் தான் முதல் திரைப்படம். ஆனால் அந்த திரைப்படம் முதல் திரைப்படம் என்று சொல்ல முடியாத அளவிற்கு இவருடைய நடிப்பு எதார்த்தமாக இருக்கும். இந்த திரைப்படத்தின் மூலமாகவே இவருக்கு அதிகமான ரசிகர்கள் கிடைத்திருந்தனர். அதைத்தொடர்ந்து பல முன்னணி நடிகர்களோடு நடித்திருந்தார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி திரைப்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். ஆனாலும் ஒரு கட்டத்தில் இவருக்கு தமிழில் திரைப்பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதும் ஹிந்தி டிவி சீரியல்களில் நடிக்க சென்று விட்டார். 1994 ஆம் ஆண்டு ஹிந்தி திரைப்படத்தில் நடித்துவிட்டு அதற்கு பிறகு திரையுலகில் இருந்து இவர் விலகி இருந்தார். இந்த நிலையில் தான் சமீபத்தில் இவரிடம் பேட்டி ஒன்றில் நீங்க எதனால தமிழ் சினிமாவில் அதிகமாக நடிக்கவில்லை என்று கேட்க,

அதற்கு நான் வேண்டாம் என்று சொல்லவில்லை தமிழ் சினிமாவை விட்டு போக எனக்கு விருப்பம் எல்லாம் கிடையாது. எனக்கு வாய்ப்புகள் குறைய தொடங்கியது. அதே நேரத்தில் பிற மொழிகளில் வாய்ப்பு அதிகரித்தது. அதனால் தான் அங்கு போனேன். இப்போதும் தமிழில் நல்ல திரைப்படங்கள் என்னுடைய கேரக்டருக்கு தகுந்த மாதிரி கிடைத்தால் ஓகே சொல்லி விடுவேன் என்று கூறியிருக்கிறார்.

அதுபோல எப்போதும் வயது என்பது ஒரு நம்பர் தான் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கும் சாந்தி பிரியா இந்த வயதிலும் பிட்டாக இருக்கும் நிலையில் தற்போது மஞ்சள் கலர் புடவையில் சில புகைப்படங்களை எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதோடு இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்க அக்கா பானுப்பிரியா மாதிரியே நீங்களும் இருக்கீங்க என்று பலர் கருத்து தெரிவித்து வருவதை பார்க்க முடிகிறது.

அதோடு இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல பிரபலங்களும் கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அந்த பதிவிற்கு சாந்தி பிரியா "உணர்வுகளை எப்போதும் நிறுத்த முடியாது. நம்முடைய சந்தோஷத்தை வெளிக்காட்டுவதில் எந்த தவறும் இல்லை" என்று இவர் கேப்ஷன் கொடுத்திருக்கும் நிலையில் இதற்கு லைக்குகளும் குவிந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+