இது அசிங்கமா இல்லையா? குணசேகரிடம் கேள்வி கேட்ட கதிர்.. வசுவால் வந்த பிரச்சனை.. பரபரப்பான திருப்பம்
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் ஏப்ரல் 7-ம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அனைவர் முன்னாடியும் என்னால் கையெழுத்து போட முடியாது என கதிர் பிரச்சனை செய்கிறார்.
தன்னை கலாய்த்து அவமானப்படுத்திய வசுவால் நந்தினி கண்கலங்குகிறார்.

நிச்சயதார்த்தம்:
எதிர்நீச்சல் சீரியலில் எல்லாரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தருணம் நிகழத் தொடங்கி இருக்கிறது. ஏற்கனவே ஆதிரை கல்யாணம் நடக்குமா? நடக்காதா என்று பெரும் பரபரப்பு எதிர்பார்ப்பும் இருக்கும் நிலையில், தற்போது ஆதிரை நிச்சயதார்த்தம் வரை வந்திருக்கிறது. அனைவரும் மண்டபத்திற்கு வந்திருக்கும் நிலையில் அங்கே புதியது புதியதாக பிரச்சனைகள் வெடித்துக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் கதிர் மற்றும் குணசேகரன் இடையே மீண்டும் வாக்குவாதம் தொடங்குகிறது.
கோபத்தில் இருக்கும் கதிர்:
ஏற்கனவே குணசேகரன் மற்ற தம்பிகளை போலவே கதிரையும் வீட்டில் வைத்து அவமானம் செய்ததால் குணசேகரனோடு இனி எந்த பிரச்சினையும் வேண்டாம் என்று கை எடுத்து கும்பிட்டு தனக்கு தன்னுடைய நிலைமையை புரிய வைத்துவிட்டிங்க என்று சென்டிமென்டாக பேசி கதிர் விலகி இருந்தார். ஆனால் கதிர் இல்லாமல் நான் மண்டபத்திற்கு வர மாட்டேன். நீ இல்லாமல் நான் இந்த கல்யாணத்திற்கு எந்த வேலையும் செய்ய மாட்டேன் என்று வீட்டில் ஸ்ட்ரைக் செய்து குணசேகரன் கதிரை மீண்டும் மனம் மாற வைத்து மண்டபத்திற்கு கூட்டிக்கொண்டு வந்திருக்கிறார்.

மறைக்கும் குணசேகரன்:
ஆரம்பத்திலேயே ஆதிரையின் திருமண விஷயத்தில் தான் போடும் பிளான் பற்றி கதிர் மற்றும் ஞானத்திடம் ரகசியமாக சத்தியம் வாங்கி வைத்திருந்த குணசேகரன் கரிகலன் குடும்பத்தோடு தான் செய்திருக்கும் ரகசிய ஒப்பந்தத்தை பற்றி இப்ப வரைக்கும் வாய் திறக்காமல் இருக்கும் நிலையில், தன்னால் தன்னுடைய பெயரில் இருக்கும் கம்பெனியை ஆதிரையின் திருமணத்திற்கு எழுதிக் கொடுக்க முடியாது என்று கதிர் பிடிவாதம் செய்து கொண்டிருக்கும் நிலையில் அவரை சமாதானம் செய்து வைக்க பார்க்கிறார்.

இன்றைய ப்ரோமோ:
இந்த நிலையில் இன்றைய ப்ரோமோவில் மணப்பெண் அறையில் இருக்கும் நந்தினியை வசு எதார்த்தமாக கிண்டல் செய்ய, இந்த வீட்டில் இருக்கிறவங்க தான் இப்படி அசிங்கப்படுத்துறாங்கன்னு நெனச்சிட்டு இருக்கிறேன். ஆனால் இவளும் இப்படி பேசுறா இது கஷ்டமாக இருக்கு என்று கண்கலங்கி கொண்டிருக்கிறார். அடுத்ததாக அறையில் இருக்கும் குணசேகரனிடம் கதிர் கோபமாக, எல்லார் முன்னாடியும் கையெழுத்து போட சொன்னா அசிங்கமா இருக்காதா? என்று கோபத்தோடு கேட்க, எவன் அசிங்கப்படுத்தினானோ அவன் முன்னாடி நெஞ்ச நிமித்திக்கிட்டு நிக்குறதுக்கு என்ன செய்யணுமோ அதை செய்யணும் என்று சாமர்த்தியமாக பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இன்று இரவு எப்படியும் ஒரு பஞ்சாயத்து இருக்கப் போகிறது என்பது இன்றைய ப்ரோமோவில் தெரிகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications