எதிர்நீச்சலில் மீண்டும் மணக்கோலத்தில் ஆதிரை.. ஈஸ்வரிக்கு கிடைத்த அவமானம்.. இனி நடக்கப் போவது இது தானா?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரை கேரக்டரில் நடித்து வரும் நடிகை சத்யா தேவராஜன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புது வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
ஏற்கனவே ஆதிரையை கரிகாலன் நடுரோட்டில் வைத்து வலுக்கட்டாயமாக தாலி கட்டியிருந்த நிலையில் இப்போது அந்த தாலியை கழட்டி வீசிவிட்டு ஆதிரை வீட்டை விட்டு கிளம்பி போயிருக்கிறார்.
இந்த நிலையில் இப்போது மணக்கோலத்தில் இருக்கும் வீடியோ ஒன்றை ஆதிரை வெளியிட்டு இருக்கும் நிலையில் இனி என்ன நடக்கப்போகிறது என்பதை பார்ப்போம்.

ஆரம்பத்திலிருந்து யாரும் எதிர்பார்க்காத வகையில் பல திருப்பங்கள் வந்து கொண்டே இருக்கிறது. சீரியலில் கதை இப்படித்தான் இனி போகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தால் அதை எல்லாம் பொய் என்று சொல்லும் வகையில் கடைசியில் இயக்குனர் கதையை மாற்றி விடுகிறார்.
அந்த மாதிரி எதிர்நீச்சல் சீரியலில் நடந்த பல மாற்றங்களை சொல்லலாம். அதிலும் யாரும் எதிர்பார்க்காத வகையில் பல மாதங்களாக இழுத்தடித்துக் கொண்டிருந்த ஆதிரையின் திருமணம் கடைசியில் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து இருந்தது. அதை அருணை காதலித்த விஷயம் பெரிய அளவில் ரசிகர்களின் மனதை கவராமல் இருந்த நிலையில் அருணுக்காக ஆதிரை பல போராட்டங்களை சந்திப்பது தவறு என்றும் பலரும் கருத்து கூறி வந்தனர்.
அதுபோல ஆதிரை அவருக்கு பிடித்த அருணை கல்யாணம் பண்ண போகிறாரா? அல்லது அண்ணன் சொன்ன கரிகாலனை கல்யாணம் பண்ண போகிறாரா என்று எதிர்பார்ப்பும், விறுவிறுப்பும், ரசிகர்களின் மத்தியில் இருந்தது. எப்படியோ பெண்கள் எல்லோரும் சேர்ந்து ஆதிரைக்கு பிடித்த வாழ்க்கையை முடித்துக் கொடுத்து விடுவார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையை கடைசியில் குணசேகரன் நடுத்தெருவில் வைத்து ஆதிரைக்கு கரிகாலன் தாலி கட்ட வைத்திருந்தார்.

இது பெரிய அளவில் அந்த நேரத்தில் பேசப்பட்டது. இந்த நிலையில் சில மாதங்கள் கழித்து இப்போது ஆதிரைக்கு அருணை ஆக்சிடென்ட் செய்தது குணசேகரன் தான் என்ற உண்மை தெரியும்படி கதையை நகர்த்தி இருக்கின்றனர். அதனால் கோபமான ஆதிரை கரிகாலன் கட்டிய தாலியை மீண்டும் கழட்டி எறிந்து விட்டு அருண் வீட்டிற்கு சென்று இருக்கிறார்.
அப்போது சாருபாலா குணசேகரனிடம் நாங்க அருண் ஆதிரைக்கு திருமணம் நடத்தி வைப்போம் என்று சூளுரைத்த நிலையில், இன்று இந்த சீரியலில் ஆதிரை கேரக்டரில் நடிக்கும் சத்யா தேவராஜன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புது வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் மணகோலத்தில் இருக்கிறார். ஏற்கனவே எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் மற்றும் ஈஸ்வரி இருவரும் எதிரெதிரே எலக்சனில் போட்டியிடுகின்றனர்.
இதில் யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பும் இருக்கிறது. அதே நேரத்தில் இன்று வெளியான ப்ரோமோவில் ஈஸ்வரி ஓட்டு கேட்டு மக்களிடம் போயிருந்த நிலையில் நாங்கள் உங்களுக்கு ஓட்டு போடணும் என்றால் நீங்க எங்களுக்கு என்ன தருவீங்க என்று மக்கள் அதிர்ச்சி கொடுத்திருந்தனர். அதேபோல இப்போது ஆதிரையும் திருமண கோலத்தில் வீடியோ வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கிறார்.

ஏற்கனவே தேர்தல் பரபரப்பு ஒரு பக்கம் இருக்கிறது. அதேபோல ஜனனி கம்பெனியை தொடங்குவாரா இல்லையா என்று எதிர்பார்ப்பும் இருக்கிறது. அதுபோல ஜனனியின் அப்பத்தாவாக கில்லி படத்தில் பிரகாஷ்ராஜின் அம்மா கலா சீரியலில் அறிமுகமாக இருக்கிறார். இந்த நிலையில் இனி வரும் வாரங்களில் சீரியல் பெரும் பரபரப்பு ஏற்பட இருக்கிறது.
ஏற்கனவே ஈஸ்வரியை ஜெயிப்பதற்காக குணசேகரன் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருக்கிறார். அதேபோல இனி ஆதிரையும் அடுத்த அதிர்ச்சி கொடுக்க இருக்கும் நிலையில் குணசேகரன் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications