எதிர்நீச்சல்: கர்ப்பமாகும் ஜனனி.. ஜெயிலுக்கு போகும் ஜீவானந்தம்.. குணசேகரனுக்கு பதிலாக புது வில்லன்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கும் நிலையில் இனி இதுதான் நடக்கும் என்று சில க்ளூ கிடைத்திருக்கிறது.
அதன்படி நேற்றைய எபிசோடில் அப்பத்தா இருந்த கார் வெடித்த இடத்தை பார்ப்பதற்காக சக்தி மற்றும் ஜனனி இருவரும் போயிருந்தனர்.

அப்போது யாரும் எதிர்பார்க்காத விதமாக சில நிகழ்வுகள் நடைபெற்றது அதை வைத்து இனி கதை இப்படித்தான் பயணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் சில மாதங்களாகவே கோவில் திருவிழாவில் வைத்து குணசேகரன் அப்பத்தா மற்றும் ஜீவானந்தத்தை போட்டு தள்ள வேண்டும் என்று பிளான் போட்டு இருந்தார். அதுபோலவே ஜீவானந்தத்திற்கு தன்னுடைய மனைவியை கொலை செய்தது குணசேகரனும் அவருடைய தம்பியும் தான் என்ற ரகசியம் தெரிய வந்து இருந்த நிலையில் ஜீவானந்தம் தன்னுடைய தரப்பில் இருந்து குணசேகரனை போட்டுத்தள்ளுவதற்காக கோவில் திருவிழாவிற்கு வந்திருந்தார்.
அதே நேரத்தில் ஜீவானந்தத்திற்கு ஆதரவாக கௌதம் கதிர் மற்றும் குணசேகரனை கொலை செய்ய வேண்டும் என்றும் சில முயற்சிகளை எடுத்திருந்தார். ஆனால் எல்லாரும் எதிர்பார்த்தபடி எதுவுமே நடக்கவில்லை. கடைசியில் அப்பத்தாவை கொலை செய்ய வேண்டும் என்று குணசேகரன் அப்பத்தாவிற்கு பாலில் மயக்க மருந்தை கொடுத்து இருந்தார்.
அதன்படியே மயங்கி விழுந்த அப்பத்தாவை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போய் கொண்டு இருந்த நேரத்தில் குணசேகரனின் காரை நோக்கி சிலர் துப்பாக்கியால் சுட்டு இருந்தனர். இதனால் தன்னுடைய தம்பிகளோடு காரை விட்டு வேகமாக இறங்கிய குணசேகரன் துப்பாக்கி வந்த திசையை நோக்கி ஓடிக் கொண்டிருப்பார்.
அதே நேரத்தில் காருக்குள் அப்பத்தா இருந்த நிலையிலேயே திடீரென்று அந்த கார் வெடித்து தீப்பிடித்து சிதறி இருக்கும். இப்படியாக இருக்கும் நிலையில் இது முழுக்க முழுக்க குணசேகரனின் பிளானாகத்தான் இருக்கும் என்று எல்லோருக்குமே தெரியும். காரணம் அப்பத்தாவை போட்டு தள்ளிவிட்டு இப்போது சொத்துக்காக ஜீவானந்தம் தான் இதை செய்தார் என்று பழியை குணசேகரன் சொன்னபடியே வீட்டில் கதிர் மற்றும் ஞானம் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
அதே நேரத்தில் அப்பத்தா காரோடு எரிந்த இடத்தை பார்க்க வேண்டும் என்று சக்தி மற்றும் ஜனனி இருவரும் வந்த நிலையில் ஜனனி அங்கு வைத்து வாந்தி எடுத்திருக்கிறார். இதனால் ஜனனி கர்ப்பமாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோல இன்று வெளியான ப்ரோமோவில் ஜீவானந்தத்தை தேடி போலீஸ் வந்திருப்பதால் குணசேகரன் கொடுத்த கம்ப்ளைன்ட் காரணமாக போலீஸ் அவரை கைது செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் குணசேகரை போலவே இந்த சீரியலில் வில்லனாக சக்தியின் தம்பி கிருஷ்ணா அறிமுகமாகி இருந்தார். அவருடைய காட்சிகள் இரண்டு நாட்கள் மட்டுமே ஒளிபரப்பாகி இருந்து நிலையில் சில நாட்களுக்கு பிறகு தான் மீண்டும் ஷூட்டிங்கில் கலந்து கொண்டேன் என்று கிருஷ்ணாவாக நடிக்கும் ஆர் ஜே நேலு தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு வெளியிட்டிருக்கிறார்.
இதனால் இப்போது குணசேகரன் சீரியலில் இல்லாமல் இருக்கும் நிலையில் மீண்டும் புது வில்லன் என்ட்ரி கொடுக்க இருக்கிறார். இதனால் கதையில் இனி சுவாரசியம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications