எதிர்நீச்சல் 2 தொடங்கும் முன்பே சீரியலில் இருந்து விலகிய பிரபலம்.. அடேங்கப்பா! இத்தனை மாற்றமா?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலில் இரண்டாவது பாகம் விரைவில் ஒளிபரப்பாகும் என்ற ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இந்த சீரியலில் தாரா கேரக்டரில் பர்ஃசானா அன்சாரி நடித்து வந்தார். அவருக்கு பதிலாக யார் நடிக்க போகிறார் என்று பார்க்கலாம்.
சன் டிவியில் டி ஆர் பி யில் முன்னணி இடத்தை பிடித்த எதிர்நீச்சல் சீரியலை அவ்வளவு சீக்கிரமாக சின்னத்திரை ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். இளைஞர்களையும் சீரியல் பார்க்க வைத்த பெருமை இந்த சீரியலை சாரும். இந்த சீரியலுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலதரப்பட்ட ரசிகர்கள் இருந்தனர்.

அதுபோல இந்த சீரியலில் நடித்த நடிகர்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலம் அடைந்து விட்டனர். குழந்தைகளாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி எல்லோருக்கும் இந்த சீரியலில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால் இந்த சீரியலில் கேரக்டர்கள் எப்போதும் பேசப்படுகிறது.
எதிர்நீச்சல் சீரியல் திடீரென்று முடிவுக்கு வந்தது பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது. அதே நேரத்தில் இந்த சீரியல் எப்படியும் 2000 எபிசோடுகளுக்கு தாண்டி போகும் என்று சொல்லப்பட்ட நிலையில் 700 எபிசோடுகளை தாண்டியபோது முடிவுக்கு வந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தான் கொடுத்திருந்தது.
ஆதி குணசேகரனாக நடித்து வந்த மாரிமுத்துவின் இறப்பிற்கு பிறகு கதையில் செய்யப்பட்ட மாற்றம் குறித்து அதிகமான ட்ரோல்களும் விமர்சனங்களும் எழுந்த நிலையில் சீரியல் திடீரென்று முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால் இந்த சீரியலின் இரண்டாவது பாகம் வரவேண்டும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
அது போலவே இப்போது இந்த சீரியலில் இரண்டாவது பாகத்தை இயக்குனர் திருச்செல்வம் தொடங்கி இருக்கிறார். அதற்கான ப்ரோமோவும் வந்துவிட்டது. அதில் ஜனனி கேரக்டரில் நடித்து வந்த மதுமிதா சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக விஜே பார்வதி இந்த சீரியலில் நடிக்கிறார்.
ஆனாலும் நந்தினியாக ஹரிப்ரியாவும் ரேணுகாவாக பிரியதர்ஷினியும் ஈஸ்வரியாக கனிகாவும் தொடர்கிறார்கள். அதுபோல இந்த சீரியலில் தாரா கேரக்டரில் நடித்து வந்த பர்ஃசானா என்ற குட்டி பாப்பா சீரியலில் இருந்து விலகி இருக்கிறார்.
அவர் எதிர்நீச்சல் முடிவடைந்ததும் அடுத்தடுத்த சீரியல்களில் பிஸியாக நடித்துக் நடித்துக் கொண்டிருப்பதால் இந்த சீரியலில் நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் அவருக்கு பதிலாக பிரஜானா என்ற குட்டி பாப்பா அறிமுகம் ஆகி இருக்கிறார். அதுபோல ஆதிரை கேரக்டரில் நடித்து வந்த சத்யபிரியாவும் விஜய் டிவியில் புது சீரியலில் கமிட் ஆகி இருப்பதால் அவரும் இந்த சீரியலில் தொடர்வாரா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

அதுபோல ஆதி குணசேகரன் கேரக்டரில் வேலராமமூர்த்தி மாரிமுத்துவின் மறைவுக்கு பிறகு நடித்து வந்தார். ஆனால் அவரும் இப்போது தொடர்வாரா அல்லது அவருக்கு பதிலாக புதியதாக வேறு ஏதும் வில்லன் வரப்போகிறாரா? என்ற கேள்விகளும் இருக்கிறது. ஏற்கனவே முதல் பாகத்தில் இறுதியில் தர்ஷன், கதிர் எல்லோருமே மீண்டும் குணசேகரன் பக்கம் திரும்பி இருந்தனர்.
இதனால் இரண்டாவது பாகத்தில் அதே இடத்தில் இருந்துதான் கதை பயணிக்கும் என்று தெரிகிறது. மீண்டும் குணசேகரன் வீட்டுப் பெண்கள் அவர்களுடைய கணவர்களை தாண்டி எப்படி அவர்களுடைய கனவை அடைகிறார்கள் என்று கதை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே வெளியான ப்ரோமோவில் நந்தினி கரண்டியோடு நிற்கிறார். அவர் முதல் பாகத்தில் சமையல் ஆர்டர் எடுத்து செய்து கொண்டு இருந்ததால் அது போலவே இப்போது தொடங்குவார் என்று தெரிகிறது. ஆனாலும் என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications