எதிர்நீச்சல் வசனகர்த்தா ஸ்ரீவித்யா.. "கட்டாய” திருமணம்.. கணவர் இவரா? இதனால்தான் வசனம் இப்படியா?
சென்னை: கோலங்கள் சீரியலில் ஆர்த்தியாக நடித்த நடிகை ஸ்ரீவித்யா தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஸ்கிரிப்ட் ரைட்டர் ஆக இருந்து வருகிறார்.
இந்த சீரியலில் அனல் பறக்கும் வசனங்களுக்கு சொந்தக்காரர் இவர்தான். ஆனால் இவருடைய திருமணம் மற்றும் நிஜ வாழ்க்கை பற்றி வெளியே தெரியாத பல ரகசியங்கள் இருக்கிறது.
ஸ்ரீவித்யா யாரை திருமணம் செய்து இருக்கிறார். அவருடைய திருமணம் எப்படி நடந்தது என்பது பற்றி சில ரகசியங்களை விரிவாக பார்க்கலாம்.
சன் டிவியில் ஒளிபரப்பான கோலங்கள் சீரியலில் ஆர்த்தி கேரக்டரில் நடித்த நடிகை தான் ஸ்ரீவித்யா. இவர் நடிப்புக்கு வருவதற்கு முன்பே படிப்பில் கெட்டிக்காரியாக இருந்திருக்கிறார். அதோடு நடனமும் இவருக்கு கைவந்த கலை தானாம். ஆனாலும் நடிப்பின் மீது இருந்த ஆசையால் இவர் முதலில் ஒரு டான்சராக அறிமுகமாகி பின்பு பல சீரியல்களில் நடித்திருக்கிறார்.
கோலங்கள் சீரியல் என்று சொன்னாலே அதில் டக் என்று நினைவிற்கு வரும் கேரக்டர்களில் ஒன்று தான் ஆர்த்தி அந்த ஆர்த்தி கேரக்டரில் தான் ஸ்ரீ வித்யா பாசிட்டிவ் கேரக்டராக நடித்திருக்கிறார். அதற்கு பிறகு தென்றல் சீரியலில் இவருடைய வில்லத்தனத்தை பார்த்து பலரும் மிரண்டு போய் இருக்கின்றனர்.

தமிழ் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் இவர் நடித்திருக்கிறாராம். இவர் படித்துக் கொண்டிருக்கும் போதே இவருக்கு சினேகா நடித்த "என்னவளே" திரைப்படத்தில் சினேகாவின் தங்கையாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த திரைப்படம் தான் இவருடைய முதல் திரைப்படமாக அமைந்திருக்கிறது.
அதைத் தொடர்ந்து என்னிடத்தில் உன்னை கொடுத்தேன் என்ற திரைப்படத்திலும் இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். தொடர்ந்து தான் இவருக்கு கோலங்கள் சீரியலில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. முதல் சீரியலில் இவருக்கு கிடைத்த வாய்ப்பின் காரணமாக அடுத்த சீரியலில் இவருக்கு தென்றல் சீரியலில் நெகடிவ் கேரக்டர் கிடைக்கும்போது முதலில் பயந்து இருக்கிறார்.
ஆனால் தன்னுடைய திறமையை காட்டுவதற்கு இதுதான் சரியானது என்று ஓகே செய்த பிறகு தான் இவர் எதிர்பார்க்காத அளவிற்கு ரசிகர்கள் இவரை திட்டி வந்திருக்கிறார்கள். நடிகையாக டான்ஸராக மட்டுமல்லாமல் இவர் ஒரு பிசினஸ் உமன் ஆகவும் ஸ்கிரிப்ட் ரைட்டர் ஆகவும் இருந்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் ஜோதிகாவின் தோழியாகவும் இவர் நடித்திருப்பார்.
அந்த மாதிரி சின்னத்திரை, வெள்ளித்திரை என இவர் பிஸியாக நடித்து கொண்டிருக்கும் போது இவருடைய வீட்டில் இவருக்கு மாப்பிள்ளை பார்க்க தொடங்கி இருக்கிறார்கள். அப்போது எனக்கு இப்போதெல்லாம் கல்யாணமே வேண்டாம் என்று கறாராக அம்மா அப்பாவிடம் ஸ்ரீவித்யா கூறிவிட்டாராம்.
ஆனால் ஸ்ரீவித்யாவிற்கு அவருடைய அண்ணன் மீது அளவுக்கு அதிகமான பாசம் இருக்கிறதாம். அண்ணன் என்ன சொன்னாலும் தட்டவே மாட்டாராம். இதனால் இந்த விஷயம் அப்படியே அவருடைய அண்ணனுக்கு போயிருக்கிறது. அண்ணன் நேரடியாக ஸ்ரீவித்யாவிடம் பேசி இருக்கிறார். உடனே கல்யாணத்திற்கு சரி என்று சொல்லிவிட்டாராம்.
நாங்கள் எவ்வளவோ சொல்லியும் கட்டாயப்படுத்தியும் பார்த்தும் அதற்கு சரி என்று சொல்லாத ஸ்ரீவித்யா அண்ணன் சொன்னதும் மட்டும் உடனே சரின்னு சொல்லிட்டாளே என்று கொஞ்சம் அவங்களுக்கு வருத்தம் இருந்தாலும் தங்களுடைய உறவுக்காரர் ஒருவரை ஸ்ரீவித்யாவிற்கு பேசி முடித்து இருக்கின்றனர்.
ஸ்ரீவித்யா மாப்பிள்ளை யாராக இருந்தாலும் சரின்னு சொல்லிட்டாராம். ஆனால் மாப்பிள்ளை பற்றி எதுவுமே அவருக்கு தெரியாதாம். அப்போது ஸ்ரீவித்யாவின் கணவர் நாராயணன் சென்னையில் உள்ள ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாராம். ஃபேமிலியின் கட்டாயத்தினால் கல்யாணம் செய்து கொண்ட ஸ்ரீவித்யாவிற்கு அவர் எதிர்பார்க்காத அளவிற்கு கணவர் அமைந்திருக்கிறாராம். காரணம் ஸ்ரீ வித்யா என்ன செய்தாலும் அதற்கு அவருடைய கணவர் முழு சப்போர்ட் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
அது பற்றி சில பேட்டிகளில் கூட அவரே கூறியிருக்கிறார். கல்யாணத்துக்கு முன்னாடி ஸ்ரீவித்யா பெற்றோரின் கட்டாயத்திற்காக கல்யாணம் செய்தாலும் கல்யாணத்திற்கு பின்னாடி அவருடைய கணவரை ரொம்பவே பிடித்து போய் காதலிக்க தொடங்கி விட்டாராம். எதிர்பார்க்காத அளவிற்கு என்னை நல்லாவே பார்த்துக்கிற கணவர் எனக்கு கிடைச்சிருக்காரு என்று ஸ்ரீ வித்யா மகிழ்ச்சியோடு கூறி இருக்கிறார்.
-
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications