எதிர்நீச்சல் 2: என்னை வேணும்னே மாத்திட்டாங்க! நான் அழுதும் திருச்செல்வம் மனம் இறங்கல! பிரபலம் பதிவு
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் சீசன் 2 சீரியல் கடந்த திங்கட்கிழமை முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் முதல் பாகத்தில் நடித்த பலர் நடிக்கிறார்கள். ஆனால் ஒரு சிலர் மாற்றப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் முதல் பாகத்தில் தாரா கேரக்டரில் நடித்த குழந்தை தன்னை வேணும்னே மாற்றிவிட்டார்கள் என்று திடீர் பதிவு ஒன்று வெளியிட்டு இருக்கிறார். இது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சன் டிவியில் திருச்செல்வம் எதிர்நீச்சல் சீரியலை இயக்கி இருக்கிறார். முதல் பாகம் பெரிய அளவில் பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் ஆனது. அதனாலயே இந்த சீரியலில் நடித்த நடிகர்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றனர். அவர்களுக்கும் பிரபலம் கிடைத்தது. முதல் பாகத்தில் அதிகமான புது முகங்கள் நடித்திருந்தனர்.

கிட்டத்தட்ட 2000 எபிசோடை தாண்டும் என்று எதிர்பார்த்த நிலையில் திடீரென்று 770 எபிசோடுகளுடன் முடிவுக்கு வந்துவிட்டது. இது சீரியல் ரசிகர்களை மட்டும் அல்லாமல் இந்த சீரியலில் நடித்த நடிகர்களையும் வருத்தம் அடைய வைத்திருந்தது. அதனால் அதிகமான ரசிகர்கள் இந்த சீரியலின் இரண்டாவது பாகம் மீண்டும் தொடங்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தனர்.
இந்த நிலையில் இயக்குனர் திருச்செல்வம் எதிர்நீச்சல் தொடர்கிறது என்று இரண்டாவது பாகத்தை தொடங்கி இருக்கிறார். இது கடந்த திங்கட்கிழமையிலிருந்து ஒளிபரப்பாகி வருகிறது. இது சீரியலில் முதல் பாகத்தில் இருந்தே கதை தொடங்குவது போன்று இரண்டாவது பாகத்தில் இருக்கிறது. அதுபோல முதல் பாகத்தில் நடித்த ஒரு சிலர் மாற்றப்பட்டு இருக்கிறார்கள். குறிப்பாக கதாநாயகி ஜனனி மாற்றப்பட்டிருக்கிறார். அதுபோல தாரா, ஐஸ்வர்யாவாக நடித்த குழந்தைகளும் மாற்றப்பட்டு இருக்கிறார்கள்.

இந்த சீரியலில் தாரா கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. நந்தினி மற்றும் கதிரின் மகளாக தாரா நடித்திருந்த நிலையில் தாரா நந்தினி போலவே துடுக்காக பேசும் கேரக்டர் பலராலும் பாராட்டப்பட்டது. இந்த சீரியலில் தாரா கேரக்டரில் நடித்தது அன்சரி என்ற குழந்தைதான். அவர் தற்போது சில சீரியல்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.
ஆனால் இரண்டாவது பாகத்தில் அவர் தொடரவில்லை என்றபோது அவர் சீரியலில் பிஸியாக இருப்பதால் நடிக்கவில்லையாக இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது அன்சரி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவுதான் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அதாவது "அந்த பதிவில் என்னை வேண்டுமென்றே மாற்றிவிட்டார்கள் எதிர்நீச்சல் 2ல. நான் மிகவும் அழுதேன். ஆனாலும் மனம் இறங்கவில்லை திருச்செல்வம் அங்கிள்..." என்று அழுவது போன்ற எமோஜி பகிர்ந்து இருக்கிறார். இதற்கு அவருக்கு பலரும் ஆறுதல் கூறி வருகிறார்கள்.
ஆனால் எதற்காக தாரா கேரக்டரில் மாற்றம் செய்யப்பட்டார்கள் என்பது புரியாத புதிராகத்தான் இருக்கிறது. நந்தினியின் குழந்தை ஆறு மாதத்தில் இப்போது வளர்ந்து விட்டது போல காட்டப்படுவது சீரியலின் கதையில் முரணாக தெரிகிறது. ஆனாலும் திருச்செல்வம் எதற்காக இந்த முடிவு எடுத்திருப்பார் என்பது பலருடைய கேள்வியாகவும் இருக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications