குணசேகரனின் குட்டு உடைந்தது! இந்த நீலி கண்ணீர் தேவையா? கண் விழித்த தர்ஷினி சொன்ன வார்த்தை
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் மார்ச் 14ஆம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. இதில் கண்விழித்த தர்ஷினி அப்பா அப்பா என்று கத்த குணசேகரன் ஓவர் ஆக்டிங் செய்து கொண்டிருக்க அங்கிருக்கும் கதிர் மற்றும் ஞானம் எதிர்பார்க்காத செயலை செய்கின்றனர்.
அதே நேரத்தில் ஜீவானந்தம் காணவில்லை என்று போலீஸ் சொன்னதை ஈஸ்வரி சந்தேகப்படுகிறார். மறுபக்கத்தில் ஹாஸ்பிடலில் இருந்து ஞானம் மற்றும் கதிரை கரிகாலனை வைத்து அடித்து துரத்த குணசேகரன் பிளான் போட்டு இருக்கிறார். இந்த நிலையில் என்ன நடக்கப் போகிறது என்பதை பார்க்கலாம்.

அந்த வகையில் பல வாரங்களாக ஜவ்வு மாதிரி இழுத்துக் கொண்டு இருந்த தர்ஷினியின் கடத்தல் நாடகம் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில் தர்ஷினியை யார் கடத்திட்டு போனார் என்று உண்மை எல்லோருக்கும் இன்னும் தெரியாமல் இருக்கிறது. மயக்க நிலையில் இருக்கும் தர்ஷினி தன்னை காப்பாற்றியது ஜீவானந்தம் தான்.. அதுபோல என்னை கடத்த சொன்னது குணசேகரன் தான் என்ற உண்மையை சொல்வாரா? இல்லையா? என்ற பதை பதைப்புடன் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
மறுபக்கத்தில் குணசேகரன் எப்போதும் போல இந்த முறையும் ஜெயித்து விடக்கூடாது அப்படி ஜெயித்தால் நாங்கள் சீரியல் பார்க்க மாட்டோம் என்று வழக்கம் போல இந்த முறையும் ரசிகர்கள் கமெண்ட்களை கொட்டி வருகிறார்கள். ஆனால் என்ன நடக்கப் போகிறது என்பது இயக்குனருக்கு மட்டும்தான் தெரியும். ஒவ்வொரு முறையும் ட்விஸ்ட் என்கிற பெயரில் கடைசியில் ரசிகர்களின் மனதை சுக்கு நூறாக உடைத்து கொண்டிருக்கும் இயக்குனர் இந்த முறை என்ன செய்யப் போகிறார் என்று அவரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது.

ஆனாலும் இன்று வெளியான ப்ரோமோவில் கண்விழித்த தர்ஷினி அப்பா அப்பா என்று கத்த... அப்போது நீதிபதி முன்பு குணசேகரன், "தர்ஷினி அப்பா வந்துட்டம்மா.. இனிமே ஒரு பிரச்சனையும் உனக்கு இல்லம்மா" என்று சொல்ல, அதற்கு தர்ஷினி கண்ணை மூடிக்கொண்டு புலம்பும் வார்த்தைகளை கேட்டு ஞானம் மற்றும் கதிர் சந்தோஷம் கலந்த அதிர்ச்சி அடைகின்றனர்.
அதேபோல அடுத்த கட்டத்தில் ஜீவானந்தம் காணாமல் போய்விட்டார் என்று போலீஸ் சொல்வதை வைத்து ஈஸ்வரி அவர்களை ஒருவேளை வேற ஏதாவது பண்ணிட்டு வந்து இந்த போலீஸ் காணவில்லை என்று சொல்றாங்களா? என்று கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறார். அடுத்த கட்டத்தில் ஹாஸ்பிடலில் தர்ஷினி இருக்கும் ரூமுக்கு கதிர் மற்றும் ஞானத்தை போகவிடாமல் குணசேகரன் வெளியே துரத்துகிறார்.

அப்போது கரிகாலன் கிளம்பியா கிளம்பு நீ வீட்டில் போய் உன் பொண்டாட்டி முந்தானைய பிடிச்சுக்கோ என்று சொல்ல, கோபப்பட்ட கதிர் கரிகாலன் சட்டையை பிடித்து சண்டை போடுகிறார். அப்போது அங்கே இருக்கும் போலீஸ் வந்து இவர்களின் சண்டையை தீர்த்து வைக்கிறார்கள். தர்ஷினி உண்மையை சொல்லி குணசேகரின் முகத்திரையை கிழிக்க வேண்டும் என்று பலர் காத்திருக்கிறார்கள்.

அதே நேரத்தில் இந்த ப்ரோமோவுக்கு கீழே குணசேகரன் பாசமாக இருப்பது போன்று நடிப்பதை பார்க்கும்போது கடுப்பாக இருக்கிறது என்று பலர் தங்களுடைய கோபத்தை கொட்டி இருக்கிறார்கள். அதுபோல இன்னும் ஒரு சிலர் தர்ஷினி கேசுக்கும் வக்கீலாக இருக்கும் சாருபாலா எங்கே போனார் என்று தேடி வருகிறார்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications