டுவிஸ்ட்.. தர்ஷினி பேசிய வீடியோ அனுப்பியது இவரா? குணசேகரனுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. சபாஷ் கதிர்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் பிப்ரவரி 17ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதில் ஜனனி, நந்தினி மற்றும் ரேணுகா ஜாமினில் ஜெயிலிலிருந்து வெளியே வந்திருக்கும் நிலையில் மொத்த குடும்பத்திற்கும் குணசேகரன் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். ஆனால் நேற்று கோர்ட்டில் தர்ஷினி பேசிய ஆடியோ அனுப்பியது யார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கும் நிலையில் அது பற்றி பார்க்கலாம்.
அதே நேரத்தில் சில தினங்களுக்கு முந்தைய எபிசோடை பார்த்திருந்தால் நேற்று நடந்த நிகழ்வுகளுக்கு விடை ரசிகர்களுக்கு தெரிந்திருக்கும். அதாவது தர்ஷினி ரவுடிகள் இருந்து காணாமல் போயிருந்த நிலையில் நேற்று எப்படி வீடியோவில் பேசி இருக்கிறார் என்பது பலருடைய கேள்வியாக இருக்கும் நிலையில் அது எப்படி நடந்தது என்பதை பற்றி பார்க்கலாம்.

அந்த வகையில் எதிர்நீச்சல் தர்ஷினி ஒரு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே காணாமல் போயிருந்த நிலையில் எதிர்நீச்சல் பெண்கள் தேடினார்கள் தேடினார்கள் தேடிக் கொண்டே இருந்தார்கள். ஆனால் கடைசியில் வழக்கம்போல போலீஸிடம் சிக்கி குணசேகரன் முன்பு அவமானப்பட்டு இருந்தார்கள். இதனால் ரசிகர்களுக்கு வருத்தம் ஏற்பட்டு இருந்தது.
என்னடா இந்த சீரியலில் பெண்கள் முன்னேற்றம் என்று சொல்லிக் கொண்டு ஒவ்வொரு முறையும் தோல்வி அடைந்து கொண்டிருக்கிறார்களே என்ற கடுப்பில் தான் ரசிகர்கள் புலம்பி கொண்டிருப்பதை இணையத்தில் பார்க்க முடிகிறது. இப்படியான நிலையில்தான் நேற்று யாரும் எதிர் பார்க்காத வகையில் நீதிமன்ற காவலில் இருக்கும் ஈஸ்வரி, நந்தினி, ரேணுகா, ஜனனி இவர்களுக்கு எதிராக தர்ஷினி பேசியதாக ஒரு வீடியோ நீதிமன்றத்திற்கு வந்திருந்தது.

இது ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்திருந்தது. அப்போ ரவுடிகளிடம் இருந்து காணாமல் போன தர்ஷினியை வேறு யாரும் கடத்தி வைத்திருக்கிறார்களா அதனால் தான் தர்ஷினி இப்படி பேசுகிறாரா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதே நேரத்தில் குணசேகரனே ஒருவேளை தர்ஷணியை கடத்தி வைத்துக் கொண்டு இந்த நாடகத்தை போட்டு தன்னுடைய மனைவி மற்றும் தன்னை எதிர்த்து பேசிய வீட்டு மருமகள்களை கேவலப்படுத்த வேண்டும் என்பதற்காக இப்படி செய்து கொண்டிருக்கிறாரா என்றும் யோசிக்க வைத்திருக்கிறது.
இப்படியாக பல்வேறு கேள்விகள் இருந்தாலும் நேற்று முந்தைய தினம் எபிசோடில் ஜீவானந்தம் ஈஸ்வரியிடம் சில வார்த்தைகளை சொல்லி இருந்தார். அதாவது நீதிமன்றத்தில் கேள்வி கேட்கும் போது நான் சொல்ற மாதிரி நீங்க செய்யுங்க. என்னை எப்படியும் வெளியே விட மாட்டாங்க ஏற்கனவே நான் போலீஸை அடித்திருக்கிறேன். அந்த கேஸ் வேற போட்டு அதை சொல்லி எப்படியோ வெளியே விட மாட்டாங்க. அதனால என்னை இவர் தான் காரணம் என்று சொல்லிவிட்டு நீங்க எல்லோரும் வெளியே போய் பிள்ளையை தேடுற வேலையை பாருங்க என்று சொல்லி இருந்தார்.
ஆனால் சில வார்த்தைகள் அவர்கள் பேசியது வெளியே காட்டாமலும் இருந்தது அதனால் ஜீவானந்ததம் பிளான் பண்ணி தான் நேற்று ஏ ஐ பயன்படுத்தி தர்ஷினி பேசியது போன்று ஒரு வீடியோவை கோர்ட்டில் காட்டி இருக்கிறார்கள். அதை பார்க்கும் ரசிகர்களுக்கு கண்டிப்பாக வித்தியாசம் தெரிந்திருக்கும். தர்ஷினி எந்த இடத்திலும் கண்ணை இப்படி உருட்டி பேசியது கிடையாது.
அதுபோல தர்ஷினி இப்படி தயங்கி தயங்கியும் பேசியது கிடையாது. ஆனால் நேற்று அந்த வீடியோவில் தர்ஷினி பேசியது வித்தியாசமாக இருந்தது. அதனால் தான் ஈஸ்வரி மொத்த பழியையும் தானே ஏற்றுக் கொண்டு மற்ற மருமகளை ஜெயிலிலிருந்து வெளியே போக வைப்பதற்காக ஜட்ஜிடம் நான் தான் எல்லாம் செய்தேன் என்று சொல்லி இருக்கிறார்.
ஜீவானந்தத்தின் பிளான் படி ஈஸ்வரி பேசியிருக்கும் நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் ஜெயிலில் இருந்து வீட்டுக்கு வந்த எல்லோரிடமும் குணசேகரனை எதிர்த்துட்டு நீங்க எல்லாரும் எப்படி வாழ்றீங்கன்னு பார்ப்போம் என்று சொல்லி இருக்கிறார். சமீபத்தில் இப்போது இரண்டு, மூன்று வாரங்களாக கதிர் உடைய பர்பாமன்ஸ் வேற லெவலில் இருக்கிறது.
இதற்கு முன்பு அவர் அடிதடி செய்தாலும் அடுத்தவர்களை அவமானப்படுத்துவதை பார்த்து எல்லோரும் திட்டிக் கொண்டிருந்தனர். ஆனால் இப்போது அதே அடிதடி செய்தாலும் கதிரின் நடவடிக்கை மனமாற்றத்தை பார்த்து எல்லோரும் அவரை பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். இந்த சீரியலில் கதாநாயகனே இப்போது கதிராகத்தான் இருக்கிறார். இனி போகும் பாதையில் கதை எப்படி பயணிக்க போகிறது என்று பார்ப்போம்.












Click it and Unblock the Notifications