சாருலதாவை அவமானப்படுத்திய ஜனனி..கதிரால் ஏற்பட்ட பிரச்சனை.. அப்பத்தா அதிரடி..பரபரப்பில் எதிர்நீச்சல்
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் ஏப்ரல் 12ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் கதிர் வந்து கையெழுத்து போட்டு தந்தால் தான் நிச்சயதார்த்தம் நடக்கும் என்று அரசு மேடையில் சண்டை செய்து கொண்டிருக்கிறார்.
குணசேகரனும் அரசுவை சமாதானம் செய்வதற்காக மண்டபத்தில் கலவரம் செய்து கொண்டிருக்கிறார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அனைவரும் ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருந்த ஆதிரையின் நிச்சயதார்த்தம் மண்டபம் வரைக்கும் வந்திருக்கிறது. மேடையில் ஆதிரையும் அருணும் மாலை மாற்றியதும் அங்கே கலவரங்களும், பிரச்சனைகளும் ஏற்பட தொடங்கி இருக்கிறது.. ஏற்கனவே பல மாதங்களாக இந்த சீரியலில் ஆதிரை மற்றும் அருணின் காதல் விஷயம் சம்பந்தமாகவே இழுத்துக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு முடிவுக்கு வாங்கப்பா என்று ரசிகர்கள் நொந்து போய் இருக்கும் நிலையில் தற்போது பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.
கதிர் ஒரு பக்கம் குடித்துவிட்டு அறையிலே போதையில் விழுந்து கிடக்கிறார். ஆனால் மண்டபத்தில் மேடையில் மாலை மாற்றியதும் கதிர் வந்து கையெழுத்து போட்டு பேக்டரியை ஆதிரை பெயருக்கு மாற்றி தர வேண்டும் என்று அரசு பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார். மண்டபத்திற்கு ரிஜிஸ்டர் ஆபீஸரோடு வந்திருக்கும் அரசுவை பார்த்து எஸ்கேஆர்ருக்கு கூட இங்கே என்ன நடக்கிறது என்பது தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் இன்றைய ப்ரோமோவில், நிச்சய பத்திரிக்கையை படித்துக் கொண்டிருந்த ஐயரிடம் இதை நிறுத்துங்கள் என்று கூறி கோபத்தில் அரசு, கதிர் எங்கே என்று கேட்டால் தூங்குகிறான் என்று சொல்றீங்க என்று கத்த அதற்கு குணசேகரன் என் தம்பி வருவாயா, இப்ப அதற்கு என்ன? என்று கேட்க, ஜனனி சார்லதாவிடம் எப்படி மேம் இதையெல்லாம் கேட்டுட்டு நீங்க அமைதியா இருக்கீங்க? என்று கேட்கிறார். அதற்கு நக்கலாக எஸ்கேஆர் சிரிக்கிறார்.

குணசேகரனும், ஞானம், அப்பத்தா, சக்தி என மொத்த குடும்பமும் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது கதிரை நந்தினி தட்டி எழுப்ப முயற்சி செய்கிறார். அதே நேரத்தில் அப்பத்தா குணசேகரனிடம் இந்த நிச்சயம் நடக்கணுமா? வேண்டாமா? என்று கேட்க அதற்காக தானே போராடிக் கொண்டிருக்கோம் என்று குணசேகரன் பிரச்சனை பண்ணுகிறார். தற்போது இந்த பரபரப்பான ப்ரோமோவால், இன்று பெரும் பிரச்சனை இருக்கிறது என்று காட்டுகிறது. இந்த நிலையில் ரசிகர்கள் இன்றாவது இதற்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என்று வேண்டுகோள் வைத்து வருகிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications