ஆட்டம் காட்டிய கதிர்..பிளானை உடைத்த நந்தினி..கடுப்பான குணசேகரன்.. பரபரப்பின் உச்சத்தில் எதிர்நீச்சல்
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் ஏப்ரல் 13-ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
சொத்து எழுதி கேட்ட அரசு குடும்பத்தை, கதிர் குடித்துவிட்டு அவமானம் செய்கிறார்.
நந்தினி குணசேகரனை குத்தி காட்ட ஜனனி அனைவரிடமும் கெஞ்சி கொண்டிருக்கிறார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் இன்று எபிசோட்டுகான பிரமோவில் கதிர் வந்து கையெழுத்து போட்டு தந்தால் தான் எங்கேஜ்மென்ட் நடத்தி வைப்போம் என்று அரசு குடும்பத்தினர் பிரச்சனை செய்து கொண்டிருக்க, கதிர் குடிபோதையில் மட்டையாகி இருக்கிறார். அதை சொல்லி அரசு மேடையில் குணசேகரன் குடும்பத்தை அவமானப்படுத்துகிறார்.
தன்னுடைய தம்பிகளை அவமானப்படுத்தியதை தாங்க முடியாத குணசேகரன் பொங்கி எழுந்து எம்மா போய் கதிரை கூட்டிட்டு வாங்க என்று சொல்ல, கதிரை நந்தினியும், ரேணுகாவும் நந்தினியின் அப்பாவோடு போய் எழுப்பி பார்க்க அங்கே கதிர் அதற்கெல்லாம் அசைந்து கொடுக்கிற ஆளு மாதிரி தெரியவில்லை. கதிர் குடித்துவிட்டு உளறிக்கொண்டு நந்தினியின் அப்பாவிடம் என்னை அடிங்க மாமா என்று செருப்பை கெடுத்து பெரிய ரணகளம் பண்ணிக் கொண்டிருக்கிறார்.

மேடையில் ஒரு பக்கம் கலவரம் நடந்து கொண்டிருக்க கதிர் வரவில்லையே என்று எஸ் கே ஆர் குடும்பத்தினர் அனைவரும் நாங்கள் இதற்கு மேல் பொறுக்க முடியாது என்று கோபத்தோடு பிரச்சனை செய்ய, அவர்களை குணசேகரன் சமாளிப்பது போன்றே பிரச்சனையை மேலும் கூட்டிக் கொண்டிருக்கிறார். அந்தப் பக்கமாக கதிர் எழுந்திரிக்கவில்லை என்று நந்தினியும் ரேணுகாவும் மேடைக்கு ஓடிவர ஞானம் நான் போய் பார்க்கிறேன் என்று சொல்ல,, ஞானம் என்னை விட்டுப் போக கூடாது நீ இங்கேயே இருக்கணும் என்று மீண்டும் நந்தினியை திட்டி குணசேகரன் அனுப்புகிறார்.
இந்த நிலையில் இன்றைய பிரமோ வில் ஒரு வழியாக குடித்துவிட்டு போதையில் விழுந்து கிடந்த கதிரை பட்டி டிங்கிரி எல்லாம் பார்த்து பட்டையும் போட்டு மேடைக்கு கூட்டிக் கொண்டு வர, நான் கையெழுத்து போட்டுக் கொடுக்க மாட்டேன் என்று கதிர் வாக்குவாதம் செய்ய, அதற்கு நந்தினி நீங்க உழைச்ச வாங்குன கம்பெனியா இது? என்று கேட்கிறார். அதற்கு குணசேகரன் ஏய் என்னம்மா என்னை குத்தி காட்டுற மாதிரி பேசுற என்று சொல்கிறார்.

இந்த நிலையில் ஜனனி கொஞ்சம் அமைதியா இருங்க என்று எல்லாரிடமும் கெஞ்சி கொண்டிருக்கிறார். அப்போது நான் கேட்டது எனக்கு கிடைக்கணும்மா என்று குணசேகரன் தன்னுடைய அம்மாவிடம் பேசிக்கொண்டு, என்னம்மா முழிக்கிற அப்பதான் நான் திருப்தியா நிச்சய வேலை நடக்கும் என்று சொல்லிக் கொண்டு, என்ன அப்பத்தா ஒன்னும் தெரியாதது மாதிரி உட்கார்ந்துட்டு இருக்க என்று கேட்க, அதற்கு அப்பத்தா எதுவும் பேசாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications