இனி 40% ஷேர் இல்லை ஜனனி செய்து வைத்த சிக்கல்..தவிக்கும் குணசேகரன்..இனி நடக்கப் போவது இதுதான்
சென்னை: அப்பத்தா குணசேகரனுக்கு எழுதிக் கொடுத்த 40% ஷேரில் ஜனனி புது சிக்கல் வைத்திருக்கிறார்.
ஜனனி சொன்ன வார்த்தையை கேட்டு குணசேகரன் அதிர்ச்சி அடைகிறார்.
ஜனனிக்கு ஆதரவாக குணசேகரனுக்கு தெரியாமல் ஈஸ்வரி உதவி செய்கிறார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் யாரும் எதிர்பார்க்காத பல திருப்பங்கள் இன்றைய எபிசோடில் நடக்க இருக்கிறது. அப்பத்தாவிடம் இருக்கும் 40% ஷேர் வாங்கிக் கொள்வதற்காக தான் குணசேகரன் ஆதிரை அருண் திருமணத்திற்காக சம்மதித்து கடைசி நேரத்தில் மண்டபத்தில் வைத்து அப்பத்தாவை செண்டிமெண்டாக பேசி எழுதி வாங்கி இருந்தார்.
40% நமக்கு வந்து விட்டது என்பதால் தான் தைரியமாக எஸ் கே ஆர் குடும்பத்தை அவமானச் செய்து வீட்டுக்கு வந்த அரசுவை அடித்து வெளியே அனுப்பி மலேசியாவில் இருந்து திரும்பி வந்த கரிகாலன் அப்பாவை குடும்பத்தோடு வீட்டுக்கு வரவைத்து சம்பந்தம் பேசி இருக்கிறார். கரிகாலனுக்கு தான் ஆதிரையை திருமணம் செய்து வைக்கப் போறேன் என்று மீண்டும் அனைவரும் முன்னிலையிலும் வீட்டில் பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார்.

ஒரு பக்கம் அப்பத்தாவின் மருத்துவ செலவுக்காக பணம் இல்லாமல் ஜனனி ஒவ்வொருத்தரிடமாக கேட்டுக் கொண்டிருக்க கடைசியில் எல்லோரும் இல்லை என்று சொன்னபோது ஈஸ்வரி தன்னிடம் இருக்கும் அப்பாவின் சொத்து டாக்குமெண்டை அடமானம் வைத்து அப்பத்தா மருத்துவ செலவு பார்க்கலாம் என்று குணசேகரனுக்கு தெரியாமல் டாக்குமெண்ட் எடுத்து வர முடிவு செய்கிறார்.
இந்த நிலையில் அவமானப்பட்ட அரசு குணசேகரனுக்கு எதிராக புது முயற்சி எடுக்கிறார். அதற்கு ஜனனியும் நான் உதவுகிறேன் என்று கூறியிருக்கிறார். இந்த நிலையில் இன்றைய ப்ரோமோவில் நீங்க நினைக்கிற மாதிரி உங்களுக்கு இனி அந்த 40% ஷேர் கிடைக்காது என்று ஜனனி கூறுகிறார்.
ஜனனி கையில் பைலோடு கிளம்புவதை பார்த்து அதிர்ச்சியான குணசேகரன் எம்மா ஏய்... எங்கம்மா போற? அவ என்னம்மா சொல்லிட்டு போறா? என்று அதிர்ச்சியோடு கேட்டுக் கொண்டிருக்கிறார். மறுபக்கம் ஈஸ்வரி பூஜை அறையில் இருந்த பைலை எடுத்துக் கொண்டு ஜனனியிடம் தம்ஸ் அப் காட்டுகிறார். இதனால் இன்றைய எபிசொட்டில் பிரச்சனை பெரிதாக வெடிக்க இருக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications